சனி, 4 பிப்ரவரி, 2017

மாணவர்களுக்கு ஜாமீன் நிபந்தனை...நாள்தோறும் 10 திருக்குறள் ஒப்புவிக்க வேண்டும்..!

கோவை மாவட்டத்தில், ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் நாள்தோறும் திருக்குறளை ஒப்புவிக்க வேண்டும் என்று மேட்டுப்பாளையம் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
காரமடை பகுதியில் கடந்த 31 ஆம் தேதி சவுண்டமுத்து என்பவரிடம் பொது இடத்தில தகராறில் ஈடுபட்டதாக தனியார் கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அந்த மாணவர்கள் 3 பேரும் ஜாமீன் கேட்‌டு நீதிமன்றத்தில் முறையிட்டனர். இதை விசாரித்த மாஜிஸ்ட்ரேட் சுரேஷ்குமார், மாணவர்கள் மூவரும் மேட்டுப்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10 நாட்களுக்கு நாள்தோறும் 10 திருக்குறள்களை ஒப்புவிக்க வேண்டும் என நிபந்தனை விதித்து மாணவர்களுக்கு ஜாமீன் வழங்கினார். இதனை பள்ளி தலைமை ஆசிரியர் உறுதி செய்ய வேண்டும் எனவும் மாஜிஸ்ட்ரேட் கேட்டுக்கொண்டார்.

Related Posts: