புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள நம்பம்பட்டி வளைவு அருகே நேற்று இரவு 23.07.2016 அறந்தாங்கயிலிருந்து திண்டுக்கல்லுக்கு மாட்டு எலும்பு லோடு ஏற்றிவந்த லாரி திடிரென டிரைவரின் கட்டுப்பாட்டை கவிழந்தது.இதில் லாரி ஒட்டிவந்த லாரிடிரைவர் அறந்தாங்கியைச்சார்ந்த மாரிமுத்து 50 , என்பவர் பலத்த காயங்களுடன் சாலையோரம் கிடந்தார்.பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பலத்த காயமடைந்த லாரி டிரைவரை மீட்டு அவருக்கு சம்பவ இடத்திலேயே முதலுதவி அளித்து பின்னர் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தனுது பாதுகாப்புக்காக வந்த வாகனத்தில் அனுப்பி வைத்தார். மேலும் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்து அங்குள்ள மருத்துவகுழுவினரை தயார் நிலையில் இருக்க வைத்து உரிய சிகிச்சை அளிக்க உத்திரவிட்டார்.இதனைகண்ட அப்பகுதி மக்கள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர்க்கு நன்றி தெரிவித்தனர்.

