நாடாளுமன்றத்தின் பணிகள்(Functions of Parliament):
* சட்டம் இயற்றுதல், நிர்வாக மேற்பார்வை, வரவு - செலவு அறிக்கை நிறைவேற்றுதல், பொது மக்களின் குறைகளைப் போக்குதல், முன்னேற்றத் திட்டங்களை உருவாக்குதல், பன்னாட்டு உறவுகளைப் பராமரித்தல் போன்ற பணிகளை ஆற்றி வருகிறது.
* சட்டமியற்ற மசோதா நாடாளுமன்ற இரு அவைகளின் ஒப்புதலைப் பெற வேண்டும்.
* நிதி மசோதாவைப் பொறுத்தவரை மக்கள் அவையின் ஒப்புதலே முடிவானது.
* நிதி மசோதாக்கள் மாநில அவையினால் 14 நாட்கள் மட்டுமே தாமதப்படுத்தலாம்.
* சட்டங்கள் இயற்றும் அதிகாரங்களோடு நாடாளுமன்றத்திற்கு அரசியலமைப்பு திருத்தம் கொண்டு வரும் அதிகாரமும் வழங்கப்பட் டுள்ளது