நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்: தேர்தல் அறிக்கை
/indian-express-tamil/media/media_files/ZTy5veF734eyBimsxHwN.jpg)
தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறுகிறது. தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ், வி.சி.க, ம.தி.மு.க, சி.பி.எம், சி.பி.ஐ உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. கூட்டணி கட்சிகள் 19 இடங்களில் போட்டியிடுகிறது. தி.மு.க 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்நிலையில், 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார். அதோடு தி.மு.க தேர்தல் அறிக்கையையும் அவர் வெளியிடுவார் எனக் கூறப்பட்டுள்ளது.
21 தொகுதிகளுக்கான தி.மு.க வேட்பாளர் பட்டியல் வெளியீடு
மாநிலங்கள் சுயாட்சி பெறும் வகையில் அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படும். ஆளுநருக்கு அதிக அதிகாரம் வழங்கும் 361 பிரிவு நீக்கப்படும். திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும். புதிய கல்வி கொள்கை ரத்து செய்யப்படும்.
நாடு முழுவதும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும். ரயில்வே துறைக்கு தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். குடியுரிமை திருத்த சட்டம் ரத்து செய்யப்படும்.காலை உணவு திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் - முதல்வர் ஸ்டாலின்
தி.மு.க தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்

source https://tamil.indianexpress.com/tamilnadu/lok-sabha-polls-dmk-manifesto-and-candidates-list-4372728