திங்கள், 4 ஜூலை, 2016

யாராவது தொந்தரவு செய்தால் வீட்டில் பெற்றோரிடம் சொல்லுங்கள்..

பொம்பள பிள்ளன்னா நாலு பேரு பின்னாடி சுத்துவான்.. அதுவும் மெட்ராஸ்'ல சொல்லவே வேண்டாம்..
அதான் சுவாதி அசால்டா இருந்துச்சி.. பையன் கிராமத்து பையன்.. சுவாதியை எப்படியாவது அடையனும்னு ஆசைப்பட்டான்.. முடியல என்றதும் ஏமாற்றத்தில் வெட்டிட்டான்..
அந்த பொண்ணு அவனுக்கு அளவுக்கு மீறி இடம் கொடுத்ததன் விளைவு அவள் உயிரை பலிவாங்கிவிட்டது ..
சுவாதியோட முடிவு பெண்களுக்கு ஒரு பாடம்.. பேஸ்புக்கில் தெரியாதவனோட பெண்கள் செய்திகளை பரிமாறவேண்டாம்.. நட்பிலும் இணைக்க வேண்டாம்..
யாராவது தொந்தரவு செய்தால் வீட்டில் பெற்றோரிடம் சொல்லுங்கள்.. ஆரம்பத்திலேயே தட்டி வெச்சா இது போல அசம்பாவுத்தை தடுக்கலாம்..
காவல்துறை இனியாவது பெண்களுக்கு எதிரான புகார்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்..
பெண்களை மதிக்க வேண்டும்.. நேர்மையாக வாழவேண்டும் என்ற
நல்ல சிந்தனைகளை மாணவர்களுக்கு ஒன்றாம் வகுப்பு முதலே ஊட்ட வேண்டும்..
நாங்கள் படித்த காலத்தில் வாரம் ஒருநாள் எங்கள் தமிழ் வாத்தியார் நன்னெறி கதைகளை சொல்லி நல்ல சிந்தனைகளை எங்களுக்கு ஊட்டியுள்ளார்..
இந்த காலத்து வாத்தியார்கள் அதே போல மாணவர்களுக்கு நன்னெறி கதைகளை சொல்லி வளர்த்தால் இனி ஒரு ராம்குமார் இங்கு உருவாக மாட்டான் !

Related Posts: