இந்திய ஹாக்கி முன்னாள் வீரர் முகமது சாகித் கல்லீரல் பாதிப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 56.(20/07/2016)
இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் ஹாக்கி வீரரான முகமது சாகித், சில நாள்களுக்கு முன்பு கல்லீரல் கோளாறு காரணமாக, ஹரியானாவின் குர்கானில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், சாகித்தின் உடல்நிலை மோசமானதை அடுத்து, உடல் உறுப்புகள் செயல் இழந்ததால் உயிரிழந்தார். அவரது மருத்துவ செலவுக்காக, மத்திய விளையாட்டுத்துறை 19 லட்சம் ரூபாயை அளித்திருந்தது.
கடந்த 1980-ஆம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அணியில் முகமது சாகித் இடம்பெற்றிருந்தார். ஆசிய விளையாட்டில் இரு முறை பதக்கம் வென்ற அணியிலும் விளையாடி இருந்தார். மத்திய அரசின் அர்ஜூனா, பத்ம ஸ்ரீ விருதுகளையும் முகமது சாகித் பெற்றிருக்கிறார்.