இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன், தென் கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுபகுதி, அடுத்த 48 மணி நேரத்தில் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று தெரிவித்தார்.
இந்த தாழ்வு நிலை தமிழகத்தை நோக்கி நகர்வதற்கு வாய்ப்புள்ளதால், தமிழகம், மற்றும் புதுச்சேரியில் மழைக்கும், கடலோர பகுதிகளில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார். வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.