புதன், 23 நவம்பர், 2016

பிக் பஜாருக்கு ’வங்கி’ அனுமதி தரப்பட்டது எப்போது? என்னதான் நடக்கிறது இங்கே?: சீதாராம் யெச்சூரி

பிக் பஜாரின் நிறுவனத்தின் ரீ டெயில் கடைகளில் நாளை மறு நாள் முதல் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி ரூ. 2000 பெற முடியும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் சீதாராம் யெச்சூரி,
“இங்கே என்ன நடக்கிறது? இந்த தனியார் நிறுவனத்துக்கு வங்கிக்கான அனுமதியை ரிசர்வ் வங்கி அளித்திருக்கிறதா? ஏன் இந்த தனியார் நிறுவனம் மட்டும்?” என கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளார்.
மேலும் அவர், இங்கே பணத்தை விநியோகிப்பது மட்டும் பிரச்னை இல்லை.  போதுமான அளவு பணத்தை வங்கிகளுக்கு மோடி அரசு அளிக்கவில்லை என்பதே பிரச்னை என்றும்
தனியார் நிறுவனங்களுக்கு பணத்தை அளிப்பதற்குப் பதிலாக, மோடி அரசு வங்கிகளுக்கு குறிப்பாக கிராமப்புற வங்கிகளுக்கு போதிய பணத்தை அளிக்க வேண்டும் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Related Posts: