பிரேசிலின் கால்பந்து அணி வீரர்கள் பயணம் செய்த விமானம் விபத்துகுள்ளானது ரேடாரில் பதிவாகியுள்ளது.
பிரேசிலை சேர்ந்த உள்ளூர் கால்பந்து அணி வீரர்கள் உள்பட 81 பேர் பொலிவியாவிலிருந்து, கொலம்பியாவின் ரியோநெக்ரோ நகருக்கு விமானத்தில் பயணித்தனர். இந்நிலையில், போதிய எரிபொருள் இல்லாத காரணத்தால் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்து நடந்த இடத்தில் இருந்து 10 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
விமானங்களின் செயல்பாட்டை அனைத்து நாட்டு விமான துறைகளுமே ரேடார் மூலம் கண்காணிப்பது வழக்கம். அதேபோல, பிரேசில் வீரர்கள் பயணம் செய்த விமானம் ரேடாரில் பதிவாகயிருக்கும்.
விமானமானது கொலம்பியா வான் எல்லைக்குள் வந்ததும் அந்த நாட்டு ரேடார்களால் பதிவாகியிருக்கும். கொலம்பியா எல்லைக்குள் விமானம் திடீரென மாயமாகியுள்ளது. இந்த தருணம், ரேடாரில் பதிவாகியுள்ளது.
பதிவு செய்த நாள் : November 29, 2016 - 12:33 PM