வெள்ளி, 18 நவம்பர், 2016

ரூபாய் நோட்டு விவகாரம்... மத்திய அரசின் கோரிக்கைக்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு தொடர்பாக பல்வேறு நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ள வழக்குகளை விசாரிக்க தடை விதிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கைக்கு உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
பழைய நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை எதிர்த்து நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட நீதி மன்றங்கள் மற்றும் மாநில தலைமை நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை விசாரிக்க தடைவிதிக்க வேண்டும் என்று மத்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மத்திய அரசின் இந்த கோரிக்கையை மறுத்த உச்ச நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் உயர் நீதிமன்றங்களில் வழக்கு நடந்தால் தான் உள்ளூர் பிரச்சனைகள் தெரிய வரும் எனவும் கூறியுள்ளது. மேலும், இது தொடர்பான பொதுநல மனு மீதான வழக்கு விசாரணையை வரும் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Posts: