செவ்வாய், 17 செப்டம்பர், 2024

தமிழகத்தில் இன்று வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்: நாட்டிலேயே மதுரையில் அதிக வெயில் பதிவு

 

தமிழகத்தில் இன்று வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்: நாட்டிலேயே மதுரையில் அதிக வெயில் பதிவு

17 09 2024
sasa

Tamilnadu Weather Forecast Latest Updates

தமிழகத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது; ’மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் செப்.22 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

தமிழகத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் அதிகபட்ச வெப்பநிலை 100.4 டிகிரி வரை இருக்கும்.

மன்னார் வளைகுடாதென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய குமரிக்கடலில், இன்று முதல் 20 ஆம் தேதி வரைமணிக்கு 65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால்மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம், என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் திங்கள்கிழமை நாட்டிலேயே அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 104.54 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

மேலும்மதுரை நகரம் 103.64, நாகை 102.38, தஞ்சாவூர்ஈரோட்டில் தலா 102.2, சென்னை மீனம்பாக்கம் 101.12, பரமத்தி வேலூர் 100.76, பாளையங்கோட்டைபரங்கிப்பேட்டை தலா 100.4, கடலூர்அதிராம்பட்டினம்திருச்சி தலா 100.04 டிகிரி என மொத்தம் 12 இடங்களில் 100 டிகிரியைக் கடந்துள்ளது. புதுச்சேரியில் 100.76 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-temperature-increase-another-five-days-chennai-weather-rain-updates-7072991