சனி, 2 ஜூலை, 2016

மத துவேஷங்களை பரப்பியவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள்

மத துவேஷங்களை பரப்பியவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள்
1. Section 153A(1) -பேச்சாலோ எழுத்தாலோ அல்லது சைகையாலோ, மத இன மொழி சாதி சமய சம்பந்தமான விரோத உணர்ச்சிகளைத் தூண்டி விட முயற்சி செய்வது குற்றமாகும். குற்றத்தினை புரிபவர்களுக்கு 5 ஆண்டு வரை சிறைக்காவலுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.
2. Sec 153B(1) , - சமய, மத, மொழிக்கு விரோதத்தை பரப்புதல்-இதற்கு-மூன்று ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
3. Sec 295A- மதவழிபாட்டில் ஈடுபடுவோரின் உணர்ச்சிகளை சீற்றமுற்று எழச் செய்ய வேண்டும் என்ற தீய கருத்துடன் வேண்டுமென்றே பேச்சாலோ, எழுத்தாலோ, அல்லது ஜாடையாலோ அவர்கள் மதத்தை அல்லது மத உணர்வுகளை புண்படுத்துவதும் அல்லது புண்படுத்த முயற்சி செய்வதும் குற்றமாகும். 3 ஆண்டு சிறைத்தண்டனை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
4.Section-66A Of The Information Technology Act, 2000 ,- எலக்ட் ரானிக் மீடியாக்களில் தவறான, சமூகத்தை சீர்குலைக்கும், பொய்யான, மத துவேஷங்களை பரப்புதல்- இதற்கு மூன்று ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம்.
*ஆகிய பிரிவுகளிலான வழக்கினை Section-200 of Criminal Procedure Code துணையோடு அருகில் உள்ள குற்றவியல் நீதிமன்றங்களில் யார் வேண்டுமானாலும் Private வழக்குகளை தாக்கல் செய்யலாம்.
நன்றி வழக்கறிஞர்
Musthaqeem Raja
மமக வழங்கறிஞர் பிரிவு