புதன், 20 மார்ச், 2024

திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

 மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுகவின் வேட்பாளர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 20 3 2024 அறிவித்தார். 

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கவுள்ளது. இன்று (மார்ச் 20) முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது.  இதனால் கூட்டணி, தொகுதி பங்கீட்டை நிறைவு செய்ய அரசியல் கட்சிகள் தீவிரமாக பணிபுரிந்து வருகின்றன.

அந்த வகையில் தமிழ்நாட்டில் திமுக படுவேகமாக செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்பதை உறுதி செய்துவிட்டதை தொடர்ந்து, கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதி குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, காஞ்சிபுரம் (தனி), கோவை, தூத்துக்குடி உள்பட 21 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.

காங்கிரஸ் கட்சி புதுச்சேரி உள்பட 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. விசிகவுக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரத்தை திமுக கட்சி ஒதுக்கியுள்ளது. இந்த தொகுதிகள் முறையே திருமாவளவன் மற்றும் ரவிக்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் சிபிஐக்கு 2 தொகுதிகளும்,  சிபிஎம் கட்சிக்கு 2 தொகுதிகளும்,  மதிமுகவிற்கு ஒரு தொகுதியும்,  இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ராமநாதபுரம் தொகுதியையும், கொமதேக நாமக்கல் தொகுதியையும் ஒதுக்கியுள்ளது.  மதிமுக கட்சிக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில்,  அத்தொகுதியின் வேட்பாளராக துரை வைகோ அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் திமுக போட்டியிடும் 21 தொகுதிகளிலும் யார், யாருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று திமுக தலைமை பல்வேறு கட்டங்களாக ஆலோசனை நடத்தியது. மாவட்ட செயலாளர்களிடமும் கருத்து கேட்கப்பட்டது. வேட்புமனு தாக்கல் இன்று துவங்க உள்ள நிலையில்,  திமுக வேட்பாளர் பட்டியலை இன்று   காலை  அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.  முன்னதாக திமுகவின் தேர்தல் அறிக்கையையும் முதலமைச்சர் வெளியிட்டு உரை நிகழ்த்தினார்.

திமுகவின் வேட்பாளர் பட்டியல் :

1) வடசென்னை – கலாநிதி வீராசாமி

2 ) தென்சென்னை – தமிழ்ச்சி தங்கபாண்டியன்

3 ) மத்திய சென்னை – தயாநிதி மாறன்

4 ) காஞ்சிபுரம் (தனி) – செல்வம்

5 ) அரக்கோணம் – ஜெகத்ரட்சகன்

6) வேலூர் – கதிர் ஆனந்த்

7 ) தருமபுரி – அ.மணி

8 ) திருவண்ணாமலை – சி.என்.அண்ணாதுரை

9 ) சேலம் – டி.எம்.செல்வகணபதி

10 ) கள்ளக்குறிச்சி – மலையரசன்

11 ) நீலகிரி (தனி) – ஆ ராசா

12 ) பொள்ளாச்சி – ஈஸ்வரசாமி

13 ) கோவை – கணபதி ராஜ்குமார்

14 ) தஞ்சாவூர் – ச.முரசொலி

15 ) தூத்துக்குடி – கனிமொழி கருணாநிதி

16 ) தென்காசி (தனி) – ராணி ஸ்ரீகுமார்

17 ) ஸ்ரீபெரும்புதூர் – டி ஆர் பாலு

18 ) பெரம்பலூர் – அருண் நேரு

19 ) தேனி – தங்கச் தமிழ் செல்வன்

20 ) ஈரோடு – பிரகாஷ்

21 ) ஆரணி – தரணி வேந்தன்

 

வேட்பாளர்கள் விவரம் :

  • 50%க்கு மேல் புதியவர்கள் (11)
  • பெண்கள் – 3
  • அடிமட்ட தொண்டர்கள்/ ஒன்றியச் செயலாளர்கள் – 2
  • ⁠முனைவர்கள் – 2
  • மருத்துவர்கள் – 2
  • ⁠பட்டதாரிகள் – 19
  • ⁠வழக்கறிஞர்கள் – 6

திமுகவின் அதிரடி தேர்தல் அறிக்கை

திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற முக்கிய அம்சங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படித்துக் காட்டினார்.  அதன் விவரம் வருமாறு:

  • மாநில முதல்வர்களுடன் ஆலோசனை பெற்று ஆளுநர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
  • உச்ச நீதிமன்ற கிளை சென்னையில் அமைக்கப்பட வேண்டும். 
  • புதுச்சேரிக்கு மாநில தகுதி வழங்கப்படும்
  • அனைத்து மாநில மொழிகள் வளர்ச்சிக்கு சம நிதி வழங்கப்படும். 
  • தாயகம் திரும்பிய இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும். 
  • புதிய கல்விக் கொள்கை ரத்து செய்யப்படும். 
  • நாடு முழுவதும் காலை உணவு திட்டம் செயல்படும். 
  • தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
  • மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 10 லட்சம் ரூபாய் வட்டி இல்லா கடன் வழங்கப்படும்.
  • தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கக்கூடிய சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்.
  • வங்கிகளில் குறைந்தபட்ச வைப்புத் தொகை இல்லாத போது வைக்கப்படும் அபராதம் ரத்து செய்யப்படும். 
  • சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.
  • கல்விக்கடன் ரத்து செய்யப்படும்.
  • பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படாது. 
  • எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.500, பெட்ரோல் விலை ரூ.75 ரூபாய், டீசல் விலை ரூ.50 ஆக குறைக்கப்படும்.
  • ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான ஐஐடி போன்றவை தமிழ்நாட்டில் புதிதாக அமைக்கப்படும். 
  • ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கைவிடப்படும்.
  • மாணவர்களுக்கு வட்டி இல்லாத கல்வி கடனாக 4 லட்சம் வரை வழங்கப்படும். 
  • ரயில்வே துறையில் வழங்கப்பட்டு வந்த கட்டண சலுகைகள் மீண்டும் வழங்கப்படும். 
  • சென்னையில் மூன்றாவது ரயில் முனையம் அமைக்கப்படும். 


source https://news7tamil.live/21-person-dmk-candidate-list-released-kanimozhi-in-thoothukudi-arun-nehru-contest-in-perambalur.html

https://news7tamil.live/lpg-rs-500-petrol-rs-75-dmks-action-manifesto.html