ஆதார் எண் சேவை அளிப்பதாக மோசடியாக செயல்பட்ட 50 இணைய தளங்கள் மீது தேசிய அடையாள அட்டை ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆதார் சேவைகளை அளிப்பதாகக் கூறி மக்களிடம் கூடுதலாக பணம் வசூலித்ததால் இந்த இணைய தளங்கள் முடக்கப்பட்டன. இதேபோல, செயலிகள் பலவும் செயல்படாமல் தடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ள அடையாள அட்டை ஆணையம், ஆதார் சேவைகளை அங்கீகாரமின்றி அளித்தாலோ, கூடுதல் பணம் வசூலித்தாலோ நடவடிக்கை தொடரும் என எச்சரித்துள்ளது.
பதிவு செய்த நாள் : February 04, 2017 - 08:17 AM