புதன், 8 மார்ச், 2023

உலக நாடுகள் ஏன் டிக்டாக்கை தடை செய்கின்றன? பின்னணி என்ன?

 7 3 23

ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் கனடா அரசாங்கங்கள் சீனாவுக்குச் சொந்தமான டிக்டாக்கை தடை செய்வது குறித்து பரிசீலித்து வருகின்றனர். short-form வீடியோ செயலியான டிக்டாக்கில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருப்பதாக அந்நாட்டு அரசாங்கள் மேற்கோள் காட்டுகின்றன. சீனாவின் பைட் டான்ஸ் என்ற நிறுவனம் டிக்டாக் செயலியை உருவாக்கியுள்ளது.

கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் சமீபத்தில் அரசாங்கத்திற்கு சொந்தமான சாதனங்களிலிருந்து டிக்டாக்கை தடை செய்தது. இந்நிலையில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை இன்று ( திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், அரசாங்க சாதனங்களில் இருந்து செயலியை நீக்க 30 நாட்கள் அவகாசம் வழங்குவதாக அறிவித்தது.

டிக்டாக் தடை செய்வது குறித்து அந்நாட்டு அரசாங்க குழு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தது. அதிபர் ஜோ பைடன் தலைமையில் நாடு முழுவதும் உள்ள அனைத்து சாதனங்களிலும் டிக்டாக் தடை செய்ய அனுமதிக்கும் சட்டம் குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. டிக்டாக் செயலி 100 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

டிக்டாக்கை அரசாங்கங்கள் ஏன் தடை செய்கின்றன?

இது அனைத்தும் சீனாவில் இருந்து வருகிறது. மேற்கத்திய நாடுகளில் உள்ள சட்ட நிபுணர்கள் டிக்டாக் மற்றும் அதன் தாய் நிறுவனமான ByteDance குறித்து அதிக கவலை தெரிவித்தனர். டிக்டாக் மற்றும் பைட் டான்ஸ், இருப்பிடத் தகவல் போன்ற முக்கியமான பயனர் தகவல்களை சீன அரசாங்கத்திடம் இந்நிறுவனங்கள் கொடுக்கும் அச்சம் இருப்பதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.

உளவுத்துறை தகவல்களுக்கு சீன அரசாங்கம் சீன நிறுவனங்கள் மற்றும் குடிமக்களிடம் இருந்து பயனர் தரவுகளை ரகசியமாக கோருவதாக கூறுகிறது. பயனர் தரவுகளை சீனா தவறான நோக்கில் பயன்படுத்தக்கூடும் என்றும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.

இருப்பினும் டிக்டாக் நிறுவனம் இந்த குற்றச்சாட்டுகளை தொடக்கத்தில் இருந்தே மறுத்து வருகிறது மேலும் ByteDance நிறுவனத்தில் இருந்து விலகி இருப்பதாகவும் கூறி வருகிறது.

எந்த நாடு டிக்டாக்கை தடை செய்துள்ளது?

இந்தியா 2020-ம் ஆண்டு டிக்டாக் செயலியை தடை செய்தது. சீனாவுக்குச் சொந்தமான டிக்டாக் செயலி உள்பட 59 செயலிகளை பயனர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி தடை செய்தது. மேலும் பயனர்களின் தரவுகளை இந்தியாவுக்கு வெளியே உள்ள சர்வர்களுக்கு அனுப்புவதாகவும் குற்றஞ்சாட்டி செயலிகளுக்கு தடை விதித்தது.

அமெரிக்காவில் விதிக்கப்பட்ட தடையால் என்ன நடக்கிறது?

கடந்தாண்டு நவம்பர் முதல் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் அரசு வழங்கிய சாதனங்களில் டிக்டாக் தடை செய்யப்பட்டுள்ளன. மேலும் பல கல்லூரிகள் ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகம், ஆபர்ன் பல்கலைக்கழகம் மற்றும் போயஸ் ஸ்டேட் யுனிவர்சிட்டி போன்றவைகள் கல்லூரி வளாக வைஃபை நெட்வொர்க்குகளிலிருந்தும் தடை செய்துள்ளன.

அமெரிக்க அரசாங்க சாதனங்கள் குறிப்பாக இராணுவம், மரைன் கார்ப்ஸ், விமானப்படை மற்றும் கடலோர காவல்படை ஆகியவற்றால் பயன்படுத்தப்படும் சாதனங்களில் இந்த செயலி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் தடை செய்யப்பட்டன. ஆனால் தனிநபர் சாதனங்களில் இவை தடை செய்யப்படவில்லை. டிக்டாக் பயன்படுத்த மாணவர்கள் தங்கள் மொபைல் டேட்டாவை பயன்படுத்துகின்றனர்.

பைடன் நிர்வாகம் என்ன செய்து கொண்டிருக்கிறது?

டிக்டாக் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக, இது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக வெள்ளை மாளிகை பதிலளித்தது. டிக் டாக் நிறுவனம் அரசின் ஆய்வு குழுவுடன் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. டிக்டாக் மீதான குற்றச்சாட்டு, பயனர் தரவைக் கையாள்வது குறித்து தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறியது.

மேலும் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் டிக்டாக் நிறுவனம் 90 பக்க அறிக்கை அரசுக்கு சமர்ப்பித்துள்ளது. டிக்டாக் மீதான பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு அமெரிக்காவில் அதை களைந்து எவ்வாறு பயன்படுத்துவது என்கிற திட்டம் உள்ளிட்டவற்றை குறித்து அறிக்கை அளித்ததாக கூறியுள்ளது.

source https://tamil.indianexpress.com/explained/why-countries-are-trying-to-ban-tiktok-605292/