வெள்ளி, 3 மார்ச், 2023

அண்ணா பல்கலைக்கழகத்தில் போலி கௌரவ டாக்டர் பட்டம் – 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

 3,3 2023

அண்ணா பல்கலைக்கழகத்தில் போலி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்ட விவகாரத்தில் நிகழ்ச்சி ஏறபாட்டாளர்  மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் ஆடிட்டோரியத்தில் கடந்த ஞாயிறன்று தனியார் நிகழ்ச்சி ஒன்றுக்கு அனுமதி பெறப்பட்டிருந்தது. இதில், இசையமைப்பாளர் தேவா, நடன இயக்குநர் சாண்டி, சின்னத்திரை பிரபலமான ஈரோடு மகேஷ், யூடியூப் பிரபலங்களான கோபி – சுதாகர் உட்பட 30க்கும் மேற்பட்டோருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் கலந்துகொண்ட கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிய இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிலையில், வழங்கப்பட்ட பட்டங்கள் அனைத்தும் போலியான பட்டங்கள் என தெரியவந்ததை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் அளித்த புகாரின் அடிப்படையில் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஹரிஸ் மீது ஏழு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.



source https://news7tamil.live/fake-honorary-doctorate-in-anna-university-case-registered-under-7-sections.html