பாசிச கொள்கையை கடைபிடிக்கும் பாஜக, அவசரநிலையை பற்றி பேச அருகதையில்லை என திமுகவை சேர்ந்த மக்களவை உறுப்பினர் ஆ.ராசா கூறியுள்ளார்.
மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது திமுகவை சேர்ந்த மக்களவை உறுப்பினர் ஆ.ராசா பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் மக்களவையில் ஆ.ராசா பேசினார். அப்போது; பெரியாரின் திராவிட மண்ணில் இருந்து வந்துள்ளேன். திராவிட மண்ணில் பாசிச பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டிவிட்டார்கள். திராவிட கொள்கை ஏன் தேவை என்பதை பாஜகவினர் உணர வேண்டும். பாசிச கொள்கையை கடைபிடிக்கும் பாஜகவுக்கு அவசரநிலை குறித்து பேச எந்த உரிமையும் இல்லை. நாடாளுமன்றத் தேர்தலில் பாசிசத்துக்கு எதிராக தமிழ்நாடு மக்கள் 40 இடங்களை இந்தியா கூட்டணிக்கு வழங்கி உள்ளனர்.
240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக பெரும்பான்மை எப்படி என்று கூறமுடியும்? பாஜக அரசு நினைப்பதை அவர்களாக சொல்வதில்லை; குடியரசுத் தலைவர் சபாநாயகர் மூலம் சொல்கிறார். அவசரநிலை பிரகடனத்தை அமல்படுத்தியதற்குகாக பலமுறை மன்னிப்பு கேட்டார் இந்திராகாந்தி. அவசரநிலையை தற்போது பாஜக அரசின் செயல்பாட்டுடன் ஒப்பிட முடியாது. பாஜக அரசின் செயல்பாடுகள் அனைத்தும் சர்வாதிகாரம். பாசிச கொள்கையை கடைபிடிக்கும் பாஜக, அவசரநிலையை பற்றி பேச அருகதையில்லை எனவும் கூறினார்.
source https://news7tamil.live/bjp-which-adheres-to-fascism-is-not-ready-to-talk-about-emergency-dmk-mp-a-raza-speech.html