செவ்வாய், 17 செப்டம்பர், 2024

அதிக கட்டணம் வசூலிப்பு: சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு ம.ம.க போராட்டம்

 

16 09 2024

TOlgate

சுங்கச்சாவடியில் அதிக கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், செங்கல்பட்டு அருகே, பரனூர் சுங்கச்சாவடியில், போராட்டம் காரணமாக சுங்கச்சாவடியில், கட்டணம் வாங்காமல் அனுமதிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் ஏற்கெனவே 67 சுங்கச்சாவடிகள் உள்ள நிலையில், சமீபத்தில் விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் 3 புதிய சுங்கச்சாவடிகளைத் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது இதன் மூலம் சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் பத்துக்கும் மேற்பட்ட சுங்கச் சாவடிகள் அதன் தவணை காலாவதி ஆன பின்பு கூட தொடர்ந்து கட்டண வசூலில் தொடர்ந்து ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இந்த சுங்க சாவடி கட்டண உயர்வை கண்டித்து குறிப்பிட்ட 7 சசுங்கச் சாவடிகளை முற்றுகையிடும் போராட்டத்தை மனிதநேய மக்கள் கட்சி இன்று நடத்தியது. இந்த போராட்டத்தின் காரணமாக, செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில், கட்டணம் வாங்காமல் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் பரனூர், வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா, விழுப்புரம்மாவட்டம் விக்கிரவாண்டி, கோவை மாவட்டம்                              கருமத்தம்பட்டி, திருச்சி மாவட்டம் துவாக்குடி, மதுரை மாவட்டம் கப்பலூர், நெல்லை மாவட்டம் நாங்குநேரி என ஏழு சுங்கச் சாவடிகளை முற்றுகையிடும் போராட்டத்தை மனிதநேய மக்கள் கட்சி இன்று நடத்தியது.

இதன் தொடர்ச்சியாக இன்று மாலை 5 மணி அளவில் கோவை மாவட்டத்தில் உள்ள கருமத்தம்பட்டி செங்கம்பள்ளி சுங்கச் சாவடியை முற்றுகையிடும் போராட்டம்  இன்று நடைபெற்றது. அரசு நிர்ணையித்த விதிகளின்படி பல சுங்கச்சாவடிகளில் ஆம்புலன்ஸ் விபத்து நடந்தால் உடனடியாக நிவாரணத்திற்கும் சிகிச்சைக்கும் வருவதற்கான கட்டமைப்புகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருப்பதில்லை.

அதேபோல் காலவதியான சுங்கச்சாவடிகள் மூடப்பட வேண்டும், ஆண்டுதோறும் இரு முறை கட்டண உயர்வு கைவிடப்பட வேண்டும். புதிதாக தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகள் திறக்கப்பட கூடாது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கருமத்தம்பட்டி செங்கம்பள்ளி சுங்கச்சாவடியை முற்றுகை போராட்டம்  நடைபெற்றது. இந்த முற்றுகை போராட்டத்தை தொடர்ந்து ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர்.

பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-mmk-party-protest-against-tollgate-rate-in-crease-update-in-tamil-7072739