சனி, 14 பிப்ரவரி, 2026

கூட்டத்தில் ஒருவர் பலி

 13 2 2026 

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள கேவிபி கார்டன் (KVB Garden) உள் வளாகத்தில் நடைபெறும் பிரம்மாண்ட நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
    
சேலம் மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களான நாமக்கல், ஈரோடு, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் இந்தச் சந்திப்பில் கலந்து கொள்கின்றனர். கூட்டத்தில் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்கவும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும் காவல்துறை விதித்துள்ள 51 நிபந்தனைகளை கட்சி நிர்வாகம் மிகக் கடுமையாகப் பின்பற்றி வருகிறது.

சுமார் 1,000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 10 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் மருத்துவக் குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tvk-vijay-salem-meeting-live-vijay-election-campaign-salem-2026-vijay-tvk-salem-event-updates-11102101