திங்கள், 4 ஜூலை, 2016

அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி: உயர்நீதிமன்றம் உத்தரவு

அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்புகள் தொடங்குவது குறித்த சாத்தியகூறுகளை நான்கு மாதத்தில் ஆராய்ந்து முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன்கவுல், நீதிபதி மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை தொடங்க வேண்டும் என்ற முத்துக்குமரன் குழு பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் அரசின் விருப்பம் குறித்து, நான்கு மாதத்தில் முடிவு எடுக்க நீதிபதிகள் அரசுக்கு உத்தரவிட்டனர்.

Related Posts: