/indian-express-tamil/media/media_files/2025/03/28/Cb5K6eCGgZMsuG6ILgHW.jpg)
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவுற்றது. கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி 2026-2027 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதுடன் தொடங்கிய இக்கூட்டத்தொடர், இன்று சபாநாயகர் அப்பாவு தலைமையில் இறுதி நாளை எட்டியது. கடந்த இரண்டு நாட்களாக (பிப்ரவரி 18 மற்றும் 19) இடைக்கால பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்றன. விவாதங்களின் முடிவில், இன்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு விரிவான பதிலுரை வழங்கினர்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-assembly-budget-live-updates-in-tamil-11135646





