திங்கள், 28 நவம்பர், 2016

மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் பேரணி

ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் பேரணி நடைபெற்றது.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் நடவடிக்கையால் பொதுமக்களும், பெண்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.  

மேலும் தவறான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்திய பொருளாதாரத்தை பிரதமர் மோடி அழித்துவிட்டதாகவும் குற்றம் சாட்டினார். இந்நிலையில், நாடு முழுவதும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவரும், முதலமைச்சருமான மம்தா பானர்ஜி தலைமையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. அப்போது, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி பேரணியாக சென்றனர்.