/indian-express-tamil/media/media_files/2026/02/22/odisha-2026-02-22-09-22-49.jpg)
ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தில் 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் தனியார் பள்ளியின் நான்கு ஆசிரியர்கள் மற்றும் ஒரு பியூனை போலீசார் நேற்று (பிப்.22) கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
22 2 2026
பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் தனக்கு நேர்த்த கொடுமை குறித்து தெரிவித்ததையடுத்து இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் கடந்த 18-ஆம் தேதி இச்சம்பவம் தொடர்பாக குழந்தைகள் நலக் குழுவில் புகார் அளித்தனர். இதையடுத்து, குறிப்பிட்ட பள்ளிக்கு சென்று விசாரணை மேற்கொண்ட அக்குழுவினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்கு மூலத்தை அடிப்படையாக கொண்டு பள்ளியின் ஆசிரியர்கள் உட்பட 5 பேரை கைது செய்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கேந்திரபாரா எஸ்.பி சித்தார்த் கட்டாரியா தெரிவித்துள்ளார். குற்றச்சாட்டின்படி, சிறுமி ஒரு வருட காலத்திற்கும் மேலாக அவரது ஆசிரியர்களால் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், அவர்கள் இந்த விஷயத்தை பற்றி யாரிடம் சொல்லக் கூடாது என சிறுமியை மிரட்டியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து தெரிந்தும் பள்ளியின் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று புகாரில் பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால், குழந்தைகள் நலக் குழுவில் புகாரளித்த பின்பு தான் தங்களுக்கு இச்சம்பவம் குறித்து தெரிய வந்ததாக பள்ளியின் முதல்வர் கூறியுள்ளார். மேலும், விரிவான விசாரணைக்கு பிறகே உண்மை தெரிய வரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
source https://tamil.indianexpress.com/india/odisha-minor-girl-rape-case-school-teacher-arrested-11143978





