சனி, 14 பிப்ரவரி, 2026

தமிழ்நாடு அரசு நடத்தும் டெட் தேர்வு... பிப்.18 முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

 

tet

தமிழ்நாடு அரசு நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்பத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பாடம் எடுக்கக் கூடிய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு வரும் 18-ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணபிக்கலாம் என்று தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 10-ஆம் தேதி விண்ணப்பம் சமர்பிக்க கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தற்காலிகமாக தேர்வு தேதியும் கொடுக்கப்பட்டுள்ளது. ஜூலை 4-ம் தேதி ஆசிரியர் தகுதி தேர்வுக்கான  முதல் தாள் மற்றும்  5-ம் தேதி  இரண்டாம் தாள் தேர்வு நடைபெறும் என்று தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த தேதி மாற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது.  தேர்விற்கான விண்ணப்ப கட்டணம் உள்ளிட்ட தகவல்களை தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வமான இணைய தளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்றும் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/teacher-eligibility-test-announcement-read-full-story-11104185