செவ்வாய், 31 மார்ச், 2026

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு: 2-ஆம் கட்டத்தில் சாதி விவரங்கள் சேகரிப்பு; ஏப்ரல் 1 முதல் ஆன்லைன் பதிவு தொடக்கம்

 எழுதியவர்: ஹரிகிஷன் சர்மா

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் வரும் புதன்கிழமை (ஏப்ரல் 1) தொடங்க உள்ள நிலையில், சாதி வாரிக் கணக்கெடுப்பு இரண்டாம் கட்டமான மக்கள் தொகை கணக்கீட்டின் (Population Enumeration) போது நடத்தப்படும் என்று மத்திய அரசு திங்கள்கிழமை அறிவித்துள்ளது.

திங்கள்கிழமை அன்று டெல்லியில் நடைபெற்ற  செய்தியாளர் சந்திப்பில் இந்தியப் பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் மிருத்யுஞ்சய் குமார் நாராயண், இந்த தேசிய அளவிலான பணியின் இரு கட்டம் குறித்து விளக்கினார்:

முதல் கட்டம் (வீடுகள் பட்டியல்):

இதில் வீட்டின் நிலை, குடும்ப விவரங்கள், குடிநீர், கழிப்பறை, மின்சாரம், சமையல் எரிபொருள், இணையம் போன்ற வசதிகள் மற்றும் ரேடியோ, டிவி, கணினி, இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் போன்ற சொத்துக்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்படும்.

இரண்டாம் கட்டம் (மக்கள் தொகை கணக்கீடு):

இதில் நபர்களின் எண்ணிக்கை, பெயர், வயது, பாலினம், திருமண நிலை, சாதி, மதம், கல்வி, மொழி, ஊனம், இடம்பெயர்வு, தொழில் மற்றும் திருமணமான பெண்களின் மகப்பேறு விவரங்கள் சேகரிக்கப்படும்.

"சாதி வாரிக் கணக்கெடுப்பு மக்கள் தொகை கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டத்தின் போது செய்யப்படும்," என்று நாராயண் கூறினார். முதல் கட்டத்திற்கான வினாக்கள் இந்த ஆண்டு ஜனவரி 22 அன்று அறிவிக்கப்பட்டன, இரண்டாம் கட்டத்திற்கான கால அட்டவணை மற்றும் வினாப்பட்டியல் பின்னர் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஏப்ரல் 1 முதல் சுய-கணக்கெடுப்பு

ஏப்ரல் 1 முதல் பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து இணையதளம் வாயிலாக விவரங்களைப் பதிவு செய்யும் 'சுய-கணக்கெடுப்பு' (Self-enumeration) முறை தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 16 முதல் கணக்கெடுப்பு அதிகாரிகள் நேரில் வீடு வீடாகச் சென்று தகவல்களைச் சேகரிப்பார்கள். 2026 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 30 நாட்களில் முதல் கட்டப் பணிகள் முடிக்கப்பட வேண்டும்.

நாடு முழுவதும் உள்ள 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், 784 மாவட்டங்கள் மற்றும் சுமார் 6.4 லட்சம் கிராமங்களை இந்தக் கணக்கெடுப்பு உள்ளடக்கும்.

தேசிய மக்கள் தொகை பதிவேட்டை (NPR) புதுப்பிப்பது குறித்துக் கேட்டபோது, தற்போது வரை அது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று நாராயண் பதிலளித்தார்.

மேற்கு வங்க அரசு இன்னும் கணக்கெடுப்பு அறிவிப்பை வெளியிடாதது குறித்துப் பேசிய அவர், "மேற்கு வங்கம் இன்னும் அறிவிப்பை வெளியிடவில்லை. இது குறித்து அவர்களுடன் ஆலோசித்து வருகிறோம். சட்டப்பூர்வத் தேவையான இந்த அறிவிப்பை அந்த மாநிலம் வெளியிடும் என்று நம்புகிறோம். முதல் கட்டத்திற்கு 2026 செப்டம்பர் வரை எங்களுக்கு அவகாசம் உள்ளது," என்றார்.

இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையில் 69-வது வரிசையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு மத்திய அரசின் அதிகாரப் பட்டியலில் (Union Subject) உள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 16 அன்று, 2027 கணக்கெடுப்பை நடத்தும் தனது விருப்பத்தை அறிவித்து மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்தியப் பதிவாளர் ஜெனரல் அலுவலகம் (RGI) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு மார்ச் 1, 2027 கணக்கெடுப்புத் தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், லடாக், ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களின் பனிப்பொழிவு உள்ள பகுதிகளுக்கு அக்டோபர் 1, 2026 கணக்கெடுப்புத் தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



source https://tamil.indianexpress.com/india/census-2027-schedule-india-self-enumeration-april-1-caste-census-2027-registrar-general-of-india-11435712

ஹார்முஸ் ஜலசந்தியை திறக்கவில்லை என்றால்... ஈரானுக்கு பகிரங்க மிரட்டல்

 

ஹார்முஸ் ஜலசந்தியை திறக்கவில்லை என்றால்... ஈரானுக்கு பகிரங்க மிரட்டல்

கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி அமெரிக்கா - இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஈரான் மீது கூட்டு தாக்குதல் நடத்த தொடங்கியது. இந்த தாக்குதலானது 4 வாரங்களை கடந்து நடந்து வருகிறது.  இந்த போரால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் தொடர்கிறது. மேலும், ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளதால் சர்வதேச அளவிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. 
30 03 2026
இந்த போரை முடிவுக்குக் கொண்டு வரப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டாலும் கூட அதில் பெரிய முன்னேற்றம் எதுவும் இல்லை. இதற்கிடையே வளைகுடா போர் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சில தகவல்களை கூறியுள்ளார். ஈரானில் அமெரிக்கா நடத்தி வரும் ராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவர, தீவிரப் பேச்சுவார்த்தைகள் நடப்பதாக டிரம்ப் தெரிவித்தார். 

விரைவில் ஓர் ஒப்பந்தம் எட்டப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். அதேநேரம் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை அல்லது ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படவில்லை என்றால் ஈரான் மீது மீண்டும் அமெரிக்கா மிகப் பெரிய ஒரு தாக்குதலை நடத்தும் என அவர் எச்சரித்தார்.

இது தொடர்பாக ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்ட டிரம்ப், "ஈரானில் தங்கள் ராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வர, ஒரு புதிய, நியாயமான பேச்சுவார்த்தையில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதில் இப்போது பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், விரைவில் ஒரு ஒப்பந்தம் எட்டப்படவில்லை என்றால், அல்லது ஹார்முஸ் ஜலசந்தி உடனடியாக திறக்கப்படவில்லை என்றால். ஈரானின் அனைத்து மின் உற்பத்தி நிலையங்கள், எண்ணெய் கிணறுகள், கார்க் தீவு மற்றும் கடல் நீர் சுத்திகரிப்பு ஆலைகள் ஆகியவற்றை அமெரிக்கா முழுமையாகத் தகர்க்கும்.

இதுவரை நாங்கள் இதன் மீது ஒரு தாக்குதல் கூட நடத்தாமல் இருந்து வருகிறோம். ஈரானின் 47 ஆண்டுக்கால பயங்கரவாத சகாப்தத்தில் எங்கள் பல வீரர்களைக் கொன்றதற்கான பதிலடியாகவே இந்த நடவடிக்கைகள் இருக்கும்" என்று டிரம்ப் பதிவிட்டுள்ளார். மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் டிரம்பின் இந்த பதிவு பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.


source https://tamil.indianexpress.com/international/trump-warns-iran-open-hormuz-or-face-strikes-read-full-story-11438054

துருக்கிக்குள் நுழைந்த ஈரான் ஏவுகணை; சுட்டு வீழ்த்திய நேட்டோ

 

துருக்கிக்குள் நுழைந்த ஈரான் ஏவுகணை; சுட்டு வீழ்த்திய நேட்டோ

Israel War News

துருக்கிக்குள் நுழைந்த ஈரான் ஏவுகணை; சுட்டு வீழ்த்திய நேட்டோ

ஈரான் குடியரசு ஆட்சியாளர்கள் அணு ஆயுதங்களை சேகரித்து வைத்துளளதாக கூறி அமெரிக்கா, இஸ்ரேல் ராணுவம் கூட்டு சேர்ந்து ஈரான் மீது தாக்குதல் தொடுத்தது. வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவ மையங்கள் மீது ஈரானும் பதிலடி தாக்குதல் நடத்தியது. மேலும், ஹார்மோஸ் நீரிணையை மூடியுள்ளது. இதன் காரணமாக, வரலாற்றில் முதற்முறையாக வணிக கப்பல் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

உலகளவில் பயன்படுத்தப்படும் கச்சா எண்ணெயில் 20%, இயற்கை எரிவாயுவில் 20% மற்றும் எல்பிஜி (LPG) விநியோகத்தில் 20% இந்த ஒரு பாதை வழியாக நடைபெறுகிறது. எண்ணெய், எரிவாயு தனிமனித நுகர்வு பொருட்களாக மட்டுமல்லாமல் உணவுப் பொருள், விவசாயிகளுக்கு தேவையான உரம், மருத்துவ உபகரணங்கள், தொழில் உற்பத்தி என அனைத்திற்கும் உயிர்நாடியாக உள்ளது. அமெரிக்காவின் அத்துமீறலை உலக பொருளாதார கட்டமைப்பில் விளைவுகளை ஏற்படுத்தும் விதமாக ஈரான் தனது நடவடிக்கைகளை துரிதப்படுத்தியது.

இதற்கிடையே, ஹார்மோஸ் நீரிணையை உடனடியாக திறக்கவிட்டால். ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள், எண்ணெய் கிணறுகள், கார்க் தீவு மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களை அமெரிக்கா அழிக்கும் என ட்ரம்ப் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், ராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து  ஈரானின் மிகவும்  இணக்கமான போக்கைக் கொண்ட புதிய நிர்வாகத்துடன் அமெரிக்கா தீவிர பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. இதில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும், ஏதேனும் ஒரு காரணத்தினால் உடன்பாடு எட்டப்பட வில்லை என்றாலோ, ஹோர்முஸ் நீரிணை வணிக கப்பல் போக்குவரத்திற்கு உடனடியாகத் திறக்கப்படாமல் இருந்தாலோ, ஈரானின் அனைத்து மின் உற்பத்தி நிலையங்களையும், எண்ணெய் கிணறுகளையும், கார்க் தீவையும், கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களையும்  தாக்குதல்கள் நடத்தி அழித்து ஒழிப்போம். கடந்த 47 ஆண்டுகால ஈரானின் பயங்கரவாத ஆட்சியில் கொல்லப்பட்ட அமெரிக்க வீரர்களுக்கான கைமாறாக (Retribution) இந்த நடவடிக்கை அமையும் என்று தெரிவித்தார்.

30 03 2026 

இந்த போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 115 டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. போர்க்களத்தில், ஈரானின் தப்ரிஸ் பகுதியில் உள்ள பெட்ரோ கெமிக்கல் ஆலை மற்றும் டெஹ்ரானின் மின்சாரக் கட்டமைப்புகள் மீது அமெரிக்க-இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. இதற்குப் பதிலடியாக ஈரான் நடத்திய தாக்குதலில் தெற்கு இஸ்ரேலில் உள்ள ஒரு தொழிற்பேட்டை பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதற்கிடையே, குவைத்தில் உள்ள மின் உற்பத்தி மற்றும் நன்னீர் ஆலை மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இந்தியத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

வளைகுடா நாடுகள் தங்கள் வான்பரப்பிற்குள் நுழைந்த ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைத் தடுத்து அழித்துள்ளதாகத் தெரிவித்துள்ளன. மறுபுறம், பதற்றத்தைத் தணிக்க பாகிஸ்தான், எகிப்து, துருக்கி மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் இஸ்லாமாபாத்தில் கூடி ஆலோசனை நடத்தினர். இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளை வரும் நாட்களில் நடத்தத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இருப்பினும், அமெரிக்கத் தரைப்படை வீரர்களின் வருகைக்காகத் தங்கள் படைகள் காத்திருப்பதாக ஈரான் எச்சரித்துள்ளதுடன், கூடுதல் படைகளை அமெரிக்கா இப்பிராந்தியத்தில் நிலைநிறுத்தி வருவதால் சூழல் தொடர்ந்து பதற்றமாகவே நீடிக்கிறது.



source https://tamil.indianexpress.com/india/iran-war-news-live-updates-trump-iran-kharg-island-oil-price-pakistan-israel-11433864

திங்கள், 30 மார்ச், 2026

ஈரான் எண்ணெய் வளத்தை கைப்பற்றுவதே எனது விருப்பம் - டிரம்ப் கருத்து

 

ஈரான் எண்ணெய் வளத்தை கைப்பற்றுவதே எனது விருப்பம் - டிரம்ப் கருத்து


ஈரான், அமெரிக்கா - இஸ்ரேல் இடையேயான போர் 4 வாரங்களை கடந்து நடந்து வருகிறது. போரை முடிப்பது தொடர்பான ஒப்பந்தத்தை ஈரானும் அமெரிக்காவும் மேற்கொண்டு வருவதாக பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் எண்ணெய் வளத்தை கைப்பற்ற விரும்புவதாகவும், அந்நாட்டின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவை  அமெரிக்கா கைப்பற்றக்கூடும் என்றும் பைனான்சியல் டைம்ஸ் (Financial Times) நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது, "உண்மையைச் சொல்லப்போனால், ஈரானின் எண்ணெயைக் கைப்பற்றுவதுதான் எனக்கு மிகவும் பிடித்தமான விஷயம். ஆனால் அமெரிக்காவில் உள்ள சில முட்டாள்கள், நீங்கள் ஏன் அப்படிச் செய்கிறீர்கள்? என்று கேட்கிறார்கள். அவர்கள் முட்டாள்கள்" என்று கூறினார். மேலும்,  "ஒருவேளை நாம் கார்க் தீவைக் கைப்பற்றலாம், அல்லது கைப்பற்றாமலும் போகலாம். எங்களிடம் நிறைய வாய்ப்புகள் உள்ளன," என்றார்.

ஈரானின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டபோது, "அவர்களிடம் எந்தப் பாதுகாப்பும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. நாம் அதை மிக எளிதாகக் கைப்பற்றிவிட முடியும்” என்று குறிப்பிட்டார். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா தனது ராணுவ இருப்பை அதிகரித்து வரும் வேளையில் இந்த நேர்காணல் வெளியாகியுள்ளது. 

சமீபத்திய தாக்குதல்களுக்குப் பிறகு ஈரானின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் குறித்தும் டிரம்ப் கருத்து தெரிவித்தார். அதாவது, “முஜ்தபா கமேனி இறந்துவிட்டார் அல்லது மிகவும் மோசமான நிலையில் இருக்கிறார். அவரைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை” என்று கூறினார்.

30 03 2026 

source https://tamil.indianexpress.com/international/trump-says-my-favourite-thing-is-to-take-the-oil-in-iran-11433755

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: தண்டனை விவரங்கள் அறிவிப்பு

 

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: தண்டனை விவரங்கள் அறிவிப்பு 30 03 2026

Sathankulam case judgement Tuticorin Custodial Death Madurai bench of madras High court Tamil News

சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ் - மகன் பென்னிக்ஸ் கொலை வழக்கில் 9 போலீசாரும் குற்றவாளிகள் என்று நீதிபதி முத்துகுமரன் தீர்ப்பு வழங்கி அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.

கடந்த 2020-ம் ஆண்டு சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல் துறையினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். விசாரணையின் போது காவல்துறையினர் நடத்திய மிகக் கடுமையான தாக்குதலால் இருவரும் படுகாயமடைந்து, அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் மனித உரிமை ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, இதன் விசாரணை சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது. தீவிர விசாரணைக்குப் பிறகு, அப்போதைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 9 காவல்துறையினர் இந்த வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. விசாரணையின் போது, சம்பவத்தன்று காவல் நிலையத்தில் பணியில் இருந்த பெண் காவலர்கள் ரேவதி, பியூலா மற்றும் சார்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் மிக முக்கிய சாட்சியங்களாகத் திகழ்ந்தனர். இந்த வழக்கில் மொத்தம் 100-க்கும் மேற்பட்ட சாட்சியங்கள் விரிவாக விசாரிக்கப்பட்டன. சுமார் 6 ஆண்டுகளாகத் தொய்வின்றி நடைபெற்ற இந்த விசாரணையின் போது, கைது செய்யப்பட்ட காவல்துறையினர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுக்கள் அனைத்தையும் மாவட்ட நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை அனைத்து நிலைகளிலும் தள்ளுபடி செய்தன.

அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிபதி முத்துகுமரன் அவர்கள் வழக்கின் தீர்ப்பை மார்ச் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தார். அதன்படி, அன்றைய தினம் நீதிபதி முத்துகுமரன் சாத்தான்குளம் தந்தை - மகன் லாக்கப் மரண வழக்கில் தீர்ப்பை வாசித்தார். அப்போது அவர் தனது தீர்ப்பில், "உயிரிழந்த ஜெயராஜ்க்கு இருதயம் மற்றும் நுரையீரல் பிரச்சனை இருந்துள்ளது. ஆனால், கம்பு கம்பி போன்ற ஆயுதங்களால் தாக்கியதாலே இறப்பு நடந்துள்ளதாக அரசு மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனையில் கூறியுள்ளனர். நாம் அடித்துப் பழகுவதற்கு அப்பா மகன் கிடைத்துள்ளனர்; இவர்களை அடித்து நாம் பயிற்சி எடுத்துக் கொள்வோம் என போலீசார் அவர்களுக்குள் பேசிக் கொண்டுள்ளனர் என சி.பி.ஐ குற்றப் பத்திரிகையில் தெரிவித்துள்ளது" என்று அவர் தெரிவித்தார். 

மேலும், சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ் - மகன் பென்னிக்ஸ் கொலை வழக்கில் 9 போலீசாரும் குற்றவாளிகள் என்று நீதிபதி முத்துகுமரன் தீர்ப்பு வழங்கி அதிரடி உத்தரவை பிறப்பித்தார். குற்றவாளிகளுக்கான தண்டனை விபரங்கள் இன்று (மார்ச் 30) அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். 


source https://tamil.indianexpress.com/tamilnadu/sathankulam-case-judgement-custodial-death-madurai-bench-of-madras-high-court-tamil-news-11433677

அமெரிக்கா, ஈரான் பேச்சுவார்த்தை நடத்த சீனா ஆதரவு - பாகிஸ்தான் அமைச்சர் தகவல்

 

அமெரிக்கா, ஈரான் பேச்சுவார்த்தை நடத்த சீனா ஆதரவு - பாகிஸ்தான் அமைச்சர் தகவல் 29 03 2026

iran

US - Israel - Iran War News Today Live Updates: மார்ச் 29 அன்று இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய புதிய தாக்குதலைத் தொடர்ந்து, நாட்டின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள நெகேவ் பாலைவனத்தில் உள்ள ஒரு தொழிற்சாலை வளாகம் தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர், இதில் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று இஸ்ரேலின் தேசிய அவசர சேவையான மாகன் டேவிட் அடோம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் சவூதி அரேபியா, துருக்கி மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்றது. பிராந்திய மோதல்கள் குறித்து தானும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியனும் "விரிவான கலந்துரையாடல்களை" நடத்தியதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறினார்.


source https://tamil.indianexpress.com/international/iran-war-today-news-live-updates-dubai-abu-dhabi-uae-kuwait-airport-drone-strike-11431464

சனி, 28 மார்ச், 2026

இந்திய வான் எல்லைக்கு 'இரும்பு கவசம்'

 

India Russia Defence Deal Indian Air Force Modernization Rajnath Singh Indian Army New Weapons 2026 S 400 Missile System India

India Russia Defence |Deal | Indian Air Force Modernization | S 400 Missile System India

எழுதியவர்: அமிர்தா நாயக் தத்தா

இந்தியாவின் வான்வழிப் பாதுகாப்பு மற்றும் ராணுவக் கட்டமைப்பை உலகத் தரத்திற்கு உயர்த்தும் நோக்கில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் (DAC), சுமார் ரூ.2.38 லட்சம் கோடி மதிப்பிலான பல்வேறு ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை வாங்க வெள்ளிக்கிழமை அன்று ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் மிக முக்கிய அம்சமாக, ரஷ்யாவிடமிருந்து கூடுதலாக ஐந்து எஸ்-400 நீண்ட தூர வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியாவிற்கு வருகை தந்ததைத் தொடர்ந்து, இந்த ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்தன. ஏற்கனவே 'ஆபரேஷன் சிந்து' நிகழ்வின் போது எஸ்-400 ஏவுகணைகள் தங்களின் அபாரமான திறமையை நிரூபித்ததைத் தொடர்ந்து, மேலும் ஐந்து அமைப்புகளை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது.

தொலைதூரத்திலிருந்து வரும் எதிரி நாட்டு ஏவுகணைகள் மற்றும் போர் விமானங்களை முன்கூட்டியே கண்டறிந்து அழிக்கும் திறன் இந்த S-400 அமைப்பிற்கு உண்டு.

2018-ல் போடப்பட்ட ஒப்பந்தப்படி, ஏற்கனவே 3 ஏவுகணை தொகுப்புகள் இந்தியாவிடம் உள்ளன. அவை பாகிஸ்தான் மற்றும் சீன எல்லைப் பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள தொகுப்புகள் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விமானப்படையை நவீனப்படுத்தும் புதிய விமானங்கள்

இந்திய விமானப்படையின் முதுகெலும்பாக விளங்கும் பழைய ஏஎன்-32 மற்றும் ஐஎல்-76 ரகப் போக்குவரத்து விமானங்களுக்குப் பதிலாக, புதிய இடைநிலை ரகப் போக்குவரத்து விமானங்களை (Medium Transport Aircraft) வாங்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. இது ராணுவ வீரர்களையும் தளவாடங்களையும் விரைவாக ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு கொண்டு செல்ல உதவும்.

மேலும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் (DRDO) உருவாக்கப்படும் ஆளில்லாத் தாக்குதல் போர் விமானங்களை (Remotely Piloted Strike Aircraft) வாங்குவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த அதிநவீன விமானங்கள் எதிரி நாடுகளின் எல்லைக்குள் ரகசியமாகக் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளவும், துல்லியமான தாக்குதல்களை நடத்தவும் உதவும். இது செயல்பாட்டிற்கு வர சுமார் 7 முதல் 8 ஆண்டுகள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், சுகோய்-30 போர் விமானங்களின் எஞ்சின்களைப் புதுப்பிப்பதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது அந்த விமானங்களின் ஆயுட்காலத்தை அதிகரிக்கும்.

தரைப்படை மற்றும் கடலோரக் காவல் படைக்கான புதிய வரவுகள்

தரைப்படையைப் பொறுத்தவரை, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தனுஷ் பீரங்கி அமைப்புகள் மற்றும் டாங்கிகளைத் துளைக்கும் அதிநவீன வெடிமருந்துகள் வாங்கப்பட உள்ளன. இவை கரடுமுரடான நிலப்பரப்புகளிலும் நீண்ட தூரத்தில் உள்ள இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டவை.

கடலோரப் பாதுகாப்பை உறுதி செய்ய, கடலோரக் காவல் படைக்கு அதிக எடை கொண்ட 'ஏர் குஷன்' (Air Cushion) வாகனங்கள் வாங்கப்பட உள்ளன. இவை அதிவேக ரோந்துப் பணி மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும்.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான இந்த கவுன்சில், பெரிய அளவிலான பாதுகாப்பு கொள்முதல்களுக்கு முதற்கட்ட ஒப்புதல் அளிக்கும் முக்கிய அமைப்பாகும். 2025-26 நிதியாண்டில் மட்டும் இதுவரை ரூபாய் 6.73 லட்சம் கோடி மதிப்பிலான 55 முன்மொழிவுகளுக்கு கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்திய பாதுகாப்பு வரலாற்றில் ஒரே நிதியாண்டில் இவ்வளவு பெரிய தொகைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.

கூடுதலாக, தரைப்படைக்காக 'துங்குஸ்கா' வான் பாதுகாப்பு ஏவுகணைகளை ரஷ்யாவின் ரோசோபோரோன் எக்ஸ்போர்ட் நிறுவனத்திடமிருந்து ரூபாய் 445 கோடியில் வாங்கவும், கடற்படையின் பி8ஐ ரக விமானங்களைப் உள்நாட்டிலேயே பராமரிக்க ரூபாய் 413 கோடியில் போயிங் இந்தியா நிறுவனத்துடன் ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது

இது 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதோடு, இந்தியாவின் இறையாண்மையை வலுப்படுத்தும் ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

source https://tamil.indianexpress.com/india/india-russia-defence-deal-indian-air-force-modernization-rajnath-singh-indian-army-new-weapons-2026-s-400-missile-system-india-11428534

தமிழ்நாட்டில் 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்; தேர்தல் ஆணையம் உத்தரவு

 

தமிழ்நாட்டில் 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்; தேர்தல் ஆணையம் உத்தரவு

Election Comm

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பணி இட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது தமிழ்நாட்டில் 4 மாவட்ட எஸ்.பிக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களமிறங்கி பணியாற்றி வரும் நிலையில், தொகுதிப்பங்கீடு, மக்கள் சந்திப்பு, வேட்பாளர் அறிவிப்பு, வேட்புமனு தாக்கலுக்கு தயாராவது என தமிழக அரசியல் களம் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், வழக்கத்திற்கு மாறாக இந்த தேர்தலில் 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. 

தி.மு.க. கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்க வைக்கவும், அ.தி.மு.க. கூட்டணி கடந்த தேர்தலில் சந்தித்த தோல்வியை சரி செய்யவும், முயற்சித்து வரும் நிலையில், நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் நிலையில், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் முதல்முறை தேர்தலை சந்திக்கிறது. அதேபோல் ராமதாஸ் பா.ம.க. – சசிகலா கூட்டணி அமைத்ததொடர்ந்து தமிழகத்தில் 5-வது அணி உருவாகியுள்ளது. வேட்புமனு தாக்கல் மார்ச் 30-ந் தேதி தொடங்க உள்ளது.

தற்போது தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், பல இடங்களில் தேர்தல் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு தக்க ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச்செல்லும் பணத்தை கைப்பற்றி வருகின்றனர். வரும் ஏப்ரல் 23-ந் தேதி ஒரேகட்டமாக நடைபெறும் இந்த வாக்குப்பதிவுக்கான தேர்தல் முடிவுகள் வரும் மே மாதம் 4-ந் தேதி அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் நடந்து முடிந்து முடிவுகள் வெளியாகும் வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும். 

இந்நிலையில் சட்டசபை தேர்தல் காரணமாக காஞ்சிபுரம், பெரம்பலூர், தஞ்சாவூர் மற்றும் தென்காசி ஆகிய 4 மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளராக ஜவஹர், பெரம்பலூர் எஸ்.பி.யாக பிரபாகர், தஞ்சை எஸ்.பி.யாக சுந்தரவதனம், தென்காசி எஸ்.பியாக மயில்வாகனன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக கரூர், ஈரோடு, நாகப்பட்டினம் மற்றும் விருதுநகர் ஆகிய நான்கு மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்கள் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-4-districts-police-sp-transfer-election-commission-orders-11413051

பஞ்சமி நில ஆக்கிரமிப்பு புகார்: முரசொலி அறக்கட்டளை விவகாரத்தில் சி.பி.ஐ-க்கு நோட்டீஸ்- சென்னை ஐகோர்ட் உத்தரவு

 

Chennai High Court 3

Murasoli Trust case | Panchami land row | Madras High Court

திமுகவின் இதயத்துடிப்பாகக் கருதப்படும் முரசொலி அறக்கட்டளைக்கு எதிராகத் தொடரப்பட்ட நில ஆக்கிரமிப்புப் புகார், தற்போது சிபிஐ விசாரணை கோரும் அளவிற்குத் தீவிரமடைந்துள்ளது. இது தொடர்பாக மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI) விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை நந்தனத்தில் முரசொலி அறக்கட்டளை அலுவலகம் அமைந்துள்ள 12 கிரவுண்ட் நிலம், உண்மையில் தலித் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய 'பஞ்சமி நிலம்' என்றும், அதனை அறக்கட்டளை ஆக்கிரமித்துள்ளதாகவும் நீண்ட காலமாகவே ஒரு சர்ச்சை நிலவி வருகிறது.

இது தொடர்பாக 2020-ஆம் ஆண்டே தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் (NCSC) விசாரணையைத் தொடங்கியது. அப்போது மத்திய அமைச்சராக இருக்கும் எல். முருகன் ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்தார். அந்த விசாரணையை எதிர்த்து முரசொலி அறக்கட்டளை நீதிமன்றம் சென்றிருந்தாலும், அந்த மனு கடந்த 2024 ஜனவரியில் தள்ளுபடி செய்யப்பட்டது.

நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பகீர் குற்றச்சாட்டுகள்

தற்போது நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் குட்டி (எ) வெங்கடாசலபதி என்பவர், இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் எனப் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

அவரது மனுவில், ”1974-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒரு ஆவணத்தின் (எண்: 4381/1974) அடிப்படையில் இந்த நிலம் வாங்கப்பட்டதாக அறக்கட்டளை கூறுகிறது. ஆனால், சைதாப்பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் அப்படி ஒரு ஆவணமே இல்லை. மாறாக 4383/1974 என்ற எண் கொண்ட ஆவணம் மட்டுமே இருக்கிறது.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிர்வாக அறங்காவலராக இருக்கும் இந்த அறக்கட்டளை, 2025 மார்ச் நிலவரப்படி சுமார் ரூ.143.30 கோடி உபரி நிதியை வைத்துள்ளது, லாப நோக்கற்ற அமைப்பு என்று கூறிக்கொண்டு விளம்பர வருவாய் ஈட்டுவது குறித்து சிபிஐ தீர விசாரிக்க வேண்டும்” என அதில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிக்காரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பிற்கும் இடையே கடுமையான வாதங்கள் முன்வைக்கப்பட்டன:

மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தாமா சேஷாத்ரி நாயுடு, தேசிய பட்டியலினத்தவர் ஆணையத்திற்கு (NCSC) புலனாய்வு செய்யும் அதிகாரம் கிடையாது, அது பரிந்துரை வழங்கும் அமைப்பாக மட்டுமே இருப்பதால், உண்மையை கண்டறிய சிபிஐ விசாரணை அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

அறக்கட்டளை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன், இந்தக் குற்றச்சாட்டுகளைக் கடுமையாக மறுத்தார்.

"இந்த மனுதாரர் ஒரு பாஜக மாவட்டச் செயலாளர் என்பதை மறைத்து இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார். இது முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்டது. எல். முருகன் ஆணையத்தில் இருந்தபோது திட்டமிட்டுத் தொடங்கப்பட்ட அரசியல் நாடகம் இது," என்று அவர் வாதிட்டார்.

நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன?

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை அவசியம் எனக் கருதினர். அதன் அடிப்படையில், மனுதாரரின் புகாருக்கு முரசொலி அறக்கட்டளை இரண்டு வாரங்களுக்குள் விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும்.

சிபிஐ (CBI) மற்றும் தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் (NCSC) ஆகியவற்றுக்கும் இது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை, தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/murasoli-trust-case-panchami-land-row-cbi-probe-madras-high-court-11428496

இனி 'டி.ஆர்.பி' மோசடி நடக்காது? வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய மத்திய அரசு புதிய விதிகள்

 Govt TV Ratings Policy 2026 TV rating agency net worth requirement Landing page viewership measurement policy

Govt TV Ratings Policy 2026

எழுதியவர்: அம்ரிதா நாயக் தத்தா

இந்தியாவில் தொலைக்காட்சி சேனல்களின் செல்வாக்கை நிர்ணயிக்கும் 'டிவி ரேட்டிங்' (TV Ratings) முறையில் முறைகேடுகளைத் தவிர்க்கவும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் புதிய கொள்கையை (TV Ratings Policy 2026) வெளியிட்டுள்ளது.

தற்போதுள்ள நடைமுறைகளை எளிதாக்கி, புதிய நிறுவனங்கள் இத்துறையில் நுழைவதற்கு வழிவகை செய்யும் வகையில் இந்த விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.


இதுவரை ஒரு தொலைக்காட்சி மதிப்பீட்டு முகமையாக (Rating Agency) பதிவு செய்ய வேண்டுமானால், அந்த நிறுவனத்தின் நிகர மதிப்பு (Net Worth) 20 கோடி ரூபாயாக இருக்க வேண்டும் என்ற விதி இருந்தது. தற்போது இந்த வரம்பு 5 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தகுதியுள்ள பல புதிய நிறுவனங்கள் இத்துறையில் கால் பதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

புதிய கொள்கையின் மிக முக்கியமான அம்சம் 'லேண்டிங் பேஜ்' குறித்ததாகும். ஒரு தொலைக்காட்சியை ஆன் செய்தவுடன் தானாகவே தோன்றும் முதல் சேனல் (Landing Page), விளம்பர நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படலாம். ஆனால், அதன் மூலம் கிடைக்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை (Viewership), அந்த சேனலின் உண்மையான ரேட்டிங்கில் கணக்கிடப்படக் கூடாது என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

தரவுகளின் துல்லியத்தன்மையை அதிகரிக்க, மதிப்பீட்டு நிறுவனங்கள் தங்களது ஆய்வு வளையத்தை விரிவுபடுத்த வேண்டும்.

அதன்படி, அடுத்த 18 மாதங்களுக்குள் (தற்போதுள்ள நிறுவனங்களுக்கு 6 மாதங்கள்) தங்களது மீட்டர் பொருத்தப்பட்ட வீடுகளின் எண்ணிக்கையை 80,000 ஆக உயர்த்த வேண்டும். இறுதியில் இது 1,20,000 வீடுகள் என்ற இலக்கை எட்ட வேண்டும்.

கேபிள், டி.டி.எச்., ஒ.டி.டி. மற்றும் கனெக்டட் டிவி என அனைத்துத் திரைகளிலும் மக்கள் பார்ப்பது துல்லியமாகக் கண்காணிக்கப்படும்.

நிர்வாகத்தில் நடுநிலைமையை உறுதி செய்ய, மதிப்பீட்டு நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் (Board of Directors) குறைந்தபட்சம் 50% பேர் சுதந்திர இயக்குநர்களாக (Independent Directors) இருக்க வேண்டும். இவர்கள் எந்தவொரு ஒளிபரப்பு நிறுவனம் அல்லது விளம்பர நிறுவனத்துடனும் தொடர்பு இல்லாதவர்களாக இருக்க வேண்டும்.

மேலும், நிறுவனங்கள் தங்களது தரவுகளைத் திரட்டும் முறையை இணையதளத்தில் பகிரங்கமாக வெளியிட வேண்டும். இதற்காகக் காலாண்டுக்கு ஒருமுறை உள் தணிக்கையும் (Internal Audit), ஆண்டுக்கு ஒருமுறை வெளிப்படையான தணிக்கையும் (External Audit) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மக்களின் அந்தரங்கத்தைப் பாதுகாக்க 'டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம் 2023'-ன் கீழ் அனைத்து நடவடிக்கைகளும் அமைய வேண்டும். பொதுமக்களின் புகார்களைத் தீர்க்க 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கக்கூடிய நோடல் அதிகாரி நியமிக்கப்பட வேண்டும். விதிமீறல்களில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அபராதம் முதல் உரிமம் ரத்து வரை கடுமையான தண்டனைகள் வழங்கப்படும்.

ஒ.டி.டி. தளங்கள் அல்லது டிவி விநியோக தளங்கள் தங்களது தளத்தில் ஒளிபரப்பாகும் சேனல்களின் பார்வைகுறித்த தரவுகளைத் தங்களது இணையதளத்தில் வெளியிடலாம். இதற்கு இப்புதிய கொள்கையின் கீழ் தனியாகப் பதிவு செய்யவோ அல்லது அனுமதி பெறவோ தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய விதிகள் அமலுக்கு வருவதன் மூலம், இனி வரும் காலங்களில் டிவியில் எந்த சேனல் உண்மையிலேயே முதலிடத்தில் உள்ளது என்பதை எந்தவித ஒளிவுமறைவுமின்றி பொதுமக்கள் தெரிந்துகொள்ள முடியும்.

source https://tamil.indianexpress.com/india/govt-tv-ratings-policy-2026-tv-rating-agency-net-worth-requirement-landing-page-viewership-measurement-policy-11428639

அபுதாபியில் வெடித்துச் சிதறிய ஏவுகணை; 5 இந்தியர்கள் காயம்

 

அபுதாபியில் வெடித்துச் சிதறிய ஏவுகணை; 5 இந்தியர்கள் காயம்

கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். மேலும் 1900-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீதும், மத்திய கிழக்கில் அமெரிக்க படைத் தளங்கள் உள்ள நாடுகள் மீது ஈரான் தொடர் தாக்குதலை நடத்தியது. ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் மூடியுள்ளதால், இந்தியா உட்பட பல நாடுகளில் எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு நிலவி வருகிறது. 
27 3 2026 

தற்போது, ஈரானுடன் அமெரிக்கா அமைதி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அடுத்த 10 நாட்களுக்கு ஈரான் மீதும், அதன் எரிபொருள் கிடங்குகள் மீதும் தாக்குதல் நடத்தப்போவதில்லை என்று அதிபர்  டொனால்ட் டிரம்ப் கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில், ஈரானின் கோரிக்கையைத் தொடர்ந்து இந்த நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த இடைநிறுத்தம் ஏப்ரல் 6 வரை நீடிக்கும் என்றும் அவர் உறுதிப்படுத்தி இருக்கிறார். "ஈரானிய அரசாங்கத்தின் கோரிக்கையின்படி, எரிபொருள் கிடங்குகளை அழிக்கும் காலத்தை 10 நாட்களுக்கு நான் இடைநிறுத்துகிறேன். பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அவை மிகவும் சிறப்பாகச் செல்கிறது" என்று பதிவிட்டு இருக்கிறார். 

ஈரான், லெபனானில் தாக்குதல்கள்: இதற்கிடையில், ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடர்கின்றன, அதே நேரத்தில் லெபனானில் இஸ்ரேலிய படைகள் தாக்குதல்களையும் தரைவழி நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளன.

ஈரானிய ஏவுகணைகள் இடைமறிப்பு: ஈரான் ஏவிய ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் இஸ்ரேல் மற்றும் சவூதி அரேபியா, குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் வான்பரப்பில் இடைமறிக்கப்பட்டன.

ஐ.ஆர்.ஜி.சி கடற்படைத் தலைவர் மரணம்: இஸ்லாமியப் புரட்சிகரக் காவலர் படையின் கடற்படைத் தலைவர் அலிரேசா டங்சிரி  தங்களது தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஆனால், இதனை ஈரான் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.


source https://tamil.indianexpress.com/international/us-israel-iran-war-news-live-updates-araghchi-trump-netanyahu-in-tamil-11363797

வெள்ளி, 27 மார்ச், 2026

குர்ராக்களும் - குகைவாசிகளும்

குர்ராக்களும் - குகைவாசிகளும் K.சுஜா அலி M.I.Sc (பேச்சாளர்,TNTJ) திண்டல் கிளை - ஈரோடு மாவட்டம் - 9.8.2025

அன்பான மனைவி எம் எஸ் சுலைமான் (மாநிலத் தணிக்கை குழு தலைவர்,TNTJ)

அன்பான மனைவி எம் எஸ் சுலைமான் (மாநிலத் தணிக்கை குழு தலைவர்,TNTJ) குடும்பவியல் தர்பியா - 27.04.2025 அண்ணாநகர் கிளை - திருவண்ணாமலை மாவட்டம்

மறுமையை விரும்பித் தேர்ந்தெடுத்த அந்த மகத்தான மனிதர்

மறுமையை விரும்பித் தேர்ந்தெடுத்த அந்த மகத்தான மனிதர் M.A. அப்துர் ரஹ்மான் MISc TNTJ பேச்சாளர் கொல்லபுரம் ஜும்ஆ - 30.01.2026 திருவாரூர் வடக்கு மாவட்டம்

பிறர் நலன் நாடுதலே இஸ்லாம்

பிறர் நலன் நாடுதலே இஸ்லாம் நோன்பு பூர்ணில் 21-03-2026 உரை: ஃபெரோஸ் கான் (மாநிலச் செயலாளர், TNTJ) புதுச்சேரி மாவட்டம்

ஆசைகளும் அணுகுமுறைகளும் !

ஆசைகளும் அணுகுமுறைகளும் ! N.தவ்ஹீத் MISc பேச்சாளர்.TNTJ பிறை 29

ஹோர்முஸ் ஜலசந்தி அனுமதி

 ஹோர்முஸ் ஜலசந்தி அனுமதி

பிராந்தியத்தில் பதற்றம் நிலவி வரும் சூழலில், "சீனா, ரஷ்யா, இந்தியா, ஈராக் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நட்பு நாடுகள்" ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி கூறியுள்ளார்.


26 3 2026

source https://tamil.indianexpress.com/international/iran-war-live-updates-today-11261181

திருநங்கைகள் சட்ட மசோதாவைத் திரும்பப் பெறுக; சுப்ரீம் கோர்ட் அமைத்த குழு மத்திய அரசுக்கு வலியுறுத்தல்

 26 3 2026 

transgender bill

டெல்லி ஜந்தர் மந்தரில் 2026-ம் ஆண்டு திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) திருத்தச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட LGBTQIA+ சமூக ஆதரவாளர். Photograph: (Image: PTI)

திருநங்கைகள் உரிமைகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஆலோசனைக் குழு, மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் வீரேந்திர குமாருக்குப் புதன்கிழமை கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில், 'திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) திருத்தச் சட்ட மசோதா 2026'-ஐத் திரும்பப் பெறுமாறு கோரிக்கை விடுத்துள்ளது. அதே நாளில், மக்களவையில் இந்த சர்ச்சைக்குரிய சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்தக் குழுவின் தலைவரும், டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான ஆஷா மேனன், அமைச்சருக்கு இத்தகைய கடிதம் அனுப்பப்பட்டதை 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' இதழுக்கு உறுதிப்படுத்தினார்.

குஜராத் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் திருநங்கை என்ற அடையாளத்திற்காகத் தனியார் பள்ளிகளால் ஆசிரியர் பணியிலிருந்து நீக்கப்பட்ட திருநங்கை ஒருவரின் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அக்டோபர் 2025-ல் இந்தக் குழுவை அமைத்தது.

2019-ம் ஆண்டு திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டத்தை அமல்படுத்துவதில் நிலவும் நிர்வாகத் தாமதத்தைக் கவனித்த உச்ச நீதிமன்றம், சட்டத்திலுள்ள இடைவெளிகளைக் கண்டறியவும், விரிவான சம வாய்ப்புக் கொள்கையை உருவாக்கவும், திருநங்கைகள் சமூகத்தில் தடையின்றி சமமாகப் பங்கேற்பதற்கான "நியாயமான இடமளிப்பு" நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கவும் இந்த நிபுணர் குழுவை உருவாக்கியது.

எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கடும் எதிர்ப்பு மற்றும் அதன் விளைவாக நடந்த வெளிநடப்புக்கு மத்தியிலும், செவ்வாய்க்கிழமை மக்களவை இந்த மசோதாவை நிறைவேற்றியது. இந்த மசோதாவை மேலதிக ஆய்விற்காக நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இந்தத் திருத்த மசோதா, தற்போதுள்ள 2019-ம் ஆண்டு சட்டத்தில் பெரும் மாற்றங்களைப் பரிந்துரைக்கிறது. குறிப்பாக, பாலினத்தைத் சுய-அடையாளம் காணும் உரிமையை இது சிதைக்கிறது. 2014ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க 'நால்சா' (NALSA) தீர்ப்பு, மருத்துவத் தலையீடு இல்லாமல் தனிநபர்கள் சட்டப்பூர்வமாகத் தங்கள் பாலினத்தை அடையாளம் காண அனுமதித்தது. ஆனால், புதிய மசோதா அதற்குப் பதிலாக அரசு கட்டுப்பாட்டிலான மருத்துவச் சான்றிதழ் முறையைக் கொண்டு வருகிறது. இதன் மூலம் தலைமை மருத்துவ அதிகாரி தலைமையிலான மருத்துவக் குழுவால் தனிநபர்கள் பரிசோதிக்கப்பட வேண்டும்.

மேலும், இந்தத் திருத்தச் மசோதா திருநங்கைகளுக்கான சட்டப்பூர்வ வரையறையைச் சுருக்குகிறது. ஹிஜ்ராக்கள், கின்னர்கள் போன்ற குறிப்பிட்ட சமூக-கலாச்சாரக் குழுக்கள் மற்றும் பிறவி உயிரியல் மாற்றங்களைக் கொண்டவர்களுக்கு மட்டுமே இந்த அங்கீகாரத்தைக் கட்டுப்படுத்துகிறது. இதன் மூலம் திருநம்பிகள், திருநங்கைகள் மற்றும் பாலின இருமைக்கு அப்பாற்பட்டவர்கள் உண்மையில் இதிலிருந்து விலக்கப்படுகிறார்கள்.

முன்மொழியப்பட்ட சட்டம் தொடர்பாக அரசு மற்றும் எதிர்க்கட்சிகள்

தற்போதுள்ள விதிகளில் திருத்தம் செய்ய வேண்டிய அவசியம் என்ன என்றும், அதைத் தாக்கல் செய்ததில் காட்டிய "அவசரம்" குறித்தும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த மசோதா பிற்போக்கானது என்றும், நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர். ஆனால், "சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் உதவும் ஒரு விரிவான முயற்சி இது" என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிகளுக்கு எதிராக நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. அறிவியல் பூர்வமற்ற தரநிலைகளை இந்த மசோதா நம்பியிருப்பதாகவும், திருநங்கைகளின் வாழ்வியலை இது குற்றமாக்குவதாகவும் ஆர்வலர்கள் மற்றும் சமூக உறுப்பினர்கள் வாதிடுகின்றனர். கட்டாய மருத்துவப் பரிசோதனை என்பது ஊடுருவும் கண்காணிப்புக்கும், பல்வேறு பாலின அடையாளங்களை அழிப்பதற்கும் வழிவகுக்கும் என்று அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்தக் குழுவில் அக்கை பத்மஷாலி, வைஜயந்தி வசந்த மோக்லி மற்றும் கிரேஸ் பானு (மூவரும் திருநங்கைகள் மற்றும் உரிமை ஆர்வலர்கள்), கல்வியாளர் சௌரவ் மண்டல் (இணைப் பேராசிரியர், ஜிண்டால் குளோபல் லா ஸ்கூல்), ஏர் கமாடோர் (டாக்டர்) சஞ்சய் சர்மா (ஓய்வு), இந்திய திருநங்கைகள் நலச் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, குருகிராம், ஆராய்ச்சியாளர்கள் நித்யா ராஜசேகர் மற்றும் அபர்ணா மெஹ்ரோத்ரா மற்றும் அமிக்கஸ் கியூரியாக மூத்த வழக்கறிஞர் ஜெய்னா கோத்தாரி ஆகியோர் உள்ளனர்.

source https://tamil.indianexpress.com/india/sc-panel-urges-withdrawal-of-transgender-persons-amendment-bill-2026-11363307

வியாழன், 26 மார்ச், 2026

வந்தே மாதரம்

 

தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' பாடுவது குறித்து மத்திய அரசு வெளியிட்ட சுற்றறிக்கையை எதிர்த்துத் தொடரப்பட்ட மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் புதன்கிழமை மறுத்துவிட்டது. அந்த வழிகாட்டுதல் "முற்றிலும் ஆலோசனை சார்ந்தது" என்றும், அதைப் பாடாதவர்களுக்கு எந்தவிதத் தண்டனை விளைவுகளும் இல்லை என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்சி, விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த மனுவை "முதிர்ச்சியற்றது" எனக் கூறி தள்ளுபடி செய்தது. இந்த நெறிமுறையின் கீழ் எந்தவொரு தனிநபரோ அல்லது நிறுவனமோ வற்புறுத்தப்பட்டதற்கோ அல்லது தண்டிக்கப்பட்டதற்கோ எந்த ஆதாரமும் இல்லை என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

கல்வி நிறுவனம் நடத்தி வரும் முகமது சையத் நூரி என்ற மனுதாரருக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே, "ஜனவரி 28-ம் தேதியிட்ட சுற்றறிக்கை ஒரு ஆலோசனை போலத் தோன்றினாலும், நடைமுறையில் அது கட்டாயமாக்கப்பட்டு வருகிறது" என்று வாதிட்டார். ஆனால், நீதிபதிகள் இதனை ஏற்கவில்லை.

எது கட்டாயம்? எதுவுமே கட்டாயம் இல்லை. இந்தச் சுற்றறிக்கை ஒரு ஆலோசனை மட்டுமே," என்று நீதிபதி பாக்சி கூறினார்.

தலைமை நீதிபதி சூர்ய காந்த், "இது முற்றிலும் ஆலோசனை வழங்கும் தன்மை கொண்டது," என்று உறுதிபடத் தெரிவித்தார்.

நீதிபதி பாக்சி மேலும் கூறுகையில், "ஒரு உத்தரவு கட்டாயமானது என்றால், அதை மீறும்போது தண்டனை விளைவுகள் இருக்க வேண்டும். இந்தச் சுற்றறிக்கையில் அப்படி என்ன தண்டனை உள்ளது? கூட்டத்திலிருந்து நீங்கள் நீக்கப்படுவீர்கள் என்றோ அல்லது உங்கள் நிறுவனத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றோ ஏதேனும் உள்ளதா? அப்படி ஒரு வழிகாட்டுதலை நாங்கள் பார்க்கவில்லை” என்றார்.

தேசிய கீதத்தின் போது பாடாமல் மரியாதையுடன் எழுந்து நின்ற மாணவர்களுக்குப் பாதுகாப்பு அளித்த வரலாற்றுச் சிறப்புமிக்க 'பிஜோ இம்மானுவேல்' வழக்கையும் நீதிமன்றம் இங்கே ஒப்பிட்டுக் காட்டியது.

வழக்கறிஞர் ஹெக்டே கூறுகையில், "சட்டப்பூர்வமான தண்டனை இல்லாவிட்டாலும், பாட மறுப்பவர் அல்லது எழுந்து நிற்க மறுப்பவர் மீது ஒரு பெரிய சமூகச் சுமை எப்போதும் சுமத்தப்படுகிறது," என்றார்.

அதற்குத் தலைமை நீதிபதி காந்த், "சட்டத்தில் அந்தச் சுமை என்றால் என்ன என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம்... நீங்கள் ஒரு அகாடமி நடத்துகிறீர்கள். தேசியப் பாடலை ஒலிக்கச் சொல்லி உங்களுக்கு ஏதேனும் நோட்டீஸ் வந்ததா?" என்று கேட்டார்.

மேலும், "இந்தச் சுற்றறிக்கை தேசியப் பாடல் எவ்வாறு ஒலிக்கப்பட வேண்டும் என்பதற்கான நெறிமுறையை மட்டுமே வழங்குகிறது. உங்கள் அகாடமியில் தேசியப் பாடல் ஒலிக்கவில்லை என்பதால் ஏன் அதை மூடக்கூடாது அல்லது அங்கீகாரத்தை ரத்து செய்யக்கூடாது என்று யாராவது நோட்டீஸ் கொடுத்தால் எங்களால் புரிந்துகொள்ள முடியும்," என்றும் தலைமை நீதிபதி கூறினார்.

சுற்றறிக்கையில் 'செய்யலாம்' என்ற சொல் இருப்பதை சுட்டிக்காட்டிய நீதிமன்றம்

சுற்றறிக்கையின் 5-வது பிரிவின் கீழ், "அனைத்துப் பள்ளிகளிலும், அன்றையப் பணி தேசியப் பாடலைச் சமூகமாகப் பாடுவதன் மூலம் தொடங்கலாம்" என்று இருப்பதை நீதிபதி பாக்சி சுட்டிக்காட்டினார். "அங்கே 'மே' என்ற சொல்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது," என்றார் அவர்.

ஹெக்டே வாதிடுகையில், "நமது நாட்டில் ஒவ்வொரு மதத்திற்கும் சமமான மரியாதை உள்ளது. ஆலோசனையை அமல்படுத்துகிறோம் என்ற போர்வையில் மக்களைப் பாட வற்புறுத்தினால், மதம் கடந்த குடிமக்கள், நாத்திகர்கள் எனத் தனது மனசாட்சிக்கு எதிராகச் செயல்பட வேண்டிய சூழல் உருவாகும்," என்றார்.

நீதிபதி பாக்சி மீண்டும் 5-வது பிரிவைக் குறிப்பிட்டு, "எங்கள் புரிதலின்படி, இது அடிப்படை பேச்சுரிமையைப் பாதிக்கவில்லை. ஏனெனில், பாடுவதற்கும் பாடாமல் இருப்பதற்கும் தனிநபருக்குச் சமமான உரிமை உள்ளது. இந்த முறையில் அது தனிநபரின் மனசாட்சிக்கே விடப்பட்டுள்ளது," என்றார்.

"இதனுடன் எந்த மோசமான விளைவுகளும் இணைக்கப்படவில்லை. உங்கள் அகாடமியில் இதைப் பாட வேண்டும் என்று யாரும் உங்களிடம் கேட்கவில்லை," என்று தலைமை நீதிபதி மீண்டும் கூறினார்.

தேசபக்தியை யாரையும் கட்டாயப்படுத்தி வரவைக்க முடியாது என்று ஹெக்டே கூறியதற்கு, "தேசிய கீதத்திற்கு கூடவா கட்டாயப்படுத்த முடியாது?" என்று நீதிபதிகள் கேட்டனர்.

"தேசபக்தி என்பது ஒருவரின் பார்வை. இதில் பலருக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம்," என்று நீதிபதி பாக்சி கூறினார்.

ஹெக்டே கூறுகையில், "இறுதியில், ஒரு தனிநபரைப் பொறுத்தவரை அரசியலமைப்புச் சட்டம் என்பது அவரின் மனசாட்சியைக் காப்பதாக இருக்க வேண்டும். தண்டனை இல்லாத ஆலோசனை கூடப் பல வழிகளில் கட்டாயமாக அமல்படுத்தப்படுகிறது," என்றார்.

அதற்கு நீதிபதி பாக்சி, "இந்த ஆலோசனையின் அடிப்படையில் நீங்கள் எப்போதாவது பாகுபாட்டிற்கு உள்ளானால், அப்போது எங்களிடம் வாருங்கள்," என்றார்.

ஆலோசனை என்பது இணங்கிச் செல்வதற்கான ஒரு அச்சுறுத்தலாகத் தெரிவதாக ஹெக்டே கூறியபோது, "அச்சுறுத்தல் எதுவும் இல்லை, இது வெறும் ஆலோசனைதான்," என்று நீதிபதி பாக்சி பதிலளித்தார்.

"இது வெறும் முதிர்ச்சியற்ற அச்சம் மட்டுமே," என்று தலைமை நீதிபதி கூறினார். "உங்களுக்குப் பாகுபாடு குறித்த சில தெளிவற்ற அச்சங்கள் உள்ளன. அதற்கும் இந்தச் சுற்றறிக்கைக்கும் நேரடித் தொடர்பு இல்லை," என்று நீதிபதி பாக்சி மேலும் கூறினார்.

வழக்கறிஞர் ஹெக்டே ஒரு ஒப்பீட்டை முன்வைத்தார்: "மூன்று நிமிட தேசியப் பாடல், 55 வினாடி தேசிய கீதத்தை மிகைப்படுத்துகிறது. தேசியப் பாடலும் தேசிய கீதமும் இசைக்கப்படும்போது, தேசியப் பாடலே முதலில் இசைக்கப்பட வேண்டும் என்று சுற்றறிக்கை கூறுகிறது. இதன் மூலம் தேசிய கீதம் ஒரு பின்னுரையாக மாறிவிடுகிறது. இது வெறும் ஆலோசனை என்று நீங்கள் கூறலாம், ஆனால் குடிமக்கள் இதற்கு இணங்க வேண்டிய தேவையிருப்பதாக உணர்வார்கள்," என்றார்.

இதற்குப் பதிலளித்த தலைமை நீதிபதி, இது கட்டாயமான உத்தரவு அல்ல என்பதை மீண்டும் வலியுறுத்தியதோடு, "உங்களுக்கு எதிராக ஏதேனும் தண்டனை நடவடிக்கை எடுக்கப்பட்டால், நீங்கள் நீதிமன்றத்திற்கு வரும் உரிமை உங்களுக்கு உள்ளது," என்று முடித்தார்.

ஆலோசனை அவசியமில்லை: சொலிசிட்டர் ஜெனரல்

இந்த விசாரணையின் போது வழக்கறிஞர் ஹெக்டே மற்றும் நீதிமன்றத்தில் இருந்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. துஷார் மேத்தா குறுக்கிட்டு, "தேசியப் பாடலை மதிக்க நமக்கு ஆலோசனை தேவையா? ஒரு ஆலோசனை அவசியமாக இருக்கக்கூடாது," என்றார்.

"தேசபக்தியை வற்புறுத்த முடியாது என்று ஒரு நபர் கூறினால்... அவர் இந்த நீதிமன்றத்தின் ரிட் அதிகார வரம்பைப் பெறத் தகுதியற்றவர்," என்று மேத்தா சாடினார்.

அதற்கு ஹெக்டே, "இதுவே தேசபக்தியின் உயர்ந்த வடிவம் என்று நான் கூறுகிறேன். அரசியலமைப்புச் சட்டம் அனைவருக்கும் பொதுவானது. நீங்கள் எந்த அரசியல் அல்லது மத நிலைப்பாட்டில் இருக்கிறீர்கள் என்பதை அது சார்ந்தது அல்ல," என்று பதிலளித்தார்.

25 3 2026 

source https://tamil.indianexpress.com/india/supreme-court-dismisses-plea-against-vande-mataram-circular-purely-advisory-no-penal-action-cji-surya-kant-11264619

அமெரிக்காவின் 15 அம்ச திட்டத்திற்கு 'நோ'... 5 நிபந்தனைகளுடன் ஈரான் புதிய போர்க்கொடி

 

அமெரிக்காவின் 15 அம்ச திட்டத்திற்கு 'நோ'... 5 நிபந்தனைகளுடன் ஈரான் புதிய போர்க்கொடி


மத்திய கிழக்கில் நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா முன்வைத்த 15 அம்ச அமைதித் திட்டத்தை ஈரான் (புதன்கிழமை) நிராகரித்துள்ளது. அதற்குப் பதிலாக, தனது சொந்த 5 நிபந்தனைகளை ஈரான் முன்வைத்துள்ளது.

அமெரிக்காவின் 15 அம்சத் திட்டம் என்ன?

பாகிஸ்தான் தூதர்கள் வழியாக ஈரானுக்கு அனுப்பப்பட்ட அமெரிக்காவின் இந்தத் திட்டத்தில் இடம்பெற்றிருந்த முக்கிய அம்சங்கள்; ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளைத் தளர்த்துதல், சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு, அதே சமயம், ஈரானின் அணுசக்தித் திட்டத்தைக் கட்டுப்படுத்துதல், சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) கண்காணிப்பை அனுமதித்தல், ஏவுகணை சோதனைகளுக்கு கட்டுப்பாடு விதித்தல், ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாகக் கப்பல் போக்குவரத்திற்கு அனுமதி வழங்குதல்.

ஈரான் முன்வைக்கும் 5 அதிரடி நிபந்தனைகள்

அமெரிக்காவின் திட்டத்தை நிராகரித்த ஈரான், போர் நிறுத்தத்திற்கு 5 நிபந்தனைகளை விதித்துள்ளது. போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு கட்டாயமாக நிதி இழப்பீடு வழங்கப்பட வேண்டும். ஆக்கிரமிப்பு மற்றும் அரசியல் படுகொலைகளை (Assassinations) உடனடியாக நிறுத்த வேண்டும், ஈரான் மீது மீண்டும் போர் தொடுக்கப்படாது என்பதற்கான சர்வதேச உத்தரவாதமளிக்க வேண்டும், ஈரான் மற்றும் பிராந்தியத்தில் உள்ள அனைத்து 'எதிர்ப்புப் படைகள்' (Resistance Groups) மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும். ஹார்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் இறையாண்மையை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும்.

அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் பேசப்பட்டாலும், களத்தில் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. ஈரான் நடத்திய தாக்குதலில் குவைத் சர்வதேச விமான நிலையத்தின் எரிபொருள் தொட்டி தீப்பற்றி எரிந்தது. ஈரானின் அரசு உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து இஸ்ரேல் இன்று மீண்டும் வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியது. கஸ்வின் (Qazvin) நகரில் குண்டுகள் வெடித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சவுதி அரேபியாவின் எண்ணெய் வளம் மிக்க கிழக்குப் பகுதியில் 8 ட்ரோன்களை அந்நாட்டு ராணுவம் அழித்துள்ளது.

அமெரிக்காவின் அடுத்த நகர்வு என்ன?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரானுடன் "சரியான நபர்களிடம்" பேசி வருவதாகக் கூறினாலும், ஈரான் அதனை மறுத்துள்ளது. இதற்கிடையில், மத்திய கிழக்கிற்குத் தனது பாராசூட் படை வீரர்களை (Paratroopers) அமெரிக்கா அனுப்பத் தொடங்கியுள்ளது. பாகிஸ்தான் அல்லது துருக்கி ஆகிய நாடுகள் இந்த அமைதிப் பேச்சுவார்த்தைக்கான மையப்புள்ளிகளாகச் செயல்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும், ஈரான் விரும்பும் நேரத்தில், ஈரானின் நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே போர் முடியும் எனத் தெஹ்ரான் திட்டவட்டமாகத் தெரிவித்து உள்ளது.

25 3 2026

source https://tamil.indianexpress.com/international/iran-rejects-us-15-point-plan-to-end-west-asia-war-lays-out-own-conditions-what-are-tehrans-5-demands-11264160

ஈரான் பள்ளி மீதான தாக்குதல் - மார்ச் 27ல் ஐ.நா. அவசர விவாதம்

 

ஈரான் பள்ளி மீதான தாக்குதல் - மார்ச் 27ல் ஐ.நா. அவசர விவாதம் 25 3 2026

iran a

ஈரான் பள்ளி மீதான தாக்குதல் - மார்ச் 27ல் ஐ.நா. அவசர விவாதம்

ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானும் பதிலுக்கு அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் தளங்கள் அமைந்த பகுதிகள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது.

பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டு தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரானுக்கும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தளங்கள் கொண்ட நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரான் தன் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹோர்முஸ் நீரிணையை முற்றிலுமாக முடியுள்ளதால் உலக அளவில் கச்சா எண்ணெய், எல்.பி.ஜி தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், பல நாடுகளில் பெட்ரோல் - டீசல் விலை உயர்ந்துள்ளது. பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் ஓராண்டு காலத்திற்கு தேசிய எரிசக்தி அவசரநிலையை அறிவித்துள்ளார். உலகில் முதன்முதலாக தேசிய எரிசக்தி அவசரநிலையை அறிவித்த நாடாக பிலிப்பைன்ஸ் மாறியுள்ளது. 

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக போர் நீடித்து வந்த நிலையில், 5 நாட்களுக்கு தாக்குதல் நிறுத்தப்படும் என டிரம்ப் கூறினார். அமெரிக்காவும் ஈரானும் மிக நல்ல மற்றும் ஆக்கப்பூர்வ முறையிலான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. இந்த விரிவான, பயனுள்ள பேச்சுவார்த்தை வாரம் முழுவதும் தொடர கூடும். அதனடிப்படையில், ஈரான் அணு உலைகள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் அனைத்து ராணுவ தாக்குதல்களையும் 5 நாட்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று போர் துறைக்கு நான் உத்தரவிட்டு உள்ளேன் என அவர் தெரிவித்தார்.

ஈரான் உச்ச தலைவர் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இருந்தாலும், அதுபோன்ற எந்தவொரு பேச்சு வார்த்தையும் நடைபெறவில்லை என்று ஈரான் மறுத்துள்ளது. எரிபொருள் தொடர்பான பல நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த போரை நிறுத்த உலக நாடுகள் அமெரிக்கா மற்றும் ஈரானை வலியுறுத்தி வருகிறது.


source https://tamil.indianexpress.com/international/iran-war-live-updates-today-11261181

புதன், 25 மார்ச், 2026

மேற்கு ஆசியப் போர்: “இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

 மேற்கு ஆசியப் போர்: “இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைRahul Gandhi

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வின் போது, புது டெல்லியில் மார்ச் 24, 2026, செவ்வாய்க்கிழமை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. Photograph: (PTI Photo)

மேற்கு ஆசியப் போர்ச் சூழலுக்கு மத்தியில், மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையைக் கையாள்வது தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடியைக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகச் சாடியுள்ளார். நாட்டின் வெளியுறவுக் கொள்கை "மோடியின் தனிப்பட்ட வெளியுறவுக் கொள்கையாக" மாறிவிட்டதாகவும், இது ஒரு "உலகளாவிய கேலிக்கூத்தாக" கருதப்படுவதாகவும் ராகுல் காந்தி கூறினார். மேற்கு ஆசிய மோதல் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரையில் கோவிட்-19 காலத்தைக் குறிப்பிட்டதை விமர்சனம் செய்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், பெருந்தொற்றின் போது என்ன நடந்தது என்பதையும், அப்போது அரங்கேறிய துயரங்களையும் பிரதமர் மறந்துவிட்டார் என்று கூறினார்.

நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி: “பிரதமர் சமரசம் செய்துகொண்டால், நமது வெளியுறவுக் கொள்கையும் சமரசம் செய்யப்பட்டுவிடும்.” அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே பாகிஸ்தான் ஒரு இடைத்தரகராக இருப்பதாகக் கூறப்படும் செய்திகள் மற்றும் மேற்கு ஆசிய நெருக்கடி குறித்த இந்தியாவின் நிலைப்பாடு பற்றி கேட்டபோது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “நமது வெளியுறவுக் கொள்கை பிரதமர் மோடியின் தனிப்பட்ட வெளியுறவுக் கொள்கை. இதன் முடிவுகளை நீங்கள் பார்க்கலாம், அனைவரும் இதை ஒரு உலகளாவிய கேலிக்கூத்தாகவே கருதுகிறார்கள்” என்றார்.

“நேற்று அவர் தேவையற்ற ஒரு உரையை ஆற்றினார். அவர் இந்தியாவின் பிரதமர், அவர் ஒரு பிரதமராகத் தோன்ற வேண்டும், ஆனால் அவரிடம் எந்த நிலைப்பாடும் இல்லை. இது மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது வருத்தமளிக்கிறது. இது ஒரு தொடக்கம் - எல்.பி.ஜி (சமையல் எரிவாயு), பெட்ரோல், உரம் என இவை அனைத்தும் சிக்கலை ஏற்படுத்தும். கோவிட் போன்ற காலம் வரப்போவதாக மோடி ஜி கூறியுள்ளார். அப்போது என்ன நடந்தது, எத்தனை பேர் இறந்தார்கள், என்ன மாதிரியான துயரங்கள் அரங்கேறின என்பதை அவர் மறந்துவிட்டார்” என்று ராகுல் காந்தி கூறினார்.

மேலும், பிரதமர் நாட்டின் தேவைகளுக்கும் விவசாயிகளுக்கும் முன்னுரிமை அளிப்பதற்குப் பதிலாக, “அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நலன்களுக்கேற்ப இந்தியாவின் முடிவுகளை அமைத்துக் கொள்வார்” என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

“அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்; விவாதம் நடக்க வேண்டும், ஆனால் நீங்கள் ஒரு கட்டமைப்புக் குறைபாட்டை ஏற்படுத்திவிட்டீர்கள். நீங்கள் கட்டமைப்பை அழித்துவிட்டீர்கள், அதைச் சரிசெய்ய முடியாது. பிரதமரால் அதைச் செய்ய முடியாது; இதை நான் உங்களுக்கு எழுத்துப்பூர்வமாகத் தர முடியும். அமெரிக்காவும் இஸ்ரேலும் என்ன சொல்கிறதோ அதைத்தான் பிரதமர் செய்வார். அவர் இந்தியா மற்றும் அதன் விவசாயிகளின் நலனுக்காக உழைக்க மாட்டார்; அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் சொல்வதையே செய்வார்” என்று மோடி ஒரு கட்டமைப்புக் குறைபாட்டைச் செய்துள்ளதாகவும், அதைச் சரிசெய்ய முடியாது என்றும் ராகுல் காந்தி கூறினார்.

உலகளாவிய சூழல் குறித்து மோடி கூறியது என்ன?

நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை உரையாற்றிய மோடி, மேற்கு ஆசிய மோதலால் உலகளாவிய நிலைமை கடினமாகியுள்ளதாகவும், பெருந்தொற்று காலத்தைப் போன்ற ஒரு சூழலுக்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

“இந்தப் போர் உலகளாவிய நிலையில் கடினமான சூழலை உருவாக்கியுள்ளது, இது நீண்ட காலத்திற்கு நீடிக்கக்கூடும். எனவே, நாம் தயாராகவும் ஒற்றுமையாகவும் இருக்க வேண்டும். கோவிட் நெருக்கடியின் போது இதேபோன்ற சவால்களை நாம் ஒற்றுமையுடன் எதிர்கொண்டோம். இப்போது மீண்டும் அதே வழியில் நாம் தயாராக வேண்டும். பொறுமை, கட்டுப்பாடு மற்றும் அமைதியுடன் நாம் ஒவ்வொரு சவாலையும் எதிர்கொள்ள வேண்டும் - அதுவே நமது அடையாளம், அதுவே நமது பலம்.”

எரிபொருள், உரம் மற்றும் மேற்காசிய பிராந்தியத்திலும் இந்தியாவிலும் உள்ள அனைத்து இந்திய குடிமக்களின் பாதுகாப்பு ஆகியவற்றில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் மோடி பேசினார். “சாதாரண குடும்பங்கள் குறைந்தபட்ச பாதிப்புகளை எதிர்கொள்வதை உறுதி செய்ய அரசாங்கத்தால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என்றும் அவர் தெரிவித்தார்.


source https://tamil.indianexpress.com/india/rahul-gandhi-slams-pm-modi-foreign-policy-west-asia-war-march-2026-lpg-petrol-price-hike-warning-parliament-update-11260152