ஞாயிறு, 5 பிப்ரவரி, 2017

கச்சா எண்ணெய் கசிவு விவகாரம், காத்திருக்கும் பேரதிர்ச்சி, இளைஞர்களே உஷார்!

கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை எண்ணூர் துறைமுகத்திற்கு வந்த இரண்டு சரக்கு கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளானதில், ஒரு கப்பலில் இருந்த கச்சா எண்ணெய் கசிந்து கடலில் கொட்டியது.
 
இதனால் துறைமுகம் மற்றும் அதனை சுற்றியுள்ள கடற்கரை பகுதிகளில் எண்ணெய் படலங்கள் பரவியுள்ளன. இந்த எண்ணெய் படலங்களால் கடல்வாழ் உயிரினங்கள் பல பாதிக்கப்பட்டுள்ளன.
 
இந்நிலையில் கடலில் மிதக்கும் எண்ணெய் படலத்தை அகற்ற மத்திய-, மாநில அரசுகளின் பல்வேறு துறைகள் மற்றும் தன்னார்வலர்கள், இளைஞர்கள் ஆகியோர் இணைந்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
 
இந்த எண்ணெய் படலங்களை அகற்றும் பணியில், பாதுகாப்புக் கையுறைகள், பாதுகாப்பு முகக்கவசம், காலணி எதுவுமில்லாமல் இளைஞர்கள் அங்கே சமூகப் பணியில் ஈடுபட்டுள்ளது பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.
 
இந்நிலையில், பாறையெண்ணெய் எனப்படும் இந்த குருடாயிலில் கலந்திருக்கும் ஹைட்ரஜன் ஸல்பைடு எனும் விஷவாயு, உலகத்திலேயே இரண்டாவது ஆபத்தான வாயு என வகைப்பிரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அந்த ஹைட்ரஜன் ஸல்பைடை 100 ppm சுவாசித்தாலே நிரந்தர சுவாசக் கோளாறு முதல் மரணம் வரை நிகழலாம் 100 ppm என்பது 0.01% ஆகும். உலகம் முழுதும் பல எண்ணெய் விபத்துகளில் இந்த விஷவாயுவினால் பல்லாயிரக்கணக்கில் இறந்திருக்கிறார்கள்.
 
500 ppm அதாவது 0.5 % வாயுவை ஒரு நொடி சுவாசித்தாலே உடனடி மரணம் நிச்சயம். அது போக குருடாயிலில் கார்பன் மோனாக்ஸைடு வேறு கலந்திருப்பதால் மிகவும் ஆபத்தான நச்சுத்தன்மை உடையது எனவும் கூறப்படுகிறது.
 
எனவே, இந்த நிகழ்வுக்குக் காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, கடலில் கலந்திருக்கும் எண்ணெய் படலங்களை அவர்கள் தான் அதைச் சுத்தப்படுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது.
 
குருடாயிலிருந்து எடுக்கப்படுவதுதான் பெட்ரோலும், டீசலும் என்றால் அதன் எரியும் திறனைப்பற்றி யோசித்துக் கொள்ளுங்கள். கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலையிலேயே இது மிகவும் ஆபத்தானது. இப்படி ஒரு திறந்த வெளியில் இது இன்னமும் மோசமானது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts: