ஞாயிறு, 24 ஜூலை, 2016

தர்காவை கட்டியவர்களே அதை உடைத்தெறியும் முயற்சியில்


‪#‎படத்தில்‬ இருக்கும் (முகம் காட்டாமல்)நபர் 22-7-16 அன்று இரவு தொழுகைக்கு பின் களியக்காவிளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மர்ஹசில் நம்மை தொடர்பு கொண்டார் 
இவர் குமரிமாவட்டத்தின் கடலோர கிராமங்களில் ஒன்றான ஒரு ஊரில். வசிக்கும் சகோதரர் ஆவார் இவ்வூரில் ஒரு 60 முஸ்லிம் குடும்பங்கள் குடியிருக்கும் ஒரு சிறிய கிராமம் ஆகும். 
இவர் கூறிய தகவல் என்னவெனில் 
1985,அல்லது 1987,வாக்கில் இவரது ஊரில் உள்ள பள்ளிவாசலில் ஒரு இமாம் இருந்திருக்கிறார் அவர் ஒருநாள் ஒரு கனவு கண்டதாகவும் அதில் முஹைய்தின் ஷேக் வந்ததாகவும், அவர் தனக்கு ஒரு தர்கா கட்டவேண்டும் என்று கூறியதாக அடித்து விட்டிருக்கார் உடனே ஊர்கார்ர்களும் படத்தில் உள்ள நபரும் சேர்ந்து ,அடுத்தநாள் மதியத்திலிருந்து அஸர் தொழுகைக்குள் சுட சுட ,வெறும் கம்பியாலும் சிமென்டாலும் வெறுமனே எந்த ஒன்றும் இல்லாமல் சமாதி ஒன்றை கட்டியிருக்கிறார்கள் ,அன்று முதல் அது தர்காவாக இன்று வரை இருந்து கொன்டு இருக்கிறது ,மாந்திரீகம் ,செய்வினை ,தாயத்து தகடு ,பேய் ,பிசாசு விரட்டுதல் ,குழந்தை இல்லாதோருக்கு குழந்தை வரம் என்று அனைத்து பித்தலாட்டங்களையும் ,செய்து வருகிறார்கள் ,இவையனைத்தும் முஹைய்தீன் அவுலியா அருள்பாலிக்கிறார் என்ற நம்பிக்கையுடன் இஸ்லாத்திற்க்கு எவ்வித சம்பந்தமும் இல்லாத மூட நம்பிக்கைகளை அரங்கேற்றி கொண்டு இருக்கிறார்கள்
இன்று அதே நபர் இஸ்லாத்தை அறிந்து கொண்டு ,ஏகத்துவ்வாதியாக ,தன் குற்றத்தை உணர்ந்து தன் கையால் கட்டிய சமாதியை தானே உடைத்தெறிய வேண்டும் ,என்ற ஆவலை வெளியிட்டார் ,அன்று கனவில் கண்டதாக போய் கூறிய இமாம் இன்றும். உயிரோடு இருப்பதாகவும் அவரை சென்று சந்தித்ததாகவும் ,அப்போது அவரால் பேசமுடியாமல் தலைகுனிந்து நின்றதாகவும் தெரிவித்தார் ..இன்றும் அவர் தாயத்து தகடு என்று கேரளாவில் ஒரு தர்காவில் வியாபாரத்தை ஓட்டிகொண்டிருக்கார் எனவும் மற்றொருமுறை அவரை சந்தித்து வீடியோ ஆதாரங்களோடு வருவதாக கூறினார் நமது நிர்வாகிகளும் அவருடன் செல்வதாக அவருக்கு வாக்கு கொடுத்தார்கள்
அல்ஹம்துலில்லாஹ்
மாநபிவழி நடப்போம்
இன்ஷாஅல்லாஹ்
தர்காவை கட்டியவர்கள் அவர்கள் கையாலையே அதை தகர்த்து எறிவார்கள்
‪#‎இறைவன்‬ பெரியவன் (அல்லாஹ் அக்பர்)