இஸ்லாத்தை தழுவிய இளைஞர் படுகொலை!
கேரள மாநிலம் திருரங்காடியைச் சார்ந்த அனில்குமார் என்ற இளைஞர் 6 மாதங்களுக்கு முன்பு இஸ்லாத்தை தழுவி தனது பெயரை ஃபைஸல் என்று மாற்றிக்கொண்டார்.நேற்று முன் தினம் அவரது மனைவி மற்றும் 3 குழந்தைகள் இஸ்லாத்தை ஏற்றனர்.ஞாயிற்றுக்கிழமை வளைகுடா நாடு ஒன்றில் வேலைக்கு செல்லவிருந்தார். இந்நிலையில் நேற்று தனது மனைவியின் பெற்றோரை ரெயில்வே நிலையத்திலிருந்து அழைத்து வருவதற்காக அதிகாலையில் ஆட்டோவில் சென்ற ஃபைஸலை மர்ம நபர்கள் வெட்டி படுகொலைச் செய்துள்ளனர்.ஃபஜ்ர்தொழுகைக்கு சென்றவர்கள் மரணித்த நிலையில் கிடந்த ஃபைஸலின் உடலைக் கண்டு போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
இச்சம்பவத்தின் பின்னணியில் காவி ஹிந்துத்துவா தீவிரவாதிகள் சங்க்பரிவார சக்திகள் இருப்பதாக கருதப்படுகிறது.
இஸ்லாத்தை தழுவிய ஃபைஸலுக்கு ஏற்கனவே RSS தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.