சனி, 11 ஜூலை, 2026

புதுச்சேரி ஏனாம் கோதாவரி ஆற்றில் இறந்து மிதந்த மீன்கள்; காரணம்?

 

godavari fish

புதுச்சேரி ஏனாம் பகுதி கோதாவரி ஆற்றில் லட்சக்கணக்கான கானகார்த்தி மீன்கள் இறந்து மிதக்கின்றன. ஜே.சி.பி மூலம் அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இறந்த மீன்களை உரத்திற்கு பயன்படுத்த பொதுமக்கள் அள்ளிச் செல்கின்றனர்.

இன்று புதுச்சேரி ஏனாம் (Yanam) பகுதியிலுள்ள கௌதமி கோதாவரி ஆற்றில், உப்பு நீரில் வாழும் 'கனகார்த்தி' (Kanagarthi) வகை மீன்கள் லட்சக்கணக்கில் உயிரிழந்தன. வங்காள விரிகுடாவிலிருந்து கோதாவரி ஆற்றுக்கு இந்த வகை மீன்கள் வருகின்றன. கோதாவரி ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால் ஆற்றில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்படவுள்ளது.

ஏனாம் பகுதியிலிருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ள டவ்லேஸ்வரம் (Dowleswaram) அணையிலிருந்து, வியாழக்கிழமை இரவு 10 மணிக்கு மேல் ஒரு லட்சம் கியூசெக்குகளுக்கும் அதிகமான நீர் வங்காள விரிகுடாவில் திறந்துவிடப்பட்டது. தண்ணீர் வெளியேற்றப்பட்டதால், வெள்ளிக்கிழமை இன்று காலை முதல் ஏனாம் பகுதியில் நீரின் உப்புத்தன்மையில் மாற்றம் ஏற்பட்டது.

இதன் விளைவாக ஆற்றங்கரையில் கனகார்த்தி மீன்கள் உயிரிழக்கத் தொடங்கின. உயிரிழந்த மீன்கள் ஆற்றங்கரையோரம் மிதந்து வருகின்றன. இதனால் அப்பகுதியில் ஐந்து கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் துர்நாற்றம் வீசுகிறது. சில மீனவர்கள், மற்ற வகை மீன் வளர்ப்பிற்கான உணவாகப் பயன்படுத்துவதற்காக இந்த இறந்த மீன்களைச் சேகரிக்கின்றனர். ஜே.சி.பி மூலம் அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இறந்த மீன்களை உரத்திற்கு பயன்படுத்த பொதுமக்கள் அள்ளிச் செல்கின்றனர்.

கடல் மீன்கள் ஆற்றுக்கு வரும்போது, நீரின் தன்மையில் ஏற்படும் மாற்றங்களால் அவை உயிரிழக்க நேரிடும் என்று ஏனாம் மீன்வளத் துறை உதவி இயக்குநர் டடலா கோண்டய்யா (Dadala Gonteyya) தெரிவித்தார். 

இதற்கு நீரின் உப்புத்தன்மை மாற்றமே முக்கிய காரணமாகும். கடந்த ஆண்டும் வெள்ளப்பெருக்குக் காலத்திற்கு முன்னதாக இதே போன்றதொரு நிகழ்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

பாபு ராஜேந்திரன் புதுச்சேரி

source https://tamil.indianexpress.com/india/puducherry-yanam-godavari-river-lakhs-of-fishes-died-photos-12152431