திங்கள், 18 மார்ச், 2024

TNEA 2024; தமிழக டாப் 40 பொறியியல் கல்லூரிகள் இவை தான்

 பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் அவசியம் தெரிந்துக் கொள்ள வேண்டிய தமிழகத்தில் உள்ள டாப் 40 என்ஜீனியரிங் கல்லூரிகள் எவை என்பது குறித்து இப்போது பார்ப்போம்

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கான சேர்க்கையை, அண்ணாப் பல்கலைக்கழகத்தின் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை அமைப்பு நடத்தி வருகிறது. இந்த பொறியியல் படிப்புகளுக்கு https://www.tneaonline.org/ என்ற இணையதளப் பக்கம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் தற்போது 12 ஆம் வகுப்பு தேர்வுகள் நடந்து வருகிறது. மே மாதத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டு, ஜூன், ஜூலை மாதங்களில் உயர் கல்வி சேர்க்கை நடைபெறும். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பொறியியல் படிப்புக்கு நல்ல மவுசு இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில், தமிழகத்தின் டாப் 40 பொறியியல் கல்லூரிகள் எவை என்பதை கல்வி ஆலோசகர் அஸ்வின் தனது யூடியூப் சேனலில் பட்டியலிட்டுள்ளார்.

40 ஆவது இடத்தில் சென்னையில் உள்ள செயிண்ட் ஜோசப் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி உள்ளது.

39 ஆவது இடத்தில் சேலத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி உள்ளது.

38 ஆவது இடத்தில் சென்னையில் உள்ள ராஜலெட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி உள்ளது.

37 ஆவது இடத்தில் சென்னையில் உள்ள ஈஸ்வரி இன்ஜினியரிங் காலேஜ் உள்ளது.

36 ஆவது இடத்தில் திருநெல்வேலியில் உள்ள அரசுப் பொறியியல் கல்லூரி உள்ளது.

35 ஆவது இடத்தில் சென்னையில் உள்ள பனிமலர் இன்ஜினியரிங் காலேஜ் உள்ளது.

34 ஆவது இடத்தில் காரைக்குடியில் உள்ள அழகப்பா செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி உள்ளது.

33 ஆவது இடத்தில் சென்னையில் உள்ள லயோலா ஐகேம் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி உள்ளது.

32 ஆவது இடத்தில் மதுரையில் உள்ள வேலம்மாள் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி உள்ளது.

31 ஆவது இடத்தில் சென்னையில் உள்ள வேலம்மாள் இன்ஜினியரிங் காலேஜ் உள்ளது.

30 ஆவது இடத்தில் சென்னையில் உள்ள ஸ்ரீ சாய்ராம் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி உள்ளது.

29 ஆவது இடத்தில் கோவையில் உள்ள கே.பி.ஆர் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி உள்ளது.

28 ஆவது இடத்தில் சேலத்தில் உள்ள சோனா காலேஜ் ஆஃப் டெக்னாலஜி உள்ளது.

27 ஆவது இடத்தில் சென்னையில் உள்ள ஆர்.எம்.கே காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி உள்ளது.

26 ஆவது இடத்தில் கோவையில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா இன்ஜினியரிங் காலேஜ் உள்ளது.

25 ஆவது இடத்தில் சிவகாசியில் உள்ள மெப்கோ ஸ்லங் இன்ஜினியரிங் காலேஜ் உள்ளது.

24 ஆவது இடத்தில் கோவையில் உள்ள கற்பகம் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் உள்ளது.

23 ஆவது இடத்தில் தூத்துக்குடியில் உள்ள நேஷ்னல் இன்ஜினியரிங் காலேஜ் உள்ளது.

22 ஆவது இடத்தில் கோவையில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா காலேஜ் ஆஃப் டெக்னாலஜி உள்ளது.

21 ஆவது இடத்தில் சென்னையில் உள்ள ஆர்.எம்.டி இன்ஜினியரிங் காலேஜ் உள்ளது.

20 ஆவது இடத்தில் சென்னையில் உள்ள செயிண்ட் ஜோசப் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் உள்ளது.

19 ஆவது இடத்தில் ஈரோட்டில் உள்ள பண்ணாரி அம்மன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி உள்ளது.

18 ஆவது இடத்தில் சென்னையில் உள்ள சவீதா இன்ஜினியரிங் காலேஜ் உள்ளது.

17 ஆவது இடத்தில் சென்னையில் உள்ள ஸ்ரீசாய்ராம் இன்ஜினியரிங் காலேஜ் உள்ளது.

16 ஆவது இடத்தில் சென்னையில் உள்ள ராஜலெட்சுமி இன்ஜினியரிங் காலேஜ் உள்ளது.

15 ஆவது இடத்தில் ஈரோட்டில் உள்ள கொங்கு இன்ஜினியரிங் காலேஜ் உள்ளது.

14 ஆவது இடத்தில் கோவையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரி உள்ளது.

13 ஆவது இடத்தில் சென்னையில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் உள்ளது.

12 ஆவது இடத்தில் கோவையில் உள்ள குமரகுரு காலேஜ் ஆஃப் டெக்னாலஜி உள்ளது.

11 ஆவது இடத்தில் மதுரையில் உள்ள தியாகராஜர் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் உள்ளது.

10 ஆவது இடத்தில் சென்னையில் உள்ள ஆர்.எம்.கே இன்ஜினியரிங் காலேஜ் உள்ளது.

9 ஆவது இடத்தில் கோவையில் உள்ள கோயம்புத்தூர் தொழில்நுட்பக் கல்லூரி உள்ளது.

8 ஆவது இடத்தில் கோவையில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி உள்ளது.

7 ஆவது இடத்தில் கோவையில் உள்ள ஸ்ரீ ஈஸ்வர் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் உள்ளது.

6 ஆவது இடத்தில் கோவையில் உள்ள பி.எஸ்.ஜி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் அப்ளைடு ரிசர்ச் உள்ளது.

5 ஆவது இடத்தில் சென்னையில் உள்ள சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி உள்ளது.

4 ஆவது இடத்தில் கோவையில் உள்ள பி.எஸ்.ஜி காலேஜ் ஆஃப் டெக்னாலஜி உள்ளது.

3 ஆவது இடத்தில் சென்னையில் உள்ள எஸ்.எஸ்.என் எனப்படும் ஸ்ரீ சிவசுப்பிரமணிய நாடார் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் உள்ளது.

2 ஆவது இடத்தில் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி கேம்பஸ் உள்ளது.

முதல் இடத்தில் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் சி.இ.ஜி கேம்பஸ் உள்ளது.



source https://tamil.indianexpress.com/education-jobs/top-40-engineering-colleges-list-under-anna-university-in-tamil-nadu-4362414

Related Posts: