சனி, 26 நவம்பர், 2016

பூமியைச் சுற்றும் இரண்டாவது நிலவு

நிலவைப் போன்று சிறிய அளவிலான கோள் ஒன்று பூமியைச் சுற்றி வருவதை நாசா விஞ்ஞானிகள் உறுதி செய்தனர்.
அமெரிக்க விண்வெளி மையமான நாசா விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் பூமி, சூரியனைச் சுற்றிவரும் போது அதனுடன் சேர்ந்து சிறிய அளவிலான கோளும் சுற்றி வருவது தெரியவந்தது. இந்த சிறிய அளவிலான கோளுக்கு 2016 எச்ஓ3 (2016 HO3) என்று பெயரிடப்பட்டுள்ள அந்த கோள், புவியின் மேற்பரப்பில் செயற்கைகோள்கள் நிலைநிறுத்தப்படும் தூரத்துக்கு அதிகமான தொலைவில் இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. இதேபோன்று பூமியைச் சுற்றி வந்த 2003 ஒய்என்107 (2003 YN107), 10 ஆண்டுகளுக்குப் பிறகு சுற்றுவட்டப் பாதையை விட்டு விலகியது. ஆனால், தற்போது கண்டுபிடுக்கப்பட்டுள்ள புதிய கோளானது அடுத்த நூறு வருடங்களுக்கு பூமியைச் சுற்றி வரும் என்று தெரிவித்தார்.