கேரளா, அசாம், புதுச்சேரி மாநிலங்களுக்கு ஒரே கட்டம்; மேற்கு வங்கத்தில் 2 கட்டத் தேர்தல்: முக்கிய தேதிகள் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு 15 03 2026
தமிழ்நாடு, கேரளா, அசாம், புதுச்சேரி ஆகியவற்றுக்கான சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடத்தப்படும் என்று அறிவித்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மேற்கு வங்கத்தில் 2 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் வாக்குபதிவு நடத்தப்படும் என்று அறிவித்தார்.
அதன்படி, தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 9-ம் தேடி ஒரே கட்டமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல, அசாம் மாநில சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 9-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கம் சட்டமன்றத் தேர்தல் முக்கிய தேதிகள்:
மேற்கு வங்கம் மாநில சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 என 2 கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தின் 294 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான விரிவான கால அட்டவணையை ஆணையம் வெளியிட்டுள்ளது.இதன்படி, முதற்கட்டமாக 152 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 142 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
தேர்தல் கால அட்டவணை: முதற்கட்டம் 152 தொகுதிகளுக்கும் இரண்டாம் கட்டம் 142 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறும்.
தேர்தல் அறிவிக்கை:
தேர்தல் அறிவிக்கை முதல் கட்டத்துக்கு மார்ச் 30, 2026 (திங்கள்கிழமை) அன்றும் இரண்டாம் கட்டத்துக்கு ஏப்ரல் 02, 2026 (வியாழன்) அன்றும் கெசட்டில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்புமனுத் தாக்கல் இறுதி நாள்:
மேற்கு வங்கம் சட்டமன்றத் தேர்தலில் முதல் கட்டம் தேர்தல் நடைபெறு தொகுதிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் இறுதி நாள் ஏப்ரல் 06, 2026 (திங்கள்கிழமை) என்றும் இரண்டாம் கட்டம் தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் இறுதி நாள் ஏப்ரல் 09, 2026 (வியாழன்) என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்புமனு பரிசீலனை: முதல் கட்டம் தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கு ஏப்ரல் 07, 2026 (செவ்வாய்), இரண்டாம் கட்டம் தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கு ஏப்ரல் 10, 2026 (வெள்ளி) வேட்புமனு பரிசீலனை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்புமனுவைத் திரும்பப் பெற இறுதி நாள்:
முதல் கட்டம் தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கு ஏப்ரல் 09, 2026 (வியாழன்) அன்றும் இரண்டாம் கட்டம் தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கு ஏப்ரல் 13, 2026 (திங்கள்) அன்றும் வேட்புமனுவைத் திரும்பப் பெற இறுதி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு நாள்:
மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் முதல் கட்டம் வாக்குப்பதிவு ஏப்ரல் 23, 2026 (வியாழன்) அன்றும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29, 2026 (புதன்) அன்றும் வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை:
வாக்கு எண்ணிக்கை மே 04, 2026 (திங்கள்)மே 04, 2026 (திங்கள்) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் நடைமுறைகள் மே 6-ம் தேடிக்கு முன்னதாக முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தல்கள் மூலம் 4 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள மொத்தம் 800-க்கும் அதிகமான சட்டமன்றத் தொகுதிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இப்போதைய சட்டமன்றங்களின் ஆயுட்காலம் இந்த ஆண்டு மே மாதத்துடன் முடிவடைகிறது.
இடைத்தேர்தல்கள்: பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் ஏப்ரல் 9 மற்றும் ஏப்ரல் 23 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
கடுமையான நடவடிக்கை: தேர்தல் விதிமீறல்கள், வன்முறை அல்லது வாக்காளர்களுக்குப் பணம்/பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கத் தேர்தல் ஆணையம் மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் எனத் தலைமைத் தேர்தல் ஆணையர் எச்சரித்துள்ளார்.
வாக்காளர் பட்டியல் திருத்தம்: சமீபத்தில் நடத்தப்பட்ட 'சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்குப்' (எஸ்.ஐ.ஆர்) பிறகு நடைபெறும் முதல் பெரிய தேர்தல் இதுவாகும்.





