ஞாயிறு, 22 பிப்ரவரி, 2026

தலையில் துண்டைப் போட்ட பிரான்ஸ்!

 


raffale

கடந்த 2022-ஆம் ஆண்டு கொலம்பியா தனது பழைய போர் விமானப்படையை மாற்றுவதற்கு முடிவு செய்த போது தசால்ட் ரபேல் ( Dassault Rafale ) முன்னணி தேர்வுகளின் ஒன்றாக இருந்தது. மேலும், பாரிஸ், தென் அமெரிக்காவின் முக்கிய நாடான கொலம்பியாவுடன் ஒரு மூலோபாய ஆயுத ஒப்பந்தத்தை இறுதிப்படுத்த உள்ளதாகவும் கூறப்பட்டது.

தசால்ட் ஏவியேஷன் தயாரித்த ரஃபேல் விமானத்தின் விலை சுமார் €2.96 பில்லியன் என தகவல் வெளியாகின. ஆனால் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, கொலம்பியா அதிபர் அலுவலகம் வேறு பாதையைத் தேர்வு செய்தது. அதன்படி, அதிக செலவுமிக்க சாப் நிறுவனத்தின் Saab JAS 39 Gripen போர் ஜெட்டை வாங்க முடிவு செய்தது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் கொலம்பியாவில் 40 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட போர் விமானங்கள் மாற்றப்பட உள்ளதாக தெரிகிறது. 

செயல் திறன்

செயல்திறன் அளவில் பார்த்தால் தசால்ட் ரஃபேல் மற்றும் Saab JAS 39 Gripen இரண்டும் ஒரே தரத்தில் உள்ள போர் விமானங்கள்ட் தான். இரண்டும் வான்  தாக்குதல், தரை இலக்குகள் மீது தாக்குதல் மற்றும் ரகசியத் தகவல் சேகரிப்பு போன்ற பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் திறன் கொண்டவை. இருந்தாலும், ஏன் கொலம்பியா Saab JAS 39 Gripen-யை தேர்வு செய்தது என்ற கேள்வி எழும்.

ஏன் ஸ்வீடன் ஜெட்டைத் தேர்வு செய்தது?

இதற்கான காரணங்கள் வெறும் செயல்திறனை மட்டுமே சார்ந்தவை அல்ல. பொதுவாக இத்தகைய முடிவுகளில் பின்வரும் அம்சங்கள் முக்கியமாக கருதப்படுகின்றன.

  • நீண்டகால பராமரிப்பு மற்றும் இயக்க செலவு
  • தொழில்நுட்ப பரிமாற்றம் 
  • நிதி வசதிகள் அல்லது கட்டண அமைப்பு
  • அரசியல் மற்றும் தூதரக உறவுகள்
  • வழங்கப்படும் ஆயுத அமைப்புகளின் ஒருங்கிணைப்பு சுதந்திரம்

பல நேரங்களில், இறுதி தேர்வு என்பது “எந்த விமானம் சிறந்தது?” என்ற கேள்வியை விட, “எந்த ஒப்பந்தம் நாட்டின் நீண்டகால நலனுக்கு பொருத்தமானது?” என்ற கேள்விக்கான பதிலாக இருக்கும். Saab பொதுவாக வலுவான தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் உள்ளூர் தொழில்துறை பங்கேற்பை முன்வைக்கும் நிறுவனம். அதாவது, கூட்டாண்மை நாடுகள் தங்கள் நாட்டிலேயே விமானங்களை ஒன்றுசேர்க்க அல்லது பராமரிக்க வாய்ப்பு பெறலாம்.

கொலம்பியா ஸ்வீடனைத் தேர்வு செய்வது பாதுகாப்பு தொடர்புகளை அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் போன்ற பாரம்பரிய வழங்குநர்களைத் தாண்டி விரிவுபடுத்த உதவலாம். கொலம்பியா அதிகாரிகள் முழுமையான காரணங்களை வெளிப்படையாக விளக்கவில்லை. 2021-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா பெரும் நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்தை ரத்து செய்தபோது பிரான்ஸ் ஏற்கனவே மிகப் பெரிய பின்னடைவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

source https://tamil.indianexpress.com/international/france-lose-3-2-billion-fighter-jet-deal-after-last-minute-u-turn-11144607