புதன், 25 செப்டம்பர், 2024

492 பேர் பலி; தீவிரமடையும் தாக்குதல்: லெபனான் மக்கள் வெளியேற இஸ்ரேல் பிரதமர் வலியுறுத்தல்

 25 09 2024

Israel-Hezbollah

லெபனான் நாட்டில் ஹிஸ்புல்லா அமைப்பைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 492 பேர் கொல்லப்பட்டனர். இதில் 35 குழந்தைகள், 58 பெண்கள் உயிரிழந்தனர். 1,645 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

2006-க்குப் பிறகு லெபனானில் நடந்த மிக மோசமான தாக்குதல் இதுவாகும். இஸ்ரேல்- ஏற்கனவே பாலஸ்தீன அமைப்பான ஹமாஸ் உடன் போர் புரிந்து வருகிறது. இந்நிலையில், லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு தனது நட்பு நாடான ஹமாஸுக்கு ஆதரவாக செயல்பட்டு செலுத்துகிறது, அங்கு ஹெஸ்பொல்லா தனது நட்பு நாடான ஹமாஸுக்கு ஆதரவாக இஸ்ரேலுக்குள் ராக்கெட்டுகளை வீசுகிறது. இதன் காரணமாக ஹிஸ்புல்லாவை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. 

இந்நிலையில், தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீடியோ மூலம் லெபனான் மக்களுக்கு செய்தி கூறினார். அதில், “இஸ்ரேலின் போர் உங்களோடு இல்லை. இது ஹிஸ்புல்லா உடனான தாக்குதல் ஆகும்.  நீண்ட காலமாக, ஹிஸ்புல்லா உங்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்துகிறது. 

உங்கள் உயிருக்கும் உங்கள் அன்புக்குரியவர்களின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்த ஹிஸ்புல்லாவை அனுமதிக்காதீர்கள். நீங்கள் (லெபனான் மக்கள்) இப்போதே நாட்டில் இருந்து வெளியேறுங்கள். போர் முடிந்த பின் நீங்கள் மீண்டும் பாதுகாப்பாக வீடு திரும்பலாம்” என்று நெதன்யாகு அதில் கூறியுள்ளார். 



source https://tamil.indianexpress.com/india/israel-hezbollah-war-netanyahu-urges-lebanese-civilians-to-evacuate-7089544