காஷ்மீரில் ராணுவத்தினரின் அத்துமீறல்கள் பற்றிய நிகழ்வுகளை பதிவு செய்த “ப்ளட் லீவ்ஸ் இட்ஸ் ட்ரைல்” என்ற ஆவணப்படம் சென்னையில் திரையிடப்பட்டது. டெல்லியைச் சேர்ந்த இபாத் பாத்திமா இயக்கி உள்ள இந்த படத்தை, ‘தமிழ் ஸ்டுடியோ படச்சுருள்’ மாத இதழ் திரையிட்டது.
ஏற்கனவே இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களைப் பற்றிய ஆவணப்படத்தை இயக்கி உள்ள பாத்திமா, கடந்த ஒன்பது ஆண்டுகளாக அரசின் கெடுபிடிகள், ராணுவத்தின் அச்சுறுத்தல்கள், பல இடையூறுகளைத் தாண்டி இந்த படத்தை இயக்கி உள்ளார்.
திரையுலகினர், கலைத்துறை, மாணவ மாணவிகள் என பல தரப்பினரும் இந்த திரையிடலுக்கு வந்திருந் தனர். வழக்கமாக நாம் பார்த்து பழகிய ஜம்மு காஷ்மீரின் பனிப்பொழிவு பரவசங்கள், அழகு வருணனைகள் என்ற பிம்பங்களை தகர்த்து அத்துமீறலில் தொலைந்துபோனவர்களுக்காக கதறும் உறவுகள், சுதந்திரங் கள், உரிமைகளுக்காக போராடும் மக்கள் கூட்டம், ராணுவத்தின் அடாவடிகள், அங்கு நிலவும் அரசியல் சூழல்கள் என்று குருதி பொழியும் காஷ்மீரை படம் பிடித்திருக்கிறது இந்த ஆவணப்படம்.
ஏற்கனவே இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களைப் பற்றிய ஆவணப்படத்தை இயக்கி உள்ள பாத்திமா, கடந்த ஒன்பது ஆண்டுகளாக அரசின் கெடுபிடிகள், ராணுவத்தின் அச்சுறுத்தல்கள், பல இடையூறுகளைத் தாண்டி இந்த படத்தை இயக்கி உள்ளார்.
திரையுலகினர், கலைத்துறை, மாணவ மாணவிகள் என பல தரப்பினரும் இந்த திரையிடலுக்கு வந்திருந் தனர். வழக்கமாக நாம் பார்த்து பழகிய ஜம்மு காஷ்மீரின் பனிப்பொழிவு பரவசங்கள், அழகு வருணனைகள் என்ற பிம்பங்களை தகர்த்து அத்துமீறலில் தொலைந்துபோனவர்களுக்காக கதறும் உறவுகள், சுதந்திரங் கள், உரிமைகளுக்காக போராடும் மக்கள் கூட்டம், ராணுவத்தின் அடாவடிகள், அங்கு நிலவும் அரசியல் சூழல்கள் என்று குருதி பொழியும் காஷ்மீரை படம் பிடித்திருக்கிறது இந்த ஆவணப்படம்.
ராணுவத்தினரால் போடப்பட்ட முள்வேலி கம்பிகளுக்குள் இருக்கும் நாய்க்குட்டி, துப்பாக்கிச் சூட்டில் சிதைந்த சுவரின் அருகே நின்று பேசிக்கொண்டிருக்கும் சிறுவர்கள் என்று டிசம்பர் 18, 2007ல் இருந்து படம் பயணிக்க தொடங்குகிறது. ராணுவத்தினர் அத்துமீறி வீடு நுழைந்து உடைமைகளை சூறையாடியதையும், தங்களது பிள்ளைகளை, கணவன்மார்களை, உறவுகளை விசாரணை என்ற பெயரில் அடித்து இழுத்துச் சென்றதையும், அவர்களில் பலர் இன்று வரை வீடு திரும்பாததையும், பலர் கொல்லப்பட்ட துயரங்களையும் அவர்களின் புகைப்படங்களை கையில் வைத்துக் கொண்டே சொல்லி அழுகின்றனர் வீட்டு பெண்கள். அந்த சம்பவங்களை எல்லாம் பதிவு செய்த நாளிதழ்களையும் சேகரித்து வைத்து காட்டுகின்றனர்.
நீதிமன்ற வளாக வாசல்கள், பொது பூங்காக்கள், சாலையோரங்களில் ‘சுதந்திரம் எங்கள் உரிமை. எங்களை சுதந்திரமாக இருக்க விடுங்கள், உங்களால் தொலைந்த எங்கள் உறவுகள் எங்கே’ என்று குழந்தைகள், முதியவர்கள், ஆண்கள், பெண்கள் என்று அனைவரும் அரசுக்கும், ராணுவத்துக்கும் எதிராக போரட்டங்கள் நடத்துகின்றனர்.
மேலும் நகரின் சுவர்களில் ராணுவத்துக்கு எதிரான வாசகங்களையும், தங்களது உரிமை வாசகங்களையும் எழுதி உள்ளனர். நகரெங்கும் எல்லா இடங்களிலும் ராணுவத்தின் ஆக்கிரமிப்புதான். எல்லா இடங்களிலும் மக்கள் பரிசோதிக்கப்படுகின்றனர். தங்களுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களை அடித்து இழுத்து செல்லும் ராணுவத்திடம் மக்கள் நேரடியாக வாதம் செய்து போராடுகின்றனர்.
சாலைகளில் செல்லும் ராணுவ வண்டிகள், ராணுவத்தினர் மீது சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள், ஆண்கள் அனைவரும் சரமாரியாக கற்களை வீசி, இரும்பு கம்பியால் அடித்து தங்களது உரிமை கோபங்களை வெளிக்காட்டுகின்றனர். அதே நேரத்தில் சிறுவர்கள் என்றும் பாராமல் ராணுவத்தினர் அடித்து சித்ரவதை செய்கின்றனர்.
மலைகளிலும், புதர்களிலும் ரத்தக்கறைகளுடன் கிடக்கும் ஆடைகள், கம்பளிகள், காலணிகள் போன்றவற்றை வைத்துதான் தொலைந்த உறவுகள் கொல்லப்பட்டதை உறுதி செய்யும் மக்கள் அழுது புலம்புகின்றனர். வருடத்திற்கு ஒருமுறை பொது இடங்களில் வைக்கப்படும் புகைப்படக் கண்காட்சியில் இருக்கும் இறந்தவர்களது படங்களை வைத்து அடையாளம் கண்டு கொள்கின்றனர் சொந்தங்கள். இது தவிர மதங்களைக் கடந்து, ஜோசியத்தின் மூலமாகவும் தொலைந்தவர்களை தேடி பரிதவிக்கின்றனர். துப்பாக்கிச் சூட்டின் சத்தங்கள் நடுவேதான் நாற்று நடவுகள், விவசாயங்கள், ரத்தம் படிந்த சாலைகளில் போக்குவரத்துகள் நடக்கின்றன.
காஷ்மீர் மக்களின் திருமண நிகழ்வுகள், சடங்குகள், வாழ்வின் ஒவ்வொரு நகர்வுகள், சந்தோஷங்கள், துக்கங்கள் என்று எல்லாவற்றிலும் தொலைந்த சொந்தங்கள் திரும்ப வர வேண்டும், சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்ற பாடல்களைத்தான் பாடுகின்றனர். இளைஞர்கள் நெருப்பு மூட்டி ‘எங்களுக்கு இந்தியாவும் வேண்டாம், பாகிஸ்தானும் வேண்டாம் எங்களுக்கு சுதந்திரம்தான் வேண்டும்’ என்று கொள்கைப் பாட்டு பாடுகின்றனர்.
இப்படி வாழ்வின் ஒவ்வொரு நாளையும் போராட்டமாக, பரிதவிப்பாக, பயமாக, கோரமாக கடக்கும் காஷ்மீர் மக்களின் வாழ்வியல்கள், ராணுவத்தின் அத்துமீறிய போக்குகள் என்று குறியீடுகள் மூலமாகவும் ஒவ்வொரு காலகட்டமாக படம் பயணிக்கிறது. படத்தின் பல இடங்களில், பாத்திமாவின் காமிராவை நோக்கி ‘படம் எடுக்கக்கூடாது’ என்று ராணுவத்தினர் எகிறும் காட்சிகளும் படத்தில் ஆவணமாகி உள்ளன.
1947- ம் ஆண்டு அக்டோபர் 26-ல், ஜம்மு காஷ்மீர் பகுதியை இந்தியாவுடன் இணைக்கும் ஒப்பந்த உடன்படிக்கைகள் உறுதியான அன்றிலிருந்து இன்று வரை, காஷ்மீரில் நிலவக்கூடிய அரசியல், ராணுவ பிரச்னைகளுக்கு தீர்வு கிடைத்தபாடில்லை. பாகிஸ்தானும், சீனாவும் ஜம்மு காஷ்மீரை ‘இந்தியாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர்’ என்றுதான் குறிப்பிடுகின்றன.
இப்படியான அரசியல் சார்ந்த பல ஆவணப்படங்களை பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தொடர்ந்து திரையிட்டு ஆசிரியர்களும், மாணவர்களும் ஒன்றாக அமர்ந்து பார்த்து கலந்து பேசினால்தான் பாடங்களில் சொல்லப்பட்ட சம்பவங்களைத் தாண்டி சமூகத்தையும், மக்களையும், சமகால அரசியல்களையும், இனம் மொழி பிரச்சனைகளையும் நுணுக்கமாக புரிந்து கொண்டு செயல்பட முடியும்.
திரைத்துறையினர், ஊடக மாணவர்கள்தான் இம்மாதிரியான அரசியல் ஆவணப்படங்களை பார்க்க வேண்டும் என்பதைத் தாண்டி, அனைத்து அரசியல் அமைப்பினர்களும் இப்படியான பல ஆவணப்படங்களை கண்டிப்பாக பார்க்க வேண்டும்.
http://kaalaimalar.net/kashmir-in-blood/