திங்கள், 16 மார்ச், 2026

'ஈரானில் ஹார்மூஸ் நீரிணையை திறக்க சீனா உதவ வேண்டும்; இல்லாவிட்டால்...': ட்ரம்ப் திடீர் எச்சரிக்கை

 

'ஈரானில் ஹார்மூஸ் நீரிணையை திறக்க சீனா உதவ வேண்டும்; இல்லாவிட்டால்...': ட்ரம்ப் திடீர் எச்சரிக்கை 15 03 2026

US-1-22

ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) மீண்டும் திறப்பதற்கான முயற்சிகளுக்கு நேட்டோ (NATO) உறுப்பு நாடுகள் ஆதரவு அளிக்காவிட்டால், அந்த அமைப்பு "மிக மோசமான" விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டெனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்கா, இஸ’ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந் தேதி முதல் ஈரானில் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் உலகளவில் பெரும் பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட இன்னல்கள் ஏற்பட்டுள்ள நிலையில், உலகளவில் முக்கிய கச்சா எண்ணெய் கப்பல்கள் போக்குவரத்து தளலமாக இருக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் விலையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. 

இந்த முக்கியமான எண்ணெய் கப்பல் போக்குவரத்து பாதை மூடப்பட்டதால், இதன் மூலம் பயன்பெறும் நாடுகள், அந்த பாதை தொடர்ந்து திறந்திருக்க  உறுதி செய்ய உதவ வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். ஃபைனான்சியல் டைம்ஸ் (Financial Times) இதழுக்கு அளத்த பேட்டியில், "இந்த ஜலசந்தியால் பயனடைபவர்கள், அங்கு அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய உதவுவது மட்டுமே சரியானது மற்றும் முறையானது," என்று அவர் அந்த நாளிதழிடம் தெரிவித்தார்.

நீங்கஅமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் மோதலால் இந்த நீர்வழிப்பாதை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உலகளாவிய எரிசக்தி விநியோகம் குறித்த கவலைகள் எழுந்துள்ளது. இதன் காரணமாக ட்ரம்ப் இந்த எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த விவகாரத்தில் சீனா தனது நிலைபாட்டை தெளிவுபடுத்தவில்லை என்றால், இந்த மாத இறுதியில் சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் திட்டமிடப்பட்டுள்ள உச்சிமாநாடு ஒத்திவைக்கக்கூடும் என்றும் ட்ரம்ப் கூறினார்.

இது குறித்து பேசிய ட்ரம்ப், சீனாவும் இதற்கு உதவ வேண்டும் என்று நான் நினைக்கிறேன், ஏனென்றால் சீனா தனது எண்ணெய்ப் பயன்பாட்டில் 90% இந்த ஜலசந்தி வழியாகவே பெறுகிறது. பயணத்திற்கு முன்பே பெய்ஜிங்கின் நிலைப்பாட்டை அறிய விரும்புகிறேன். அவர்கள் நிலைபாட்டை தெரிவிக்காமல் இருந்தால் நாங்கள் உச்சிமாநாட்டை தாமதப்படுத்துவோம். எரிசக்தி விநியோகத்தின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்ய, இந்த கப்பல் பாதையைச் சார்ந்திருக்கும் நாடுகளின் ஒத்துழைப்பு முக்கியமானது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையில், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக போர் நிறுத்த ஒப்பந்தத்தில் உள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்காக, அமெரிக்க நிதித்துறை அமைச்சர் ஸ்காட் பெசென்ட் (Scott Bessent) மற்றும் சீன துணைப் பிரதமர் ஹி லிஃபெங் (He Lifeng) ஆகியோர் நேற்று (மார்ச் 15) பாரிஸில் சந்தித்துப் பேசினர். இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இந்தப் பேச்சுவார்த்தையின் முதல் நாள் இதுவாகும். இந்த விவாதங்கள், இந்த மாத இறுதியில் அதிபர் ட்ரம்ப் பெய்ஜிங்கிற்குச் சென்று ஷி ஜின்பிங்கைச் சந்திப்பதற்கான ஆயத்தப் பணிகளின் ஒரு பகுதியாகவும் பார்க்கப்படுகிறது.ள் விரும்பக்கூடிய கதைகள்

source https://tamil.indianexpress.com/india/donald-trump-nato-warning-strait-of-hormuz-iran-war-oil-prices-11216809