சனி, 28 செப்டம்பர், 2024

இடஒதுக்கீடு கொள்கை; திடீரென தமிழகம் வந்த பி.ஆர்.எஸ் கட்சி தலைவர்கள்: விவரம் என்ன?

 BRS de

தமிழக இடஒதுக்கீடு கொள்கைகள் பற்றி தெரிந்து கொள்ள தெலங்கானாவின் பி.ஆர்.எஸ் கட்சிக் 
குழு நேற்று (வெள்ளிக்கிழமை) தமிழகம் வந்தனர். சென்னை வந்த அவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பு அமைப்பின் பல முக்கிய தலைவர்கள் மற்றும் தமிழக அரசு அதிகாரிகளை சந்தித்துப் பேசினர். 

40 பேர் கொண்ட குழுவினர் இடஒதுக்கீடு கொள்கைகளை ஆய்வு செய்கின்றனர். தமிழ்நாட்டின் சமூக சீர்திருத்த முன்னெடுப்பு தொடர்பான படிப்பினைகளைப் பெறவும், தெலங்கானாவில் பி.சி சமூகங்களை மேம்படுத்துவதற்கான கொள்கைகளை பெற்றும் தெலங்கானா அரசுக்கு பரிந்துரைக்க உள்ளனர்.

தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ், சென்னையில் பி.ஆர்.எஸ் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார்.  பி.ஆர்.எஸின் இந்த முன்னெடுப்புக்கு பாராட்டுகளை தெரிவித்தார். 

மெட்ராஸ் பிரசிடென்சியில் உருவான பி.சி உரிமைகளுக்கான நீண்ட போராட்டத்தைப் பற்றி விளக்கிய அவர், தமிழ்நாட்டின் முற்போக்கான அணுகுமுறைகளை பாராட்டி கூறினார். இதன் மூலம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 69 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் முக்கியத்துவம் பெற்றது என்று கூறினார்.

சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எஸ். மதுசூதனாச்சாரி, முன்னாள் அமைச்சர்கள் வி ஸ்ரீனிவாஸ் கவுட் மற்றும் கங்குலா கமலாகர் மற்றும் ராஜ்யசபா எம்பி வத்திராஜூ ரவிச்சந்திரா உள்ளிட்ட பிஆர்எஸ் தலைவர்கள் தெலுங்கானாவில் பி.சிக்களுக்கு நீதி கிடைப்பதில் பிஆர்எஸ்ஸின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தினர்.

பி.ஆர்.எஸ் குழுவினர் சென்னையில் உள்ள திராவிட கழக (DK) அலுவலகத்திற்குச் சென்று அங்கு கழகத் தலைவர் வீரமணியைச் சந்தித்தனர். திராவிட இயக்கம் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை மேம்படுத்துவதில் கழகத்தின் பங்கு ஆகியவற்றை பற்றி தெரிந்து கொண்டனர். 



source https://tamil.indianexpress.com/tamilnadu/brs-leaders-study-tamil-nadus-bc-reservation-policy-7143916

Related Posts: