ஞாயிறு, 17 ஜூலை, 2016

மக்களை கொன்று குவிக்கும் மத்திய அரசின் அடக்குமுறைக்கு எதிராக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்..

காஷ்மீர் மக்களை கொன்று குவிக்கும் மத்திய அரசின்
அடக்குமுறைக்கு எதிராக தமிழ்நாடு தவ்ஹீத்
ஜமாஅத் கண்டனம்..
ஜம்மு-காஷ்மீரில், ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தின் முக்கிய தலைவரான புர்ஹான் வானி, போலீசாரால் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, மாநிலத்தின் பல பகுதிகளிலும் கலவரம் மூண்டுள்ளது. ராணுவம் அதிகளவில் குவிக்கப்பட்டு, ஒருவாரத்திற்கு மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையிலும் போராட்டங்கள் ஓய்ந்தபாடில்லை. இதுவரை, ராணுவ-பொதுமக்கள் மோதலில், சுமார் 37 இளைஞர்கள் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.
போராட்டக்காரர்களை ஒடுக்குகிறோம் என்கிற பெயரில் பொது மக்கள் மீது கொடூர தாக்குதலை ராணுவம் நிகழ்த்தி கொண்டிருக்கிறது.
அவர்களை ஒடுக்க சர்வசாதாரணமாக துப்பாக்கிச்சூடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
உயிரிழப்புகள் அதிகாமானதால், தற்போது பெல்லட் துப்பாக்கிகளை பாதுகாப்பு படையினர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த வகை துப்பாக்கிகளால், உயிரிழப்புகள் ஏற்படாது. ஆனால், பார்வை பறிபோகும். இதுவரை, நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாக செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பெல்லட் துப்பாக்கி குண்டுகள் கண்ணை தாக்கிய போது, தலையில் தீப்பற்றி எரிந்தது போல் உணர்வு ஏற்பட்டதாக பாதிக்கப்பட்ட இளைஞர்கள் கூறுகின்றனர். இந்த குண்டுகள் உடலை சல்லடையாக ஆக்கும் ஆற்றல் உள்ளது.
பாலஸ்தீனர்களை கொடூர ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கி வரும் இஸ்ரேல்தான், முதன்முதலாக இத்தகைய பெல்லட் துப்பாக்கிகளை பயன்படுத்த துவங்கியது. இந்த பெல்லட் துப்பாக்கி என்பது 500 உலோக துண்டுகள் மற்றும் துப்பாக்கி துகள்களை உள்ளடக்கியது. துப்பாக்கி வெடிக்கும்போது உலோக துண்டுகள் சிதறிப் பாய்ந்து, 10 மீட்டர் தூரத்தில் இருப்பவர்களுக்கும் ஆழமான காயத்தை ஏற்படுத்தும்.
இஸ்ரேலின் அதேபாணியில், தற்போது மத்திய அரசும் போராட்டக்காரர்களுக்கு எதிராக பெல்லட் துப்பாக்கியை பயன்படுத்தி வருகிறது.
உள்நாட்டு மக்களின் உயிரை எடுப்பதும், அவர்களை குருடாக்குவதும், ஊனமாக்குவதுமா அரசின் வேலை? ஆனால் இதனை பாஜக ராணுவத்தின் துணை கொண்டு செய்து கொண்டிருக்கிறது.
அநியாய மனப்போக்குடன் நடந்துகொள்ளும் மத்திய பா.ஜ., அரசின் செயல்பாடுகள் மிகவும் கண்டனத்துக்குரியது.
மத்திய அரசின் இந்த அநியாய போக்கை கண்டித்து, வரும் புதன் கிழமை மாலை 4 மணிக்கு சென்னை சேப்பாக்கம் , விருந்தினர் மாளிகை அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில்
போராட்டம் நாடை பெரும்.
என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
இப்படிக்கு
மு.முஹம்மது யூசூப்
மாநில பொதுச்செயலாளர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
ஊடக பொறுப்பு.
9789030302