சனி, 4 பிப்ரவரி, 2017

இறந்த எம்பியை உயிரோடு இருப்பதாக காட்டிய பிஜேபி” – காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு


பட்ஜெட் தாக்கலின் போது இடையூறு ஏற்படாமல் இருக்க, இறந்துபோன கேரள எம்.பி.யை உயிரோடு இருப்பதாக காட்ட பிரதமர் அலுவலகம் நெருக்கடி கொடுத்துள்ளது எனக் குற்றம்சாட்டி, காங்கிரஸ், இடது சாரி கட்சிகள் நேற்று மக்களவை, மாநிலங்கள் அவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
மேலும், நாடாளுமன்ற குழு மூலம் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தன. இதனால், மக்களவை திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
எம்.பி. மரணம்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் கடந்த 31-ந்தேதி தொடங்கியது. அவையில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பேசிக்கொண்டு இருந்த போது, அமர்ந்திருந்த இந்தியன் முஸ்லீம் லீக் எம்.பி. அகமதுவுக்கு(வயது78) திடீர் மரடைப்பு ஏற்பட்டது. அவர் உடனடியாக ராம் மனோகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பிப்.1ந் தேதி அதிகாலை மரணமடைந்தார்.
அனுமதியில்லை
அவையை ஒத்திவைக்க எதிர்க்கட்சிகள் கோரியும், மத்தியஅரசு பட்ஜெட்டைத் தாக்கல் செய்தது. இதற்கிடையே அவர் இறப்பு தெரிந்தால்,பட்ஜெட் தாக்கல் பாதிக்கும் என தெரிய விடாமல் பிரதமர் அலுவகம் மருத்துவர்களுக்கு நெருக்கடி கொடுத்ததாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும், அகமதுவைப் பார்க்க அவரின் குடும்ப உறுப்பினர்களையும் அனுமதிக்கவில்லை.
அமளி
 மக்கள் அவை கூடியதும்   காங்கிரஸ், இடது சாரி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இந்த விவகாரத்தை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.
மறைக்கப்பட்டது
காங்கிரஸ் சார்பில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே பேசுகையில், “ மனிதநேயம் அற்ற வகையில், எம்.பி. அகமதுவின் மருத்துவமனையில் உடல் வைக்கப்பட்டு இருந்து இருக்கிறது. ஏறக்குறைய 7 மணிநேரம் வரை அகமதுவை பார்க்க அவரின் மகள், மருமனுக்கு அனுமதி கொடுக்கவில்லை. இந்த நிகழ்வுகள் அனைத்தும், பட்ஜெட்டுக்கு இடையூறு வந்துவிடக்கூடாது என்பதற்காக மத்திய அரசால் மூடி மறைக்கப்பட்டுள்ளது.
ராம் லோகியா மருத்துவமனையில் அகமது இறந்தபின்னும் அவர் உயிரோடு இருக்கிறார் என்று கூறச்சொல்லி, அரசு மறைமுகமாக மருத்துவர்களுக்கும், அழுத்தம் கொடுத்து, உடலை வெளியே எடுக்க விடாமல் தடுத்துள்ளது” என்றார்.
விசாரணை
புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி எம்.பி. என்.கே.பிரேம சந்திரன்  பேசுகையில், “ இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற குழு மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும் ” என்றார். இதை விசயத்தை காங்கிரஸ் எம்.பி. கே.சி வேணுகோபாலும்  வலியுறுத்தினார்.
சோனியா காத்திருப்பு
அப்போது குறுக்கிட்ட நாடாளுமன்ற விகாரத்துறை அமைச்சர் அனந்தகுமார், பட்ஜெட்டுக்கு தொடர்பில்லாக கோரிக்கை என்றார். இதற்கு பதில் அளித்த மார்க்சிஸ்ட் எம்.பி. பி. கருணாகரன், “ இது பட்ஜெட்டுக்கு தொடர்பில்லாதது தான். ஆனால், மருத்துவமனையில் என்ன நடந்தது?. மருத்துவமனையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, 2 மணிநேரம் காத்திருந்தார்” என்றார்.

Related Posts: