மருத்துவர் ஜாகிர் நாயக் நிறுவனத்திற்கு தடை: மதசுதந்திரத்தை தடைச் செய்யும் மத்திய அரசின் வஞ்சக நடவடிக்கை
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை:
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மும்பையில் உலகப் புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர் மருத்துவர் ஜாகிர் நாயக் அவர்களின் நிறுவனமான ‘இஸ்லாமிக் ரிசர்ச் பவுன்டென்சன்’ (ஐ.ஆர்.எப்) என்ற நிறுவனத்திற்கு மத்திய அரசு சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் ஐந்து ஆண்டுகள் தடை விதித்துள்ளதை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கின்றது.
இஸ்லாமிக் ரிசர்ச் பவுன்டேசன் பெற்ற வெளிநாட்டு பணங்களில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என்பது கண்கூடாக தெரிந்த பிறகு வெளிநாட்டு நன்கொடை ஒழுங்காற்றுச் சட்டத்தின் கீழ் அந்த நிறுவனத்திற்கு மீண்டும் மத்திய உள்துறை அமைச்சகத்தினால் உரிமம் புதுப்பிக்கப்பட்டது. ஆனால் உண்மைகளை ஒத்துக் கொள்ள மறுத்த திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு உரிமத்தை புதுப்பித்த மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் ஜி.கே. திவிவேதி உள்ளட்ட நான்கு அதிகாரிகளை பதவி இடைநீக்கம் செய்தது.
துருவி துருவி ஆய்வுச் செய்த போதினும் எவ்வித ஆதாரமும் கிடைக்காத நிலையில் மருத்துவர் ஜாகிர் நாயக் நிறுவனத்தின் மீது 5 ஆண்டு கால தடைவிதித்திருப்பது மத்திய அரசின் சிறுபான்மை விரோத போக்கின் அப்பட்டமான சாட்சியமாக விளங்குகிறது.
இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு எதிராக அவரின் பேச்சுக்கள் இருப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவரது பேச்சுகளால் துண்டப்பட்டு சிலர் பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டதாக வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தடைக்கான காரணங்களாக குறிப்பிட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் எதுவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படாத நிலையில் மத்திய அரசு மருத்துவர் ஜாகிர் நாயக் நிறுவனத்திற்கு தடைவிதித்திருப்பது அதன் வஞ்சக செயல்பாட்டின் வெளிப்பாடாகவே அமைந்துள்ளது.
ஜாகிர் நாயக்கின் நிறவனத்தை தடைச் செய்ய மத்திய அரசு குறிப்பிட்டுள்ள காரணங்கள் அனைத்தும் அனுமானங்கள் தான். இதே நெறிமுறையை பயன்படுத்தினால் ஆர்எஸ்எஸ், பஜ்ரங்தளம், விஎச்பி, அபினவ் பாரத் உள்ளிட்ட அமைப்புகளும் தொடர்ந்து இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு எதிராக செயல்பட்டு வருகின்றன. இந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மீதும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் வழக்குள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன. இந்த அமைப்பைச் சேர்ந்தவர்களின் பேச்சுகளும் நாட்டின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளன. சில சந்தர்ப்பங்களில் பயங்கர ஆயுதங்களை காண்பித்துக் கொண்டே நாட்டு மக்களை இந்த அமைப்புகள் அச்சுறுத்தி வருகின்றனர். இத்தகைய அமைப்புக்ள தான் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடைச்செய்யப்பட்டிருக்க வேண்டும். .
திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் தொடர் முஸ்லிம் விரோதப் போக்கால் சிறுபான்மையின முஸ்லிம்களின் உரிமைகள் படிப்படியாகப் பறிக்கப்பட்டு வருகின்றன. தற்போது எவ்வித நியாயமான காரணங்களின்றி வெறும் அனுமானங்களின் அடிப்படையில் மருத்துவர் ஜாகிர் நாயக் அவர்களின் தொண்டு நிறுவனமான இஸ்லாமிக் ரிசர்ச் பவுன்டேஷனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது அரசியலமைப்புச் சட்டத்தின் 25ம் பிரிவு வழங்கியுள்ள மதச் சுதந்திரத்தை பறிக்கும் வஞ்சக நடவடிக்கையாகவே அமைந்துள்ளது.
எனவே, மத்திய அரசு உடனடியாக இந்தத் தடையை திரும்பப் பெறவேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கோருகிறேன். .
அன்புடன்
(எம்.எச்.ஜவாஹிருல்லா)
தலைவர், மமக
தலைவர், மமக