செவ்வாய், 24 செப்டம்பர், 2024

அரசின் சிறப்பு திட்டங்களைக்‌ கண்காணிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் - தலைமைச் செயலாளர் உத்தரவு

 

N Muruganandam IAS appointed as Chief Secretary of the Tamil Nadu government Tamil News

தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்ட அமலாக்கத்துறை அறிவிக்கும் திட்டங்களை‌ செயல்படுத்த, கண்காணிக்க மாவட்ட வாரியாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமனம் செய்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்டங்கள் அமலாக்கத்தை கண்காணிக்க மாவட்டம் வாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவு பிறப்பித்துள்ளார். மாதந்தோறும் ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்குச் சென்று ஆய்வுக் கூட்டம் நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்ட அமலாக்கத்துறை அறிவிக்கும் திட்டங்களை‌ செயல்படுத்த, கண்காணிக்க மாவட்ட வாரியாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமனம் செய்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவு பிறப்பித்துள்ளார். சிறப்பு திட்ட அமலாக்கத் துறையால் அவ்வப்போது வழங்கப்படும் அறிவுறுத்தல்களின்படி கண்காணிப்பு  அதிகாரிகள் மாவட்டங்களை மதிப்பாய்வு செய்வார்கள்.
மாதம் ஒருமுறை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு மற்றும் மதிப்பாய்வுகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் கண்காணிப்பு அதிகாரிகள் சிறப்பு திட்ட அமலாக்கத் துறைக்கு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவு பிறப்பித்துள்ளார். 
அரசின் திட்டங்களை கண்காணிக்கவும் செயல்படுத்தவும் மாவட்ட வாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் விவரம் வருமாறு:
அரியலூர் - விஜயலட்சுமி, செங்கல்பட்டு - ராகுல்நாத், கோவை - ஆனந்த், கடலூர் - டி.மோகன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை – பி.என். ஸ்ரீதர், தருமபுரி – திவ்யதர்ஷினி, திண்டுக்கல் – அனீஷ் சேகர், ஈரோடு - வெங்கடேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதே போல, கள்ளக்குறிச்சி – மதுசூதன் ரெட்டி, காஞ்சிபுரம் – கந்தசாமி, கன்னியாகுமரி ஹனிஷ் ஷாப்ரா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கரூர் – தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கிருஷ்ணகிரி – ஷில்பா பிரபாகர் சதீஷ், மதுரை - அருண் தம்புராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 
மயிலாடுதுறை -கவிதா ராமு, நாகை – அண்ணாதுரை, நாமக்கல் – ஆசியா மரியம், பெரம்பலூர் – லட்சுமி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை -சுந்தரவல்லி, ராமநாதரபும் – வள்ளலார், ராணிப்பேட்டை மரியம் பல்லவி பல்தேவ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/chief-secretary-appointed-ias-officers-district-wise-to-monitor-special-projects-7089120