திங்கள், 23 மார்ச், 2026

அமெரிக்க ராணுவ முகாம கழுத்தை பிடிச்சு வெளியே தள்ளற வேலையை பாருங்க.

 இரண்டு வருடத்திற்கு முன்பு தான் 26 பில்லியன் டாலரில் இந்த புதிய கத்தார் எரிவாயு மையத்தை அமைத்தோம். ஈரானின் தாக்குதலால் எங்களுக்கு 20 பில்லியன் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என கத்தார் கேஸ் தலைவரும், கத்தார் அமைச்சருமான அல்-காபி கூறியுள்ளார்.

அதெல்லாம் சரி ஷேக்கு புரியுது. அமெரிக்காகாரன் பெட்ரோல் கேஸ் வெச்சு வியாபாரம் மட்டும் பண்ணா ஒரு பிரச்சனை இல்லை. ஆனா உங்க ஒவ்வொரு நாட்டுலயும் ராணுவ முகாமை அமைச்சு, ஊர்ல இருக்கறவனை எல்லாம் அடிக்கறதும், அழிக்கறதுமா
நாட்டாமை பண்ணிட்டு
இருந்தா அது எப்படி சரியாகும்?
நீங்க அவனுக்கு ராணுவ முகாம் போட இடத்தை கொடுத்துக்கிட்டு, அவன் உங்க எண்ணெய், எரிவாயு எல்லாம் வெச்சு உலகத்தையே நாட்டாமை செய்யும் போது, அதை கண்டுக்காம கோடிக் கோடியா சம்பாதிச்சு சொகுசு வாழ்க்கை வாழ்ந்தீங்க. உங்க பக்கத்து நாடு ஈரான் மேல அமெரிக்கா கை வைக்கும் போதே நீங்க உஷாராகி, கறாரா பேசி நிறுத்தி இருக்கனும். ஆனா கல்லால காசு வந்தா போதும் எவன் எக்கேடு கெட்டு போனா எனக்கென்னனு இருந்தா இப்படித்தான்.
ஆனா ஷேக்குமாருங்களா ஒன்னு புரிஞ்சுக்கங்க. ஈரான்காரன் ரொம்ப நல்லவன். அவன் மட்டும் உங்க ஒவ்வொரு நாட்டுல இருக்கற கடல்நீரை குடிநீராக்குற திட்டத்தை அழிக்க ஆரம்பிச்சான், மொத்தமா நீங்க எல்லாரும் நாட்ட விட்டே கிளம்ப வேண்டியதுதான்.
இனியாவது எல்லா நாட்டு ஷேக்கும் ஒன்னு சேர்ந்து, அமெரிக்க ராணுவ முகாம கழுத்தை பிடிச்சு வெளியே தள்ளற வேலையை பாருங்க.
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

21 3 2026
source fb page / Prakash P