வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கதேச கடற்கரை பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது .
இதனை தொடர்ந்து சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இதனிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்: தமிழகம் நோக்கி வீசும் மேற்குதிசைக் காற்றில் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் நாளைமுதல் 19-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் அதிகபட்சமாக மணிக்கு 65 கி.மீ. வேகத்திலும்16, 17-ம் தேதிகளில் அதிகபட்சமாக 50 கி.மீ. வேகத்திலும் இன்று சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம், என்று தெரிவித்துள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-weather-forecast-chennai-rains-bay-of-bengal-low-pressure-area-cyclone-warning-7067137