லால்பேட்டையில் சாலைமறியல் களத்தில் மமக பொதுச்செயலாளர் சகோ அப்துல் சமத் அவர்கள்..
லால்பேட்டையை சேர்ந்த இந்து முன்னனி பிரமுகர் ஆறுமுகம் என்பவர் கடந்த மாதம் தனது முகநூல் பக்கத்தில் நம் உயிரினும் மேலான முஹம்மத் நபி (ஸல்) அவர்களைப்பற்றி தறைக்குறைவான வார்த்தைகளால் எழுதி வந்தான் இதனை அறிந்த லால்பேட்டையை சேர்ந்த தமுமுக மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் காவல் துறையில் தகுந்த ஆதாரத்துடன் புகார் அளித்தனர் இதனை அடுத்து காவல்துறை ஆறுமுகம் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தது நேற்று பிணையில் வந்த அந்த நபர் அவருடைய இருசக்கர வாகனத்தை தானே தீயிட்டு கொளுத்திவிட்டு தமுமுக சகோதரர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார் இதனை அடுத்து தமுமுக சகோதரர் மசூது என்ற இளைஞனை காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்வதாக கூறி கைது செய்தது மேலும் தமுமுக-மமகவை சேர்ந்த 14 நபர்கள் மேல் பொய் வழக்கு பதிவு செய்த தகவலறிந்த உடன் லால்பேட்டை தமுமுக சகோதரர்களுடன் பொதுமக்களும் சேர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்..
கடலூர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்று இருந்த மமக பொதுச்செயலாளர் அப்துல் சமது அவர்கள் லால்பேட்டைக்கு விரைந்து காவல்துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார் அப்போது நாளை மாலைக்குள் கைது செய்யப்பட்ட சகோதரனை விடுதலை செய்யவில்லை என்றால் ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து கடலூர் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகை இடுவோம் என்று காவல் துறையினரிடம் எச்சரிக்கை செய்தார்.
இதனை அடுத்து காவல்துறை கைதுசெய்த நபரை விசாரித்து விட்டு நாளை காலை விடுதலை செய்வோம் என்று அறிவித்ததை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது..
விடுதலை செய்யவில்லை என்றால் போராட்டம் வீரியம் பெறும்..