யார் இந்த rangaraj pandey... ஓர் அலசல்!
‘ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டுச்சாம்’ என்பது தமிழர் பழமொழி. அப்படி ஒண்ட வந்த பிடாரி – ரங்கராஜ் பாண்டே.
இவரது முழுப்பெயர் ரங்கராஜ் பாண்டே ரகுநாத் ஆச்சார்யா. பீகார் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட பார்ப்பனர்.
இவரது தந்தை பீகாரிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலுக்கு அர்ச்சகராக வந்தவர். ரங்கராஜ் பாண்டே ரகுநாத் ஆச்சார்யா இங்கேயே பிறந்து வளர்ந்தவர். வெளிப்படையான ஆர்.எஸ்.எஸ்.காரர். ஆரம்பத்தில் ‘தினமலர்’ நாளிதழில் தலைமை நிருபராக குப்பை கொட்டிக்கொண்டு இருந்தவர்.
இவரை தந்தி டிவிக்கு பூபதி என்பவர்தான் நிகழ்ச்சித் தொகுப்பாளர் வேலைக்கு எடுத்தார். ஆனால் தனது உள்குத்து திறமையால் தந்தி டிவியின் செய்திப்பிரிவு ஆசிரியராகி விட்டார் ரங்கராஜ் பாண்டே. பணியிலிருந்து இவரால் வெளியே தள்ளப்பட்ட ஜெயசீலன், வேலையைவிட்டுப் போகும்போது, “இவனை மாதிரி ஒரு மோசமான ஆளை பார்த்ததே இல்லை” என்று மண்ணை வாரி தூற்றாத குறையாக சொல்லிவிட்டுப் போனார்.
தன்னுடன் வேலை பார்க்கிற யாராக இருந்தாலும், அவர்களை மட்டம் தட்டி, முன்னேற விடாமல் செய்வதில் ரங்கராஜ் பாண்டே கில்லாடி.
மை.பா.நாராயணன் என்பவர் தந்தி டிவியில் ‘கேள்விக்கென்ன பதில்’ என்ற நிகழ்ச்சியை நடத்தி வந்தார். அவரை ஓரங்கட்டி அந்த நிகழ்ச்சியை அபகரித்துக் கொண்டவர்தான் இந்த பாண்டே. அதுபோல், அங்கு வேலை பார்த்த மதிவாணனையும் இவர் ஓரங்கட்ட, “நான் வேலையை விட்டு போவதற்கு காரணமே பாண்டேதான்” என்று சொல்லிவிட்டு அவர் போனார்.
ரங்கராஜ் பாண்டே ஆர்.எஸ்.எஸ்.காரர் என்பதால், தந்தி டிவியில் பாரதிய ஜனதா கட்சி செய்திகளுக்கும், பிரமுகர்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்.
சமஸ்கிருத பார்ப்பன மதத்தினர் அல்லாத பிற மதத்தினரை மட்டம் தட்டுவதை தன் ஊடகப் பணியாக தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார்.
தமிழ்மொழி, தமிழினம், தமிழ்நாடு என்ற சொற்களெல்லாம் இவரது காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றின மாதிரி இருக்கும். தூக்குக்கயிறு முன்னால் நிறுத்தப்பட்டிருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் உயிரை காப்பதற்காக தீக்குளித்து உயிர் நீத்த தோழர் செங்கொடி பற்றி, “காதல் தோல்வியால் அவர் தீக்குளித்தார்” என்று செய்தி வெளியிட்ட மானங்கெட்ட ஜென்மம் இந்த ரங்கராஜ் பாண்டே.
இவருக்கு ‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சியின் ‘ஐட்டம் பாய்’ ஆன அர்னாப் கோஸ்வாமி போல் ஆக வேண்டும் என்று ஆசை. அதனால், பேட்டி கொடுக்க வரும் பிரமுகர்களை பேசவே விடாமல், முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு, இவரே பேசிக்கொண்டு இருப்பார்.
இதில் பாண்டேவை
குறை சொல்ல ஒன்றுமில்லை.
பாம்பு என்றால் விஷம் –
என்பதை பாண்டே
மட்டுமின்றி அகில இந்திய அளவில் பலரும் தற்போது நிரூபித்துக் கொண்டே வருகிறார்கள். ஆனால், தங்களது லாப வேட்டைக்காக ஊரறிந்த அயோக்கியனுக்கு மேடை அமைத்துக் கொடுக்கவும் தயங்காத தந்தி தொலைக்காட்சியின் ஊடக தர்மம் தான் நமது கவனத்துக்குரியது.
இன்னும் வரும் தந்தி சந்திக்கு...