Breaking News
Loading...
சனி, 26 நவம்பர், 2016

Info Post
..அதில் கருப்புப் பணத்திற்கு எதிரான நடவடிக்கை என்று வெங்கடராமன் நிதி அமைச்சராக இருந்த காலத்திலிருந்தே இம்மாதிரியான படாடோப நிர்வாக நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. அன்றைய காலம் தொட்டே நம் நாட்டில் தணிக்கையாளர் தொழில் என்பது தொழில்முறையாக கருப்புப்பணத்தை வெள்ளையாக கணக்கு காட்டும் உத்திகளை கையாளும் தொழில் என்றாகிவிட்டது...

இந்தியாவில் வாய்ப்புகள் நசிந்துவிட்டதால்தான் சுபிக்ஷம் குன்றியுள்ளது என்ற அடிப்படையில்தான் மன்மோகன்சிங் அன்றைய பிரதமர் நரசிம்மராவுடன் தளர்த்தப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளைக் கையாண்டு இந்தியப் பொருளாதாரத்தை உலகத்தோர் கட்டுப்பாட்டில் விட்டார். இன்றைய demonetization போல் அதுவும் பல தடாலடி மாற்றங்களை ஏற்படுத்துவது போன்ற மாயையை ஏற்படுத்தியதால் அன்று அதனால் வேலை இழந்து, வாய்ப்பு சிதைந்து, வாழ்வாதாரம் குன்றி, சம்பளம் குறைந்து அல்லலுற்றவர்களை காங்கிரஸ் அபிமானிகள் உலகத்தரமற்றவர்கள் (இன்று எதிர்ப்பவர்கள் அனைவரும் தேசத்துரோக கருப்புப்பண ...) என்று எள்ளிநகையாடினார்கள். இந்தியா அபரிமிதமாக வளர்கிறது என்ற புள்ளிவிவரங்களைக் காட்டி இந்தியாவால் பன்னாட்டு நிறுவனங்கள் கொழுக்கின்றன என்ற உண்மை மறைக்கப் பட்டது. 

அதனை மெதுவாக உணர்ந்த இந்தியாவுக்கு பிரதமராக வந்த வாஜ்பாயும் பன்னாட்டு நிறுவனங்களை பேணித்தான் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு என்று அகண்ட சாலைகளைக் கொண்டு இந்தியாவை இணைத்து இந்தியா ஒளிர்கிறது என்று ஜம்பம் பேசி வீழ்ந்தார். மொத்தத்தில் தளர்தப்பட்ட பொருளாதாரக் கொள்கை என்பது வெறும் வாணிப சந்தை நிர்வாக உத்தி என்பதை மக்கள் புரிந்து கொள்ள விடாமல் ஒரு 30 வருட அரசியல் ...ஆனால் இதனால்தான் இன்று இந்தியாவில் கருப்புப் பணம் என்ற இன்றைய ஆட்சியாளர்களின் ஜோடனையும் அரசியல்தான். வரி கொடுக்காமல் கடலிலிருந்து உப்பெடுத்து வாணிபம் செய்வது நம் உரிமை என்று ஒரு குஜராத்தியர் போராட்டம் நடத்தியதும் பொருளாதார கல்வி அடிப்படையில் கருப்புப் பண கலாச்சாரத்தால்தான். எல்லாமே மலிவு/இலவசமாக என்ற இன்றைய தமிழக கலாச்சாரமும் கருப்புப் பண ஆதாரம்தான்.

அமெரிக்கா போன்ற கருப்புப் பணம் அதிக புழக்கமில்லாத நாட்டை பின்பற்றுவதால் கருப்பு பணம் ஒழிய வாய்ப்பு என்பது நமக்கு இன்று கிடையாது. ஏனென்றால் அது நாம் வாங்கிய கடனால் நமக்குள்ள நிர்பந்தம்...அதாவது இந்தியா இப்படி கட்டுப்பாடற்று இருப்பதுதான் அமெரிக்கா, ஜப்பான் போன்ற பொருளாதாரம் கட்டுக்கோப்புடன் இருப்பதற்கான காரணம். இங்கிலாந்து நம்மை ஆண்ட காலத்தில் இந்தியாவில் கருப்புப் பணம் அவ்வளவாக இல்லை என்பதால் நாம் நம் சுதந்திரத்தை அடகு வைத்து பார்க்கலாம் என்ற முயற்சியான உலகமயமாக்கல் என்பதில் அனைத்து உலக வளரும் நாடுகளும் சறுக்கி விட்டன. 

இந்தியாவில் கருப்புப் பணம் ஒழிய இந்தியர் 100% உவந்து கட்டும் நேரடி வரி மட்டுமே உள்ள நிதிநிலை கட்டுமானம் நிரமாணம் செய்வதே. இது தெரியாத அரசியல் தலைவர்கள் கிடையாது. ஆனால் என்ன....இதை செயல்படுத்தினால் அரசியல் ஆதாயமும் கிடையாது என்ற வேதனையை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.