10 7 2026
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ம் தேதி கரூரில் நடைபெற்ற த.வெ.க. பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தார்கள். இது தொடர்பாக, சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வரும் நிலையில், உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.10 லட்சமும், த.வெ.க. சார்பில் தலா ரூ.20 லட்சமும் இழப்பீடு வழங்கப்பட்டது.
இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த 32 பேருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்குவதற்காக முதலமைச்சர் இன்று கரூர் வந்தார். இதற்கிடையே, உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கக்கூடாது என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையும் இன்று நடைபெற்றது. அவர்களுக்கு தற்காலிக பணி வழங்கலாம் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-cm-vijay-karur-visit-live-update-in-tamil-12150331





