புதன், 18 பிப்ரவரி, 2026

மைக்கேல்பட்டி பள்ளி மாணவி லாவண்யா வழக்கு: மதமாற்ற முயற்சி காரணம் அல்ல- சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ தகவல்

 

tanjavur vase

மைக்கேல்பட்டி பள்ளி மாணவி லாவண்யா வழக்கு: மதமாற்ற முயற்சி காரணம் அல்ல- சுப்ரீம் கோர்ட்டி சி.பி.ஐ அறிக்கை தாக்கல்

தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டி பள்ளி மாணவி லாவண்யா மரணம் தொடர்பான வழக்கில், சி.பி.ஐ தனது நிலை அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. மாணவி லாவண்யா பேசிய எந்தவொரு காணொலியிலும், எந்த நேரத்திலும் மதமாற்றம் குறித்து அவர் எதுவும் கூறவில்லை என்பது சி.பி.ஐ விசாரணையில் உறுதியாகியுள்ளது. அந்தப் பள்ளியில் கிறித்தவ மதமாற்றம் நடக்கிறதா என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டது. தற்கொலைக்கு மதமாற்ற முயற்சி காரணம் அல்ல என்று சி.பி.ஐ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

17 2 2026

மாணவி தனது வீடியோவில், கன்னியாஸ்திரி சகாயமேரி அளித்த துன்புறுத்தல் மற்றும் அதனால் தனது படிப்பு பாதிக்கப்பட்டது குறித்தே பேசியுள்ளார். வி.ஹெச்.பி (VHP) நிர்வாகி முத்துவேல் மற்றும் சில பா.ஜ.க தலைவர்களின் அழுத்தம் காரணமாக, தொடக்கத்தில் மாணவியின் உடலை பெற பெற்றோர் மறுத்தனர் என்பது அம்பலமாகியுள்ளது. இதற்காக மாணவியின் பெற்றோர் சில காலம் தலைமறைவாகவே இருந்ததாகவும் சி.பி.ஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியின் அடையாளத்தை மறைக்காமல் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட முத்துவேல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2022-ம் ஆண்டு 12-ம் வகுப்பு பயின்று வந்த லாவண்யா தற்கொலை செய்து கொண்டபோது, அது கட்டாய மதமாற்றத்தால் நிகழ்ந்தது என பா.ஜ.க மற்றும் வி.ஹெச்.பி நிர்வாகிகள் குற்றம் சாட்டினர். குறிப்பாக, அப்போதைய பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர்  புகார்கள் முன்வைத்தனர். இந்த அறிக்கை, உயர்நீதிமன்ற கிளை உத்தரவின்பேரில் சி.பி.ஐ மேற்கொண்ட தீவிர விசாரணையின் முடிவில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நீண்ட நாட்களாக நீடித்து வந்த மதமாற்றக் குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/lavanya-case-cbi-sensational-report-supreme-court-of-india-ariyalur-student-additional-details-11124108