தமிழகத்தில் 1– 9-ம் வகுப்பு முழு ஆண்டு தேர்வு; அட்டவணை வெளியிட்ட பள்ளிக் கல்வித்துறை
/indian-express-tamil/media/media_files/2026/02/22/school-exam-2026-02-22-17-02-36.jpg)
தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கு 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான முழு ஆண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2 ஆம் தேதியும், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 11 ஆம் தேதியும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற இருப்பதால் 1 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கான் தேர்வுகள் முன்கூட்டியே நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.
/indian-express-tamil/media/post_attachments/50c1ed6e-87a.jpg)
அதன்படி 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை வகுப்பு வாரியாக தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 8 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 16ஆம் தேதியோடு தேர்வுகள் நிறைவடைகின்றன. அதேபோல், நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 16 ஆம் தேதியோடு தேர்வுகள் நிறைவடைகின்றன. ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கி 16 ஆம் தேதியோடு தேர்வுகள் நிறைவடைகின்றன.
/indian-express-tamil/media/post_attachments/c63eee06-98c.jpg)
ஏப்ரல் 16 ஆம் தேதியோடு தேர்வுகள் நிறைவடைந்து 17 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கும். அதன்பிறகு 2026 – 2027 ஆம் கல்வியாண்டிற்கான முதல் வேலை நாள் வரும் ஜூன் மாதம் 1ஆம் தேதி தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.





