புதன், 31 ஜூலை, 2024

கற்றதை வாழ்வியலாக்குவோம்!

கற்றதை வாழ்வியலாக்குவோம்! ஆர்.அப்துல் கரீம் M.I.Sc மாநிலத் தலைவர்,TNTJ அல் ஹிதாயா பெண்கள் இஸ்லாமிய அழைப்பு இல்லம் - மதுரைமாவட்டம் பட்டமளிப்பு நிகழ்ச்சி - 22.07.2024

அழகிய முன்மாதிரி இப்ராஹீம் (அலை)

அழகிய முன்மாதிரி இப்ராஹீம் (அலை) N.ஃபைசல் - மாநிலச் செயலாளர்,TNTJ மார்க்க விளக்கக்கூட்டம் - 13.07.2024 கொல்லாபுரம் - திருவாரூர் தெற்கு மாவட்டம்

எது நபிவழி? தொப்பியும் - ஆடம்பர திருமணமும்

எது நபிவழி? தொப்பியும் - ஆடம்பர திருமணமும் சுன்னத் ஜமாஅத் யார்?) ஜமாஅத்துல் உலமாவினருக்கு பதில் - பாகம் - 4 எஸ்.ஹஃபீஸ் - பேச்சாளர்,TNTJ

குர்ஆனும் ஹதீஸும் வேண்டாம் ஆலிம்கள்தான் மார்க்க ஆதாரம்

குர்ஆனும் ஹதீஸும் வேண்டாம் ஆலிம்கள்தான் மார்க்க ஆதாரம் (சுன்னத் ஜமாஅத் யார்?) ஜமாஅத்துல் உலமாவினருக்கு பதில் - பாகம் - 5 எஸ்.ஹஃபீஸ் - பேச்சாளர்,TNTJ

தர்கா ஸியாரத் ஓர் இணைவைப்பு - முரண்படும் உலமாக்கள்

தர்கா ஸியாரத் ஓர் இணைவைப்பு - முரண்படும் உலமாக்கள் சுன்னத் ஜமாஅத் யார்?) ஜமாஅத்துல் உலமாவினருக்கு பதில் - பாகம் - 6 எஸ்.ஹஃபீஸ் - பேச்சாளர்,TNTJ

பாலஸ்தீனத்திற்காக கனடாவும் அமெரிக்காவும் மாறுகிறதா?

பாலஸ்தீனத்திற்காக கனடாவும் அமெரிக்காவும் மாறுகிறதா? N.அல் அமீன் - மாநிலச் செயலாளர்,TNTJ செய்தியும் சிந்தனையும் - 27.07.2024

ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு எங்கே?

ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு எங்கே? ஐ.அன்சாரி மாநிலச் செயலாளார்,TNTJ செய்தியும் சிந்தனையும் - 26.07.2024

தோல்வியின் விரக்தியில்

தோல்வியின் விரக்தியில் செய்தியும் சிந்தனையும் - 25.07.2024 A.பெரோஸ் கான் (மாநிலச் செயலாளர்,TNTJ)

அல்லாஹ்வே சிறந்த பாதுகாவலன்!

அல்லாஹ்வே சிறந்த பாதுகாவலன்! S.A.முஹம்மது ஒலி M.I.Sc மாநிலச் செயலாளர், TNTJ தலைமையக ஜுமுஆ - 26.07.2024

உபதேசம் கூறும் உன்னத மார்க்கம்

உபதேசம் கூறும் உன்னத மார்க்கம் ஐ.அன்சாரி - மாநிலச் செயலாளர்,TNTJ அமைந்தகரை ஜுமுஆ - 26.07.2024

சவாலான சூழ்நிலையில் நிதிஷ்குமார் அரசு

 இடஒதுக்கீடு வரம்பை 50% லிருந்து 65% ஆக உயர்த்திய பீகார் அரசின் அறிவிப்புகளை ரத்து செய்த பாட்னா உயர்நீதிமன்றத்தின் ஜூன் 20 ஆம் தேதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை மறுத்துள்ள நிலையில், நிதிஷ் குமார் தலைமையிலான அரசு அரசியல் ரீதியாக சவாலான பணியை எதிர்கொள்கிறது, ஏனெனில் இடஒதுக்கீடு உயர்வை அரசியலமைப்பின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்க மத்திய அரசு சட்டப்பூர்வ விலக்கு அளிக்க வேண்டும்.


சமீபத்தில் முடிவடைந்த சட்டசபை கூட்டத்தொடரின் போது, முதல்வர் நிதிஷ் குமார், நீதிமன்றங்களில் சவால் செய்ய முடியாத மத்திய மற்றும் மாநில சட்டங்களின் பட்டியலை உள்ளடக்கிய ஒன்பதாவது அட்டவணையில் இடஒதுக்கீடு உயர்வு முடிவை சேர்க்குமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்ததாக சட்டசபையில் தெரிவித்தார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச், இந்த வழக்கை செப்டம்பர் மாதம் இறுதி விசாரணைக்கு பட்டியலிட்டது.

ஐக்கிய ஜனதா தளம் (JD(U)) கட்சியின் ஆலோசகரும் தேசிய செய்தித் தொடர்பாளருமான கே.சி.தியாகி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், “எம்.பி.,க்கள் எண்ணிக்கையால் எங்களுக்கு இப்போது சிறிய வாய்ப்பு உள்ளது. அரசியல் சாசனத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்ற எங்களது கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்,” என்று கூறினார். கூட்டணி கட்சியான பா.ஜ.க மீது ஜேடி(யு) அழுத்தம் கொடுக்கக்கூடிய பிரச்சினையாக இது மாறுமா என்று கேட்டதற்கு, தியாகி, “எங்களுக்கு அழுத்தம் கொடுக்கும் அரசியலில் நம்பிக்கை இல்லை. ஒரு பரந்த கண்ணோட்டத்துடன் விஷயங்களை தீர்ப்போம். ஒன்பதாவது அட்டவணையின் கீழ் 284 துறைகள் உள்ளன. பீகார் விவகாரத்தை கவனமாகப் பார்க்க வேண்டும். பொருளாதார அடிப்படையில் (பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கான இடஒதுக்கீடு) ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்ட பிறகு புதிய விவாதம் ஏற்பட்டுள்ளது. பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கான இடஒதுக்கீடு சாதி அடிப்படையில் இல்லாமல் நடுநிலையாக்க வேண்டும் என்ற கோரிக்கை இப்போது எழுந்துள்ளது,” என்று கூறினார்.

ஜாதி அரசியல் முக்கியப் பங்கு வகிக்கும் பீகார் போன்ற மாநிலத்தில், இடஒதுக்கீடு உயர்வைக் காக்க ஜே.டி(யு)க்கு அரசியல் கட்டாயம் உள்ளது. ஒன்பதாவது அட்டவணையில் இடஒதுக்கீட்டு உயர்வை சேர்க்க பா.ஜ.க.,வுக்கு அழுத்தம் கொடுக்குமாறு ஜே.டி.(யு) கட்சிக்கு ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) அழுத்தம் கொடுத்து வரும் நேரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வந்துள்ளது. லோக்சபாவில், பா.ஜ.க, முன்னெப்போதையும் விட, ஜே.டி.(யு) மற்றும் தெலுங்கு தேசம் கட்சியை சார்ந்து இருப்பதை ஆர்.ஜே.டி சுட்டிக்காட்டி வருகிறது. இதற்கிடையில், முன்னாள் தேர்தல் வியூகவாதியான பிரசாந்த் கிஷோர் தனது கட்சியைத் தொடங்க உள்ளார், அவர் அனைத்து முதல் ஐந்து சமூகக் குழுக்களுக்கும் விகிதாசார ஒதுக்கீட்டை வழங்குவதாக கூறியுள்ளார்: ”பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (SC-STs), இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBCs), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இ.பி.சி), முஸ்லிம்கள் மற்றும் பொதுப் பிரிவினர்.”

"பிரசாந்த் கிஷோரின் முயற்சியை நாங்கள் நிராகரித்தாலும், கட்சி அமைப்பில் அவரது விகிதாசார பிரதிநிதித்துவ முயற்சியானது ஓ.பி.சி.,கள் மற்றும் இ.பி.சி.,கள் மீது கவனம் செலுத்தும் சோசலிஸ்டுகளின் முக்கிய கொள்கையை மட்டுமே பாதிக்கும்" என்று ஒரு ஜே.டி(யு) தலைவர் கூறினார். “கடந்த 34 ஆண்டுகளாக, சோசலிஸ்டுகள் மாநில மற்றும் ஜாதிக்கு பிந்தைய கணக்கெடுப்பை முன்னெடுத்து வருகின்றனர், இடஒதுக்கீட்டை உயர்த்துவது ஒருவேளை நாங்கள் விளையாடியிருக்கும் கடைசி மாஸ்டர் ஸ்ட்ரோக்காக இருக்கலாம். ஆனால் இப்போது அது சட்டச் சிக்கலில் சிக்கியுள்ளதால், எங்களது அரசியலின் நீண்ட ஆயுளுக்காக பிரச்சினைகளை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்கான வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும்,” என்றும் அந்த தலைவர் கூறினார்.

மாநில அரசு தனது வழக்கை தீவிரமாக வாதாடாததற்கு பெரும்பகுதி பழியை ஏற்க வேண்டும் என்று ஆர்.ஜே.டி கூறியது. இதுகுறித்து ஆர்.ஜே.டி தேசிய செய்தித் தொடர்பாளர் சுபோத் குமார் கூறுகையில், “சுப்ரீம் கோர்ட்டில் மாநில அரசு சரியான வாதங்களை முன்வைக்கும் என்று நாங்கள் கருதுகிறோம். "50% இடஒதுக்கீடு வரம்பு பற்றி பேசும் அதே இந்திரா சாவ்னி வழக்கு, தேசிய சராசரி மிகவும் மோசமாக உள்ள ஒரு மாநிலத்திற்கு சிறப்பு கவனிப்பு வழங்குவது பற்றிய விவாதத்திற்கு இடமளிக்கிறது. பல ஆண்டுகளாக, மனித வளர்ச்சி குறியீட்டின் அடிப்படையில், பீகார் 32வது இடத்தில் உள்ளது. இந்த விவகாரத்தில் நாங்கள் தீவிரமாக இருக்கிறோம்,” என்று கூறினார்.

ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) ஜே.டி(யு) கட்சி அனுபவிக்கும் செல்வாக்கைக் கருத்தில் கொண்டு, நரேந்திர மோடி அரசாங்கத்தின் மீது "அழுத்தம்" மூலம் இடஒதுக்கீடு உயர்வுக்கான ஒன்பதாவது அட்டவணையை உறுதி செய்ய முடியும், என்று ஆர்.ஜே.டி தலைவர் ஒருவர் கூறினார்.

எவ்வாறாயினும், பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசிடமிருந்து இந்தச் சலுகையைப் பெறுவது ஜே.டி(யு) கட்சிக்கு சவாலானது. “நாங்கள் சாதிவாரி கணக்கெடுப்பை ஆதரித்தோம், இடஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் ஒன்பதாவது அட்டவணையில் அதைச் சேர்ப்பதற்கான கோரிக்கை பண்டோராவின் பெட்டியைத் திறக்கக்கூடும், ஏனெனில் இதே போன்ற கோரிக்கைகள் மற்ற மாநிலங்களிலிருந்தும் வரத் தொடங்கும். இது இப்போது மிகவும் தந்திரமான பிரச்சினை,” என்று ஒரு பா.ஜ.க தலைவர் கூறினார்.

பீகார் ஜாதி கணக்கெடுப்பு 2022-2023 இன் கண்டுபிடிப்புகளை அடுத்து நிதிஷ் குமார் தலைமையிலான மாநில அரசு நவம்பர் 2023 இல் இடஒதுக்கீட்டு வரம்பை உயர்த்தியது. அந்த நேரத்தில், ஜே.டி.(யு) எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணியின் ஒரு பகுதியாக இருந்தது, நாடு தழுவிய ஜாதி மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்தியா கூட்டணியின் ஒரு முக்கிய திட்டமாக இருந்தது. இப்போது மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஜே.டி.(யு) இந்த விஷயத்தில் எச்சரிக்கையுடன் நடந்து வருகிறது.


source https://tamil.indianexpress.com/india/after-sc-decision-on-bihar-quota-hike-why-nitish-kumar-has-a-tricky-road-ahead-of-him-6711987

வயநாடு நிலச்சரிவு: 93 உடல்கள் மீட்பு; 128 பேர் காயம்; பினராயி விஜயன் தகவல்

 wayana

கனமழையால் கேரளா மாநிலம் வயநாட்டில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. நிலச்சரிவில் பலர் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது. தொடர் மழை, மோசமான வானிலையால் அங்கு மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. 

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள மேப்பாடி அருகே உள்ள மலைப்பகுதிகளில் இன்று  அதிகாலை (செவ்வாய்க்கிழமை) பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கானோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.  கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (KSDMA) தீயணைப்பு மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் (NDRF) மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 

கனமழை பெய்து வருவதால் மீட்புப் பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மலப்புரம், நீலம்பூர் வழியில் செல்லும் சாலியாறு ஆற்றில் பலர் அடித்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதனிடையே, முண்டக்காய் பகுதியில் பல வீடுகள், கடைகள், வாகனங்கள் இடிபாடுகளுக்குள் புதைந்துள்ளன. 

மேலும், பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிக்கு செல்லும் பாலம் இடிந்து அடித்து செல்லப்பட்டுள்ளதால் மீட்பு பணிகளை மேலும் சிக்கலாக்கியுள்ளது. பேரிடர் ஏற்பட்ட இடத்தில் தற்காலிக பாலம் கட்டவும், ஹெலிகாப்டர் மூலம் மக்களை வெளியேற்றவும், தேவையான ஏற்பாடுகளை செய்யவும் ராணுவத்தின் உதவி கோரப்படும் என முதல்வர் பினராயி விஜயன் உறுதியளித்துள்ளார். 

மத்திய அரசு நிவாரணம் 

தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். நிலைமையை சமாளிக்க மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும் உறுதியளித்தார். பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவரும், வயநாடு முன்னாள் எம்.பி.யுமான ராகுல் காந்தியும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். மீட்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். 

தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  கண்ணூரில் இருந்து நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டிற்கு தேடுதல் மற்றும் மீட்பு பணியை மேற்கொள்வதற்காக ராணுவ வீரர்கள் குழு ஒன்று புறப்பட்டு சென்றது. 

மக்களவையில் ராகுல் பேச்சு 

மக்களவையில் பேசிய ராகுல் காந்தி, கேரளாவில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோருக்கு அறிவிக்கப்பட்டுள்ள இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.  

“வயநாடு மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் நிலச்சரிவுகள் அதிகரித்து வருகின்றன.

இதுபோன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்பட கூடிய பகுதிகளை கண்டறிந்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

ராகுல் வயநாடு பயணம்

கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை காங்கிரஸ் தலைவர்கள் நாளை (ஜூலை 31) பார்வையிட உள்ளனர். காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கேரள எம்.பிக்கள் கேசி வேணுகோபால்,  இடி முகமது பஷீர், எம்.கே ராகவன் ஆகியோர் நாளை காலை வயநாடு செல்கின்றனர்.

வயநாடு நிலச்சரிவில்.நூற்றுக்கும் மேற்பட்டவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. சூரல்மலா கிராமத்தில் உள்ள 200 வீடுகள் மண்ணில் புதைந்துள்ளதாகவும் தகவல். முண்டக்கை டவுன் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

சாலி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அட்டமலை கிராமத்தில், சாலியாற்றில் சடலங்கள் மிதந்து வருவதாக கிராம மக்கள் தகவல். கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து சென்ற இரண்டு ஹெலிகாப்டர்கள் வயநாடு பகுதியில் தரையிறங்குவதில் சிரமம் ஏற்பட்டு கோழிக்கோட்டில் தரையறுக்கப்பட்டுள்ளது. சாலை மார்க்கமாக மீட்பு பணியினர் குழுவினர் வயநாட்டிற்கு பயணம் செய்து வருகின்றனர். 

தமிழ்நாடு, கர்நாடகா மாநில முதல்வர்கள் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு உதவி புரிவதாக அறிவித்துள்ளனர். 

2 தமிழர்கள் உயிரிழப்பு

கேரளாவில் கட்டட வேலைக்கு சென்ற தமிழகத்தின் கூடலூர், புளியம்பாறையை சேர்ந்த காளிதாஸ் என்பவரும், அதே ஊரைச் சேர்ந்த கல்யாணகுமார் என்பவரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர். 

பினராயி விஜயன் பேட்டி

"வயநாடு நிலச்சரிவு சம்பவம் நம் நாடு இதுவரை சந்தித்திராத பெரும் துயரமான நிகழ்வு. நேற்று மிகக் கடுமையான மழை பெய்தது. நேற்று நள்ளிரவு 2 மணிக்கும், 4.10 மணிக்கும்  என 2 முறை நிலச்சரிவு ஏற்பட்டது. இதுவரை 93 பேரின் உடல்களை மீட்டுள்ளோம் இதன் எண்ணிக்கை மாறலாம். 

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டு 128 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்றிரவு தூங்கச் சென்ற பலர் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். 

இன்னும் பலரின் உடல்கள் நிலச்சரிவு இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளது. வயநாட்டில் 45 முகாம்களிலும், மாநிலம் முழுவதும் 118 முகாம்களிலும் 5,531 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தீயணைப்பு படை, என்.டி.ஆர்.எப்., போலீசார் உள்ளிட்டோர் இணைந்து பணியாற்றி வருகின்றனர். ராணுவம் மற்றும் கடற்படையின் பல்வேறு பிரிவுகள் மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்து வருகின்றன. வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் இழப்பை யாராலும் ஈடுசெய்ய முடியாது. பாதிக்கப்பட்ட மக்களுடன் நின்று, நாம் நமது ஆதரவை நல்க வேண்டிய நேரம்." கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார். 


source https://tamil.indianexpress.com/india/heavy-rainfall-kerala-wayanad-landslide-updates-6711497

பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்? தேர்வுத் துறை முக்கிய அறிவிப்பு

 Tn sslc exam

இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 தேர்வில் பங்கேற்ற மாணவர்களில் சிலர் விடைத்தாள் நகல் கேட்டும், மறு கூட்டல், மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களுக்கான விடைத்தாள் நகல்கள் கடந்த வாரம் விநியோகம் செய்யப்பட்டு, தற்போது மறு கூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. அதன்தொடர்ச்சியாக மறு கூட்டல், மறு மதிப்பீடு செய்யப்பட்ட மாணவர்களின் அசல் மதிப்பெண் சான்றுகள் அல்லது மதிப்பெண் பட்டியல் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன. 

இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது; “இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய தேர்வர்களுக்கு (மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவு உட்பட) அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் / மதிப்பெண் பட்டியல் 01.08.2024 அன்று முதல் வழங்கப்படும்.

பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையத்திலும் அசல் மதிப்பெண் (Original Mark Certificates) / (Statement of Mark) சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும், விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


source https://tamil.indianexpress.com/education-jobs/tamilnadu-hsc-12th-exam-mark-certificates-available-from-august-1-in-schools-6712671

செவ்வாய், 30 ஜூலை, 2024

SC, ST பிரிவிற்கு தனித்தனியாக புதிய அமைச்சகங்கள்” – மக்களவையில் திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தல்!

 

எஸ்.சி., எஸ்.டி. பிரிவுக்கென தனித்தனியாக புதிய அமைச்சகங்களை உருவாக்க வேண்டும் என மக்களவையில் விசிக தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இன்று (ஜூலை 29) மக்களவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் உரையாற்றினார். அவர் பேசியதாவது,

“மத்திய பட்ஜெட் விளிம்பு நிலை மக்கள் மற்றும் ஏழை மக்களுக்கு ஏற்ற வகையில் இல்லை. கூட்டணியில் இடம்பெற்று இருக்கக்கூடிய இரண்டு, மூன்று கட்சிகளின் ஆதரவை தொடர்ந்து பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்கான பட்ஜெட்டாகவே இது உள்ளது. அதனால்தான் மத்திய பட்ஜெட்டை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டித்துள்ளார். அதன் காரணமாகத்தான் அவர் நிதி ஆயோக் கூட்டத்தையும் புறக்கணிப்பதாக கூறினார்.

தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளது. நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்ட மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை அவமரியாதை செய்து இருக்கிறார்கள். அதை வன்மையாக கண்டிக்கிறேன். இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் சார்ந்த மாநிலங்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் சம்மரிக்ஷா சிக்‌ஷா திட்டத்தின் கீழ் நிதியை கொடுக்காமல் மிரட்டுகிறார்கள். இது கண்டனத்துக்குரியது.

நிதி வேண்டுமென்றால் புதிய தேசிய கல்விக் கொள்கையில் கையொப்பமிடுங்கள் என மிரட்டுகிறார்கள் இது கண்டனத்திற்குரியது. உர மானியம், உணவு மானியம் போன்றவற்றில் மத்திய அரசு கைவைத்துள்ளதால் விவசாயிகள் நாடு தழுவிய அளவில் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். 100 நாள் வேலை திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை. கல்வித்துறைக்கு தேவையான நிதி ஒதுக்கவில்லை.

உயர்கல்விக்கு இந்த முறை ரூ.10000 கோடி அளவிற்கு நிதி குறைக்கப்பட்டுள்ளது. ஐஐடி நிறுவனத்திற்கு ரூ.60 கோடி குறைக்கப்பட்டுள்ளது. பிரிவு 368ன் கீழ், இயற்றப்படும் சட்டங்கள் ஆங்கிலத்தில் பெயர்கள் இருக்க வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் 3 குற்றவியல் சட்டங்கள் இந்தியில் கொண்டுவரப்பட்டுள்ளது ஏன்? இந்த மாற்றத்தை ஏன் கொண்டு வந்தீர்கள்? என நாட்டு மக்கள் சார்பாக இந்த கேள்வியை எழுப்புகிறேன். 3 குற்றவியல் சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்

நாடு முழுவதும் ஆணவ படுகொலைகள் அதிகரித்து வரும் நிலையில் அதை தடுப்பதற்கென்று தனி சட்டத்தை உருவாக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி.க்கு என தனித்தனியாக புதிய அமைச்சகங்களை உருவாக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள் மற்றும் சிறுபான்மையினருக்காகவும் தனி அமைச்சகங்களை உருவாக்க வேண்டும்” இவ்வாறு திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.


source https://news7tamil.live/sc-st-new-ministries-for-division-separately-thirumavalavan-mp-in-lok-sabha-emphasis.html

வெளிநாடுகளில் கடந்த 5 ஆண்டுகளில் 633 இந்திய மாணவர்கள் உயிரிழப்பு!” – மத்திய அரசு தகவல்!

 

வெளிநாடுகளில் கடந்த 5 ஆண்டுகளில் 633 இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்திவர்தன் சிங் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று (ஜூலை 29) நடந்த மக்களவைக் கூட்டத்தொடரில்,  கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாடுகளில் உயிரிழந்த இந்திய மாணவர்களின் விவரங்களைத் தெரிவிக்குமாறு கேரள காங்கிரஸ் எம்.பி. கொடிக்குன்னில் சுரேஷ் கேள்வி எழுப்பினார். இதனையடுத்து, வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்திவர்தன் சிங், வெளிநாடுகளில் உயிரிழந்த இந்திய மாணவர்களின் விவரங்களை சமர்ப்பித்தார்.

இது குறித்து வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்திவர்தன் சிங் கூறியதாவது, “2019 முதல் 2024 வரையிலான கடந்த 5 ஆண்டுகளில், விபத்துக்கள் மற்றும் வன்முறைத் தாக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 633 இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உயிரிழந்துள்ளனர். அவற்றில் அதிக எண்ணிக்கையிலாக கனடாவில் 172 பேரும், அமெரிக்காவில் 108 ஆகவும் உள்ளது. அடுத்ததாக, இங்கிலாந்தில் 58 பேரும், ஆஸ்திரேலியாவில் 57 பேரும், ரஷ்யாவில் 37 பேரும், ஜெர்மனியில் 24 பேரும், பாகிஸ்தானில் ஒருவர் என மொத்தம் 41 நாடுகளில் இந்திய மாணவர்களின் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

மேலும், அதில் தாக்குதல்கள் மூலம் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.  கனடாவில் 9 பேர், அமெரிக்காவில் 6 பேர், ஆஸ்திரேலியாவில் ஒருவர், சீனாவில் ஒருவர், இங்கிலாந்து மற்றும் கிர்கிஸ்தானில் தலா ஒருவர் தாக்குதல்கள் மூலம் உயிரிழந்தனர்” என்று தெரிவித்தார்.  இதனைத் தொடர்ந்து, வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்களின் பாதுகாப்பை இந்தியத் தூதரகங்கள் உறுதி செய்யவேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது.


source https://news7tamil.live/633-indian-students-lost-their-lives-abroad-in-the-last-5-years-central-government-information.html

மத்திய அரசால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை உறுதி செய்வதே உடனடி பணி - ஸ்டாலின்

 CM MK Stalin x

மத்திய அரசால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை உறுதி செய்வதே எங்களின் உடனடி பணி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை உறுதி செய்வதே எங்களின் உடனடி பணி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜூலை 29) தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் எழுதியுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: 

தி.மு.க. நடத்திய சமரசமற்ற சட்டப் போராட்டத்தால் கடந்த மூன்று கல்வியாண்டுகளில் ஓ.பி.சி. மாணவர்களுக்கு 15,066 மருத்துவம் மற்றும் பல் மருத்துவ இடங்கள் கிடைத்துள்ளன என்பதை பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன்.

கூடுதலாக, சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பு, இந்த குறிப்பிடத்தக்க சாதனையின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் இந்தியா முழுவதும் ஓ.பி.சி. இட ஒதுக்கீடு குறித்த பல ஆக்கபூர்வமான விவாதங்களை வளர்த்துள்ளது.

எங்கள் நிகழ்ச்சி நிரலில் பல விஷயங்கள் இருந்தாலும், பின்தங்கிய சமூகங்களின் விகிதாச்சாரத்தை அடையாளம் காணவும், சமூக நீதியை நிலைநாட்ட நமது உரிமையான பங்கைப் பெறவும் மத்திய அரசால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை உறுதி செய்வதே எங்களின் உடனடி பணியாகும்.

இதை அடைய நாம் ஒன்றிணைவோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

அண்மையில்,  பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழ்நாட்டில் மாநில அரசே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். மேலும், மாநில அரசுக்கே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் உள்ளதாக உச்ச நீதிமன்றமே தீர்ப்பு அளித்துள்ளதாகவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார் என்பது குறிபிடத்தக்கது. 


source https://tamil.indianexpress.com/tamilnadu/cm-mk-stalin-tweet-our-immediate-task-is-to-ensure-that-caste-survey-is-conducted-by-the-central-government-6711318

இலங்கை சிறையில் வாடும் மீனவர்களின் குடும்பங்களுக்கு உதவி தொகை உயர்வு - ஸ்டாலின் அறிவிப்பு

 fisherman stalin .

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படும் நிகழ்வு குறித்தும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவது குறித்தும், இதனால் அவர்களுக்கு ஏற்படும் இன்னல்களையும் மீனவ சங்கப் பிரதிநிதிகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் எடுத்துரைத்தனர்.

இராமநாதபுரம், புதுக்கோட்டைதஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட மீனவ சங்கப் பிரதிநிதிகள் ஜூலை 26-ம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தலைமைச்செயலகத்தில் சந்தித்துப் பேசினர்.

அப்போது, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படும் நிகழ்வு குறித்தும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவது குறித்தும், இதனால் அவர்களுக்கு ஏற்படும் இன்னல்களையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் எடுத்துரைத்தனர். மேலும், தங்களது கோரிக்கைகளை பரிசீலனை செய்து நிறைவேற்றி தருமாறு மீனவ சங்கப் பிரதிநிதிகள் கேட்டுக் கொண்டனர்.

அதோடு, மீனவ சங்கப் பிரதிதிகள், பாம்பன் தூக்குப்பாலம் அருகே கால்வாய் தூர்வாரவேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தனர். மேலும், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 87 மீனவர்களையும், கைப்பற்றப்பட்டுள்ள 175 படகுகளையும் மீட்டுத்தர உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் மீனவ சங்கப் பிரதிநிதிகள் கோரிக்கை வைத்தனர்.

மீனவர் சங்கப் பிரதிநிதிகளின் கோரிக்கைகளை பரிசீலித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் இருக்கும் மீனவர்களின் குடும்பங்களுக்கு தின உதவித்தொகையாக தற்போது நாளொன்றுக்கு 250 ரூபாய் வழங்கப்பட்டு வரும் நிலையில், அவர்களது குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை பாதுகாத்திட தின உதவித்தொகையை நாளொன்றுக்கு 350 ரூபாயாக உயர்த்தி வழங்கிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளின் உரிமையாளர்கள் நலன் கருதி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கடந்த 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் இரு தவணைகளில் 151 படகுகளின் உரிமையாளர்களுக்கு நிவாரண உதவி வழங்க உத்தரவிட்டார்.

அந்த அடிப்படையில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியியிலிருந்து விசைப்படகுகளுக்கு தலா 5 இலட்சம் ரூபாய் மற்றும் நாட்டுப் படகுகளுக்கு தலா 1.5 இலட்சம் ரூபாய் என மொத்தம் 6.74 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது, இலங்கை கடற்படையினரால் 2018 முதல் 2023-ம் ஆண்டு வரை கைப்பற்றப்பட்டு அங்கு நெடுங்காலமாக உள்ள 127 மீட்க இயலாத படகுகளுக்கு கடந்த ஆண்டுகளில் வழங்கிய நிவாரண தொகையினை விசைப்படகுகளுக்கு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.6 லட்சமாக உயர்த்தியும், நாட்டுப்படகுகளுக்கு வழங்கப்பட்டுவந்த 1.5 லட்சம் ரூபாயை 2 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனால்மீனவர்கள் ரூ.6.82 கோடி அளவிற்கு பயனடைவார்கள்.

மேலும், பாம்பன் தூக்குப்பாலம் அருகே தூர்வார வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று தேவையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து அதன் அடிப்படையில் தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 87 மீனவர்களையும், கைப்பற்றப்பட்டுள்ள 175 படகுகளை நேரடியான நிலையான தூதரக நடவடிக்கை மூலமாக மீட்டுத்தரவும், கைப்பற்றப்பட்டுள்ள படகுகளை ஆய்வு செய்ய குழுவினரை அனுமதிக்கவும், இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை, மீனவச் சங்கப் பிரதிநிதிகள் சந்திக்கவும், கூட்டுப் பணிக்குழு கூட்டத்தினை நடத்திடவும் முதலமைச்சர் அவர்கள் இந்தியப் பிரதமர் அவர்களையும், ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்களையும் தொடர்ந்து வலியுறுத்திவருகிறார்.

எனவே, இந்த சூழ்நிலையின் தீவிரத் தன்மையை கருத்தில் கொண்டு, நாடாளுமன்றத்தில் இப்பொருள் குறித்து பேசிடவும், தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு, விரைவில் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வுகாண வலியுறுத்துமாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/cm-mk-stalin-order-to-increase-in-aid-to-families-of-fishermen-languishing-in-sri-lankan-prisons-6711403

பீகாரில் 65 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம்;

 Nitish Kumar Bihar

நவம்பர் 7, 2023 அன்று, நிதிஷ் தலைமையிலான மகாகத்பந்தன் அரசாங்கம் பீகார் ஒதுக்கீட்டை 65 சதவீதமாக உயர்த்தியது.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அரசு வேலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை 50 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக உயர்த்தும் பீகார் அரசின் அறிவிப்பை ரத்து செய்த பாட்னா உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை மறுத்துவிட்டது.

இந்திய தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், மனுவை ஏற்று செப்டம்பரில் விசாரிக்கும் என்றும், ஜூன் 20, 2024 அன்று பாட்னா உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க முடியாது என்றும் கூறியது.

நீதிபதிகள் ஜே பி பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் இந்த பெஞ்சில் இருந்தனர். பீகார் அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வலியுறுத்தினார்.

அப்போது, சத்தீஸ்கர் தொடர்பான இதேபோன்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது என்றார். ஆனால், சிவில் சர்வீசஸ்களில் ஏற்கனவே 68 சதவீதம் பேர் இடஒதுக்கீடு பெற்றவர்கள் என்று உயர் நீதிமன்றம் கண்டறிந்துள்ளதாக தலைமை நீதிபதி சந்திரசூட் சுட்டிக்காட்டினார்.

மேலும், இந்த விஷயத்தை ஒரு பெரிய பெஞ்ச் கொண்டு செல்ல வேண்டியிருக்கலாம் என்று திவான் கூறினார். இதற்கிடையில், யூத் ஃபார் ஈக்வாலிட்டி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபராஜிதா சிங், பாட்னா உயர் நீதிமன்றம் விதி விலக்குக்கு இட்டுச் செல்கிறது என்று கூறியது.

நவம்பர் 7, 2023 அன்று, நிதிஷ் தலைமையிலான மகாகத்பந்தன் அரசாங்கம் பீகார் ஒதுக்கீட்டை 65 சதவீதமாக உயர்த்தியது. இதன் மூலம், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான (EWS) 10 சதவீத இடஒதுக்கீடு கருத்தில் கொள்ளப்பட்டபோது, ​​மாநிலத்தில் இடஒதுக்கீடு திறம்பட 75 சதவீதமாக மாறியது.

பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே வினோத் சந்திரன் மற்றும் நீதிபதி ஹரிஷ் குமார் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், சமத்துவ உரிமையை மீறுவதாகக் கூறி, அரசின் அறிவிப்புகளை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.


source https://tamil.indianexpress.com/india/supreme-court-refuses-to-stay-patna-hc-order-on-bihars-65-pc-quota-for-backward-classes-6710041

ஓ.பி.சி, பழங்குடி, தலித் அதிகாரி யாருமே இல்லை; ராகுல் கேள்விக்கு முகத்தை மூடிய நிர்மலா சீதாராமன்

 Rahul Nirmala facepalm x

அல்வா கிண்டு நிகழ்ச்சியில் ஒரு ஓ.பி.சி, ஒரு பழங்குடி, ஒரு தலித் அதிகாரிகூட இல்லை என்று ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தபோது, முகத்தை மூடிக்கொண்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மத்திய பட்ஜெட் 2024 மீது மக்களவையில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி,  பட்ஜெட்டுக்கு முன்னதாக நடக்கும் பாரம்பரிய ‘அல்வா’ கிண்டும் நிகழ்ச்சியின் புகைப்படத்தைக் காட்டி, அந்தப் புகைப்படத்தில் ஒரு ஓ.பி.சி அதிகாரி, பழங்குடியினர் அல்லது தலித் அதிகாரிகள் யாருமே இல்லை என்று கூறினார். 

மேலும், 2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தயாரிக்கும் போது, ​​மக்கள் தொகையில் 73% உள்ள மக்களின் பிரதிநிதித்துவம் இல்லை என்று காந்தி சுட்டிக்காட்டினார்.

மத்திய பட்ஜெட் 2024 குறித்து மக்களவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பட்ஜெட்டுக்கு முன்பாக அல்வா கிண்டும் பாரம்பரிய நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தைக் காட்டி,  “இந்த புகைப்படத்தில் பட்ஜெட் அல்வா விநியோகிக்கப்படுகிறது. இதில் ஒரு ஓ.பி.சி, பழங்குடி அல்லது தலித் அதிகாரிகளை என்னால் பார்க்க முடியவில்லை. 20 அதிகாரிகள் இந்திய பட்ஜெட்டைத் தயாரித்துள்ளனர்”  என்று ராகுல் காந்தி கூறினார். மேலும், 2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தயாரிக்கும் போது, ​​மக்கள் தொகையில் 73 சதவீதம் உள்ள மக்களின் பிரதிநிதித்துவம் இல்லை” என்று கூறினார்.

பட்ஜெட் முன்பாக அல்வா கிண்டும் நிகழ்ச்சியின் புகைப்படத்தைக் காட்டி, இதில் ஒரு ஓ.பி.சி, ஒரு பழங்குடியினர், ஒரு தலித் அதிகாரி யாரும் இல்லை என்று  ராகுல் காந்தி பேசியபோது, அவையில் இருந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முகத்தை மூடிக்கொண்டார். இந்த நிகழ்வின்போது பதிவான வீடியோ இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டு வருகிறது.  


source https://tamil.indianexpress.com/india/rahul-gandhi-says-no-one-obc-st-and-dalit-officers-in-budget-halwa-ceremony-nirmala-sitharaman-facepalm-6711151

திங்கள், 29 ஜூலை, 2024

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் பணியாளர்களின் உரிமைகள் பாதிக்கப்படக்கூடாது – மாநிலங்களவையில் மசோதா தாக்கல்!

 

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் பணியாளர்களின் உரிமைகள் பாதிக்கப்படக்கூடாது என்பதை வலியுறுத்தி திரிணாமூல் காங்கிரஸ் எம்பி தனிநபர் மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்துள்ளார்.

மத்திய பட்ஜெட் கூட்டத் தொடர் ஜூலை 22ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை 23ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து பட்ஜெட் குறித்து மக்களவை மற்றும் மாநிலங்களையில் எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து நடைபெறும் கூட்டத் தொடரில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தனிநபர் மசோதாக்களை கொண்டு வந்தனர். அந்த வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் பல்வேறு துறைகளில் பணிபுரியும் பணியாளர்களின் வேலை வாய்ப்புகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மௌசம் நூர் சார்பில்  தனிநபர் மசோதா மாநிலங்களவையில் பட்டியலிடப்பட்டுள்ளது.

பணியாளர்களின் உரிமைகள் – செயற்கை நுண்ணறிவு 2023 மசோதா என்ற தலைப்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதாவில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பணியாளர்களை பாகுபடுத்தக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் AI தொழில்நுட்பம் மூலம் எடுக்கப்படும் முடிவோ அல்லது வழங்கப்படும் பணியோ தங்களின் உரிமைகளை பாதிக்கும் வகையில் இருந்தால் அதை நிராகரிக்கும் உரிமையை பணியாளர்களுக்கு வழங்குவதில் வெளிப்படைத் தன்மையை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

ஏ.ஐ. தொழில்நுட்பம் அமலாகும் முன்பே அதுகுறித்த முழு தகவல்களையும் பணியாளர்களிடம் எடுத்துக் கூறி அவர்களின் உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அவர்களிடம் இருந்து நிறுவனங்கள் ஒப்புதல் பெற வேண்டும் எனவும் இந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


source https://news7tamil.live/employees-rights-should-not-be-affected-by-artificial-intelligence-technology-bill-tabled-in-rajya-sabha.html

உயர்கிறதா சர்க்கரை விலை? மத்திய உணவுத் துறைச் செயலர் வெளியிட்ட முக்கிய தகவல்!

 

சர்க்கரையின் குறைந்தபட்ச விற்பனை விலையை உயர்த்துவது குறித்து மத்திய அரசு இன்னும் ஓரிரு நாட்களில் முடிவு செய்ய உள்ளதாக மத்திய உணவுத் துறைச் செயலர் சஞ்சீவ் சோப்ரா தெரிவித்தார்.

கடந்த 2019 முதல் சர்க்கரையின் குறைந்தபட்ச விற்பனை விலை கிலோவுக்கு ரூ.31-ஆக இருந்து வருகிறது.தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் சர்க்கரையின் குறைந்தபட்ச விற்பனை விலையை குறைந்தபட்சம் கிலோவுக்கு ரூ.42-ஆக உயர்த்துமாறு மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், அகில இந்திய சர்க்கரை வர்த்தக சங்கம் டெல்லியில் நடத்திய கருத்தரங்கில் மத்திய உணவுத் துறைச் செயலர் பங்கேற்றார். இதையடுத்து,  அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர் கூறியதாவது :

“சர்க்கரையின் குறைந்தபட்ச விற்பனை விலையை உயர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இந்த விஷயத்தில் நாங்கள் ஓரிரு நாள்களில் முடிவு செய்வோம்.2024-25-ஆம் ஆண்டு பருவத்துக்கான (அக்டோபர்-செப்டம்பர்) சர்க்கரை உற்பத்தி நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 57 லட்சம் ஹெக்டேரில் கரும்பு பயிரிடப்பட்டிருந்தது. இந்த ஆண்டில் கரும்பு பயிரிடப்பட்டுள்ள நிலத்தின் அளவு 58 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது”

இவ்வாறு அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

source https://news7tamil.live/centre-govt-to-decide-soon-on-increasing-minimum-selling-price-of-sugar-union-food-secretary-sanjeev-chopra-interview.html

ஒரே நாளில் 2 அரசியல் பிரமுகர்கள் வெட்டிக் கொலை

 admk bJP KILL

தமிழகத்தில் இருவேறு சம்பவங்களில் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு அரசியல் பிரமுகர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சிவகங்கை மாவட்டத்தில் பா.ஜ.க பிரமுகர் ஒருவர் சனிக்கிழமை இரவு  கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில், அண்டை மாவட்டமான கடலூர் மாவட்டத்தில் சனிக்கிழமை அ.தி.மு.க பிரமுகர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவங்களுக்கு  அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தி.மு.க அரசு மீது கடுமையாக குற்றஞ்சாட்டி விமர்சித்து உள்ளனர். 

இச்சம்பவத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டிய நிலையில், சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் கொலையில் அரசியல் நோக்கம் இல்லை என்று கூறினார்.

சிவகங்கை பா.ஜ.க மாவட்ட செயலாளராக இருந்த செல்வகுமார், தனக்கு சொந்தமான செங்கல் சூளையில் இருந்து இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத கும்பல் அவரைச் சுற்றி வளைத்து, கொடூரமாக தாக்கி கொலை செய்து தப்பி ஓடியது. 

இதையடுத்து செல்வகுமார் உறவினர்கள், கட்சியினர் சம்பவத்தைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அண்ணாமலை உயிரிழந்த செல்வகுமாருக்கு இரங்கல் தெரிவித்தார். 

தமிழகத்தை கொலைகளின் தலைநகரம் என்று கூறிய அண்ணாமலை, ரவுடிகளுக்கு அரசு மீதும், காவல்துறை மீதும் பயம் இல்லை. காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் அரசியல் நாடகம் நடத்துகிறார். 

மு.க.ஸ்டாலினுக்கு இனியும் மாநில முதல்வராக நீடிக்க உரிமை உள்ளதா என்பதை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். 

எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறுகையில், சிவகங்கை மாவட்ட காவல் துறை எஸ்.பி.யிடம் பேசினேன். இது இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை நடந்துள்ளதாக அவர் கூறினார், சந்தேக நபர்களை கைது செய்வதாக உறுதியளித்தார். இதில் எந்த அரசியல் கோணமும் இல்லை. ஆனால், கொலைகள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது என்று பதிவிட்டுள்ளார். 

தமிழகம் சட்டம்- ஒழுங்கை காக்க முடியாவிட்டால் திமுக அரசு பதவி விலக வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில்,  தமிழ்நாட்டில்  ஒரே நாளில் மட்டும் 3 கொடிய அரசியல் படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. கடலூர் நகர அதிமுக  வட்ட செயலாளரான பத்மநாதன் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திருப்பணாம்பாக்கம் என்ற இடத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது  அவர் மீது மகிழுந்தை மோதிச் சாய்த்த  ஒரு கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்திருக்கிறது.  சிவகங்கை மாவட்டம் வேலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் கூட்டுறவு அணி மாவட்ட செயலாளர் செல்வகுமார், இளையான்குடி சாலையில் செல்கும் போது மர்ம ஆட்களால் வெட்டிப் படுகொலை செய்யப் பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் பேரூராட்சியின்  காங்கிரஸ் உறுப்பினர்  உஷாராணியின் கணவர் ஜாக்சனை இரு சக்கர  ஊர்திகளில் வந்த கும்பல் வெட்டிப்படுகொலை செய்திருக்கிறது. தமிழ்நாட்டில் சட்டம் -ஒழுங்கு முழுமையாக தோல்வியடைந்து விட்டது என்பதையே இந்த படுகொலைகள் காட்டுகின்றன.

படுகொலை செய்யப்பட்டவர்கள் அனைவருமே முன்விரோதம் காரணமாகத் தான் படுகொலை செய்யப்பட்டார்கள் என்று கூறி காவல்துறை அதன் கடமையை தட்டிக்கழிக்கக் கூடாது. கொல்லப்பட்ட மூவருக்குமே முன்விரோதம் இருந்திருக்கிறது என்பது உண்மை தான். அரசியலில் இருக்கும் ஒருவருக்கு எவருடனாவது முன்விரோதம் இருந்தால், அவரது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று தான் பொருள் ஆகும். அதனால், அவர்களுக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை ஆய்வு செய்து, அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்ய காவல்துறை தவறி விட்டது.

கொடூரமான அரசியல் படுகொலைகள் ஒரு புறம் இருக்க போதைக் கலாச்சாரமும், அதனால் நிகழும் குற்றச்ச்செயல்களும் தலைவிரித்து ஆடுகின்றன. சென்னை காசிமேடு பகுதியில், 17 வயது சிறுவன் கஞ்சா போதையில்  கையில் கத்தியுடன், இன்னொரு சிறுவனை கொடூரமாக தாக்கும் காணொலி காட்சிகள் இணையதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. தடை செய்யப்பட்ட கஞ்சா போதைப் பொருள், 17 வயதான சிறுவனால்  எளிதில் வாங்கும் அளவுக்கு  தாராளமாக புழக்கத்தில் உள்ளது என்றால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்கொட்டிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின்  தலையாயக் கடமை  சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பது தான். ஆனால், எந்த அச்சமும் இல்லாமல் குற்றவாளிகள் நடமாடுகின்றனர். இதைத் தடுக்க முடியாமல் காவல்துறை திணறிக் கொண்டிருக்கிறது.  தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைவதற்கு இது தான் காரணமாகும். இனியாவது காவல்துறையை தட்டி எழுப்பி , தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்று ஆணையிட வேண்டும். அதை செய்ய முடியா விட்டால்,  தமிழ்நாட்டில் கடந்த  இரு மாதங்களில் நடந்த அரசியல் படுகொலைகளுக்கு பொறுப்பேற்று  தமிழக அரசு பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

 


source https://tamil.indianexpress.com/tamilnadu/2-political-workers-killed-in-tamil-nadu-within-24-hours-opposition-slams-dmk-6709250

ஞாயிறு, 28 ஜூலை, 2024

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு: தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம்!

 

பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் இன்று ஆர்பாட்டம் நடைபெற்றது.  மாவட்ட தலைநகரங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். 

மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டு உள்ளதாகவும், இது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் மாபெரும் துரோகம் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். இந்த நிலையில் நிதி ஆயோக் கூட்டத்தை தான் புறக்கணித்ததற்கான காரணம் குறித்து காணொலி ஒன்றை வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விளக்கம் அளித்துள்ளார்.

இந்த காணொலியில் பேசிய அவர் “ தலைநகரில் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கெடுத்திருக்க வேண்டிய நாளில், மத்திய பாஜக அரசின் வஞ்சனையால், நீதி கேட்டு மக்கள் மன்றத்தில் நிற்கிறேன். நாடாளுமன்றத் தேர்தலில் பல்வேறு மாநில மக்கள் பாஜகவை புறக்கணித்தார்கள். அந்த மாநில மக்களை பழிவாங்குகிற பட்ஜெட்டாக தான் மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட் அமைந்திருக்கிறது.

தேசிய கல்விக் கொள்கையைச் செயல்படுத்துவோம் எனக் கையெழுத்து போட்டால் தான் நிதியை விடுவிப்போம் என்று என மத்திய அரசு அடம்பிடிக்கிறது . மாணவ, மாணவிகளின் கல்வி பாழாகுமே, ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை வருமே என ஒரு துளி கவலை கூட இல்லாமல், தங்களின் கொள்கைத் திணிப்பையும் இந்தித் திணிப்பையும் மட்டுமே முன்னிறுத்தக் கூடியதாகத்தான் பாஜக அரசு இருக்கிறது.” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்த நிலையில் மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எந்தவொரு புதிய அறிவிப்பையும் வெளியிடவில்லை எனக் கூறி திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று ஆர்பாட்டம் நடைபெற்றது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் “ வரி வாங்க தெரியுது.., நிதி கொடுக்க தெரியாதா? “ என்கிற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் மத்திய அரசை கண்டித்து  ஒட்டப்பட்டுள்ளது.

சென்னை சைதாப்பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மேயர் பிரியா , தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி, மயிலை வேலு எம்.எல்.ஏ, உள்ளிட்டோர் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.  சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடந்த ஆர்பாட்டத்தில் திமுக எம்பிக்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, வில்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர்.

தூத்துக்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரான கனிமொழி கருணாநிதி எம்பி தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

இதேபோல தாம்பரத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் திமுக மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கலந்து கொண்டார். மேலும் ஆவடியில் முன்னாள் அமைச்சர் நாசர், மதுரையில் கோ.தளபதி எம்.எல்.ஏ, தேனியில் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

விழுப்புரத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சோமு பேசியதாவது..

“ மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்பெண்ணாக இருந்துக்கொண்டே தமிழ்நாட்டை வஞ்சித்துள்ளார் . 2022-23ம் ஆண்டு ஒவ்வொரு 100 ரூபாய்க்கும், தமிழ்நாட்டிற்கு பகிர்ந்தளிக்கப்பட்ட தொகை ரூ.24 ஆகும். ஆனால் உத்தரப் பிரதேசத்திற்கு ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் 220 ரூபாய் திருப்பியளிக்கப்படுகிறது. அந்தக் காலத்தில் ஆங்கிலேயர்கள் எப்படி நமது நாட்டின் வளத்தை சுரண்டினார்களோ, அதேபோல இப்போது மத்தியில் ஆளுகின்ற பாஜக செயல்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எப்படி விரட்டினோமோ, அதேபோல வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலிலும் விரட்டி அடிப்போம்” என கனிமொழி சோமு எம்பி தெரிவித்துள்ளார்.

source https://news7tamil.live/allegation-that-tamil-nadu-has-been-neglected-in-the-central-budget-dmk-protests-across-tamil-nadu.html